5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Seempaal: 10 நிமிடத்தில் சுவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பால் ஸ்வீட்..

சீம்பால் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த பால் பொருளாக உள்ளது. அழகான வெள்ளை கலரில் கண்ணை பறிக்கும் அளவிற்கு இருக்கும் சீம்பாலை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். தாய் பாலுக்கு நிகரான சீம்பாலில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுவதால், சத்தான பொருளாக உள்ளது. சீம்பால் செய்வதற்கு பெரிதாக பொருட்கள் தேவைப்படாத நிலையில், அனைவரும் எளிதில் செய்யக்கூடிய பொருளாக உள்ளது. சீம்பாலில் செய்முறை குறித்தும், அதில் உள்ள சத்துகள் குறித்தும் காணலாம்.

Seempaal: 10 நிமிடத்தில் சுவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பால் ஸ்வீட்..
சீம்பால்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 25 Jul 2024 16:03 PM

கிராமங்களில் பொதுவாக சீம்பால், அனைவருக்கும் சுலபமாக கிடைக்கும். பசு கன்றை பிரசவித்த அடுத்த ஒரு வாரத்திற்கு வெளிவரும் பால் சீம்பால் என்று கூறப்படுகிறது. அந்த பாலில் ஏராளமான நன்மைகள் காணப்படுகின்றன. இந்த பாலை நன்றாக சுண்டக்காய்ச்சி அதிலிருந்து வரும் பால்கோவா போன்ற சுவையுடைய சீம்பாலை இனிப்பு சுவை சேர்த்து சாப்பிடுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த பாலில் சர்க்கரை, ஏலக்காய், சுக்கு சேர்த்து சாப்பிடும் பொழுது, அதன் சுவைக்கு எதுவும் ஈடு இல்லை. பசு கன்று ஈன்ற நான்கு நான்களுக்கு மட்டுமே இந்த பால் கிடைக்கும் என்பதால், அனைவரும் போட்டி, போட்டு சாப்பிடுவர். ஆனால், சென்னை போன்ற நகரங்களில் கிடைக்கும் சீம்பால் பால் பவுடர்களை கொண்டே தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் உடல் நலனிற்கு தீங்கு விளைவிக்கும் பொருளாகவே உள்ளது.

Also Read: Good Cholesterol Foods: நல்ல கொழுப்பு உடலுக்கு ஆரோக்கியம்.. HDL அளவை அதிகரிக்கும் உணவுகள்..!

பால் ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதுவும் குறிப்பாக பால்கோவா என்றால் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட்டாக உள்ளது. சீம்பால் செய்வதற்கான செய்முறை குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • சீம்பால் – 1 லிட்டர்
  • சர்க்கரை – 350 கிராம்
  • ஏலக்காய் – 2
  • சுக்கு – தேவையான அளவு

சீம்பால் செய்முறை:

முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் சீம்பாலை சேர்த்து, சர்க்கரை மற்றும் ஏலக்காயை லேசாக நசுக்கி சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சர்க்கரை கரையும் வரை மிதமான தீயில் சூடேற்றிக் கொள்ளவும். எடுத்துவைத்துள்ள சீம்பாலை தண்ணீர் ஊற்றாமல் நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். நன்றாக காய்ச்சிய பாலில் இருந்து திரியாக திரியாக வந்த சீம்பாலை பாகுடன் கொட்டி நன்றாக கிளறவும். சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சூடு ஆறியவுடன் பரிமாறலாம். இதை வீட்டில் செய்து பாருங்கள். ரொம்பவே குறைந்த நேரத்தில் நாவில் கரையும் சீம்பால் செய்து விடலாம்.

Also Read: Cooking Tips: தோசை கல்லில் தோசை ஒட்டுதா..? கவலை வேண்டாம்! இதை ட்ரை பண்ணுங்க!

சீம்பாலில் வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. சீம்பாலில் குழந்தைகளுக்கு தருவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நுரையீரல், தொண்டை, குடல்களின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. மஞ்சள் காமலை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. முகப்பொலிவை அதிகரித்து சரும பாதுக்காப்பை அதிகரிக்கிறது.

Latest News