கருப்புதான் சத்து.. ஆரோக்கிய பலன்கள் கொட்டிக்கிடக்கும் உணவுகள் பட்டியல்!

Healthy Food: நம்மைச் சுற்றி எண்ணில் அடங்காத கருப்பு நிற உணவுகள் இருக்கிறது. கருப்பு உணவுகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் உணவில் கருப்பு உணவுகளில் சேர்ப்பதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கருப்புதான் சத்து.. ஆரோக்கிய பலன்கள் கொட்டிக்கிடக்கும் உணவுகள் பட்டியல்!

கோப்புப் படம் (Photo Credit: Freepik)

Published: 

04 Dec 2024 08:52 AM

கருப்பு நிற உணவுகள் அல்லது அடர்த்தியான நிறம் கொண்ட உணவுகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. கருப்பு உணவுகளில் வைட்டமின் ஈ, இரும்புச் சத்து, கால்சியம், தாமிரம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உங்கள் தினசரி உணவில் கருப்பு நிற உணவுகளை சேர்ப்பதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். இந்த அடர்நிற உணவுகளில் அதிகம் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இது புற்றுநோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் பயத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

கருப்பு அரிசி:

நமது பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான இந்த கருப்பு கவுனி அரிசி அதிக சத்துக்களை கொண்டுள்ளது. கருப்பு அரிசி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதிக நார்ச்சத்து உள்ள அரிசி, சர்க்கரை நோய் உட்பட பல நோய்களை குணப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. இதில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளது.

இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கக்கூடியது. புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளும் அதிகம். குறிப்பாக கருப்பு கவுனி அரிசி உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையையும் தேவையற்ற கொழுப்பையும் குறைக்க உதவி செய்கிறது.

கருப்பட்டி:

கருப்பட்டியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பட்டியில் வைட்டமின் சி, கே மற்றும் மாங்கனீசும் நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகவும் இவை அறியப்படுகின்றன.

Also Read: Weight Loss Tips: உணவுக்கு முன் தண்ணீர்.. உடல் எடையை குறைக்க முடியுமா?

கருப்பு ஆலிவ்கள்:

கருப்பு ஆலிவ் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்கு அறியப்படுகிறது. அவை வைட்டமின் ஈ, இரும்பு, கால்சியம், தாமிரம் மற்றும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களிலும் நிறைந்துள்ளன. கருப்பு ஆலிவ்களில் உள்ள வைட்டமின் ஈ சருமத்திற்கு ஊட்டமளித்து, முன்கூட்டிய முதுமையைத் தடுக்கிறது.

கருப்பு காளான்:

ஷிடேக் மற்றும் ட்ரம்பெட் (கிங் சிப்பி காளான்) வகை காளான்களில் அதிக புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள், தாமிரம், செலினியம் மற்றும் துத்தநாகம் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

சப்ஜா விதைகள்:

சப்ஜா விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதங்கள் அனைத்தும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஃபைபர் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் பசியைக் குறைக்கிறது.

கருப்பு எள்:

கருப்பு எள்ளில் நார்ச்சத்துக்கள் புரதச்சத்துக்கள் மெக்னீசியம் பொட்டாசியம் இரும்புச்சத்து கால்சியம் துத்தநாகம் தாமிரம் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன இவை உடல் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. குறிப்பாக மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவற்றை தீர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.கருப்பு விதைகள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும், கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது.

கருப்பு குயினோவா:

கருப்பு குயினோவா தசையை வளர்ப்பதற்கும் ஒட்டுமொத்த உடற்தகுதிக்கும் சிறந்தது. அவற்றில் அத்தியாவசிய புரதம் மற்றும் அமினோ அமிலங்களும் உள்ளன.

கருப்பு பூண்டு:

கருப்பு பூண்டு, பொதுவான பூண்டின் மற்றொரு வடிவம், கடுமையான மற்றும் இனிமையான சுவை கொண்டது. நொதித்தல் செயல்பாட்டின் போது பூண்டில் ஏற்படும் மாற்றங்கள் அதன் ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்கின்றன. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கும் சேர்மங்களைக் கொண்டுள்ளது.

கருப்பு சோயாபீன்ஸ்:

கருப்பு சோயாபீன்களில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை மலச்சிக்கலை போக்க உதவுகிறது. பீன்ஸில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் நீரிழிவு மற்றும் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

Also Read: Estrogen Hormone: ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் ஈஸ்ட்ரோஜன்.. இவ்வளவு பிரச்சனையை தருமா?

கருப்பு திராட்சை:

கருப்பு நிற திராட்சை கண்களின் விழித்திரை சேதத்தை தடுக்க உதவுகிறது. மேலும் இது புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதில் உள்ள தனிமங்கள் சரும பாதுகாப்பிற்கு உதவுகிறது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?