Food Recipes: புரட்டாசி சனிக்கிழமை விரதமா..? இந்த முறையில் பாயாசம் செய்து விரதம் விடுங்க! - Tamil News | Semiya Paal Payasam recipe; sweet payasam food recipe in tamil | TV9 Tamil

Food Recipes: புரட்டாசி சனிக்கிழமை விரதமா..? இந்த முறையில் பாயாசம் செய்து விரதம் விடுங்க!

Published: 

28 Sep 2024 11:33 AM

Payasam Recipe: இன்று புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் பெருமாள் சாமியை கும்பிடும் பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து மதியம் அல்லது மாலை வேளையில் நல்ல விருந்துடன் விரதம் விடுவார்கள். அப்படி விரதம் விடும்போது கடைசியாக அவர்கள் சுவைமிக்க பாயாசயத்தை எடுத்துக்கொள்வார்கள். அந்தவகையில், இன்று புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் விடுவதற்கு ஏற்றவாறு வரகரிசி பாயாசம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Food Recipes: புரட்டாசி சனிக்கிழமை விரதமா..? இந்த முறையில் பாயாசம் செய்து விரதம் விடுங்க!

பாயாசம் (Image: Freepik)

Follow Us On

பாயாசம் ஒரு பிரபலமான தென்னிந்திய உணவாகும். இது இப்போது தென்னிந்தியாவில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக, தென்னிந்தியாவில் இந்த பாயாசம் ஏதேனும் விசேஷ நாட்களில், விருந்தின்போது, விரத நாட்களில் கடவுளுக்கு படைத்து வழிபாடுவார்கள். அதன்பின், தனது குடும்பத்தாருக்கு பரிமாறிய பெண்கள், பாயாசம் சாப்பிட்டு தங்கள் விரதத்தை விடுவார்கள். இன்று புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் பெருமாள் சாமியை கும்பிடும் பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து மதியம் அல்லது மாலை வேளையில் நல்ல விருந்துடன் விரதம் விடுவார்கள். அப்படி விரதம் விடும்போது கடைசியாக அவர்கள் சுவைமிக்க பாயாசயத்தை எடுத்துக்கொள்வார்கள். அந்தவகையில், இன்று புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் விடுவதற்கு ஏற்றவாறு வரகரிசி பாயாசம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

பாயாசம் எப்பொழுதெல்லாம் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் வீட்டிலேயே மிக எளிதாக செய்துவிடக்கூடிய ஒரு இனிப்பு உணவாகும். பலரது வீட்டில் இந்த பாயாசம் அவ்வப்போது செய்து அதன் சுவையை அனுபவிப்பார்கள். பாயாசத்தில் வரகரிசி பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் என பல வகை உண்டு.

ALSO READ: Food Recipes: சுவைமிக்க தேங்காய் பால் ரசம் செய்ய ஆசையா..? உங்களுக்கான ரெசிபி இதோ..!

வரகரிசி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

1 கப் – தேங்காய் பால்
1/2 கப் வரகரிசி
இடித்த வெல்லம் – அரை கப்
10 பாதாம்
10 முந்திரி
10 திராட்சை
2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
நெய் – அரை டீஸ்பூன்

வரகரிசி பாயாசம் செய்யும் முறை:

  • முதலில் வரகரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி, அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் இடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும். வெல்லம் நன்றாக கரைந்து வெல்லப்பாகு தயாராகும்.
  • அதை தொடர்ந்து, அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவி பாசிப்பருப்பை வெறுமனே வறுத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு குக்கரில் ஊறவைத்த வரகரிசி, வறுத்த பாசிப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
  • அரிசி மற்றும் நன்றாக வெந்ததும் அதனை நன்கு மசித்துவிட்டு, ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த வெல்லப்பாகு சேர்த்து கொதிக்க வையுங்கள்.
  • பிறகு தேங்காய் பாலை சேர்த்து, கலவை கொதிநிலைக்கு வரும் முன்பு இறக்கி விடுங்கள்.
  • இறுதியாக நெய்யில் ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக வதக்கி தயார் செய்து வைத்த பாயாசத்தில் கலக்கவும். இப்போது, சுவையான வரகரிசி பாயாசம் ரெடி

சேமியா பால் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி – சிறிதளவு
திராட்சை – சிறிதளவு
சேமியா – 1 கப்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 1 கப்
மில்க் மெய்ட் – 200 மிலி
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

ALSO READ: Food Recipes: சுவையான ரசமலாய் செய்ய ரெடியா..? பேமிலிக்கு இது கண்டிப்பா பிடிக்கும்!

சேமியா பால் பாயாசம் செய்யும் முறை:

  • முதலில் ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி போட்டு சிறிதளவு வதக்கி கொள்ளவும். முந்திரி நன்றாக பொன்னிறமானவுடன் அதில், உலர் திராட்சை போட்டு வதக்கி தனியாக இரண்டையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அதே கடாயில் தீயை மிதமான சூட்டில் வைத்து அதில் ஒரு கப் சேமியா வைத்து நன்றாக வதக்கி எடுத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு லிட்டர் பாலை பால் பாத்திரத்தில் ஊற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக சுண்டும் வரை காய்ச்சவும்.
  • பால் நன்றாக வெள்ளை நிறத்தில் இருந்து ப்ரவுன் கலர் வந்தவுடன், அதில் வறுத்து வைத்த சேமியாவை சேர்த்து நன்றாக தொடர்ந்து கலக்கவும்.
  • இரண்டும் நன்றாக கலந்தபின் ஒரு கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் மீண்டும் நன்றாக கலக்கி கொள்ளவும்.
  • பால் மற்றும் சேமியா நன்றாக ஒன்று சேர்ந்தபின் மில்க் மெய்ட் 200 மிலி-ஐ சிறிது சிறிதாக அடி பிடிக்காத அளவிற்கு மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
  • அதன்பின் சிறிதளவு நெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடியை சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  • நன்றாக கலர் மாறியபின் ஒரு பாத்திரத்தில் பாயாசத்தை மாற்றி கொள்ளவும். பின், ஏற்கனவே வறுத்து வைத்திருந்த முந்திரி மற்றும் திராட்சையை அதன் மேல் வைத்தால் சுவையான சேமியா பால் பாயாசம் ரெடி.

 

நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
அழகியே... மிருணாள் தாகூரின் அசத்தல் ஆல்பம்
இணையத்தை கலக்கும் டாப்ஸி பன்னுவின் லேட்டஸ்ட் ஆல்பம்
நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் நியூ ஆல்பம்
Exit mobile version