5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்குவது நல்லதா? இந்த பிரச்சனைகள் வரலாம்!

Sleep: அதிகாலையில் போர்வையை மூடிகொண்டு தூங்கும் சுகத்திற்கு வேறு எதுவும் இல்லை. குளிர்ச்சியிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள போர்வை முழுவதும் மூடிகொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் இறுக்கமாக முகத்தை மூடிக்கொண்டு தூங்கும்போது நுரையீரலை பாதிக்க செய்யும்.

Health Tips: போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்குவது நல்லதா? இந்த பிரச்சனைகள் வரலாம்!
தூக்கம் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 22 Nov 2024 15:38 PM

மழை மற்றும் குளிர்காலத்தில் வீட்டிற்குள் கடுமையான குளிர்ச்சி நிலவும். இதன் காரணமாக, இரவு நேரத்தில் தலை முதல் பாதம் வரை போர்வையால் மூடி கொண்டு தூங்குவோம். இது இரவு நேரம் முழுவதும் நீடித்தாலும், அதிகாலையில் போர்வையை மூடிகொண்டு தூங்கும் சுகத்திற்கு வேறு எதுவும் இல்லை. ஆனால், இப்படி முழுவதுமாக மூடிகொண்டு தூங்குவது பிரச்சனையை உண்டாக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்ச்சியிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள போர்வை முழுவதும் மூடிகொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அந்தவகையில், போர்வை கீழ் முகத்தை மூடிக்கொண்டு தூங்குவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Chapped Lips: பருவ மாற்றத்தால் உதடுகளில் வெடிப்பா..? சரிசெய்ய எளிய குறிப்புகள் இதோ!

சருமம்:

மழை மற்றும் குளிர்காலத்தில், உங்கள் முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு தூங்கும்போது, தூய ஆக்ஸிஜன் உள்ளே வர முடியாது. அதேநேரத்தில் நீங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடும் வெளியேற முடியாது. இதனால், போர்வைக்குள் இருக்கும் ஆக்ஸிஹன் தூய்மையற்றதாகி விடும். நீங்கள் தூய்மையற்ற காற்றை சுவாசிப்பது உங்கள் சருமத்தின் நிறம் மங்க தொடங்கும். இதை தினமும் செய்வதால் சருமத்தில் சுருக்கங்களும் ஏற்படும். அதேநேரத்தில், குளிர்ச்சியான சூழல் காரணமாக போர்வைக்குள் வாயை மூடிக்கொண்டு தூங்கும்போது, அந்த நபரின் உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. இதன் காரணமாக, முகத்தில் முகப்பருக்கள் பிரச்சனையும் ஏற்படலாம்.

போர்வைகள் தூசி, ஒவ்வாமை மற்றும் பாக்டீரியாக்களை குவிக்கும் ஒரு காரணியாகும். உங்கள் தலையை ஒரு போர்வையால் மூடி தூங்குவது சில பிரச்சனைகளை உண்டாக்கும். அதிலும், குறிப்பாக உங்களுக்கு ஒவ்வாமை அல்லது சுவாச பிரச்சனைகள் இருந்தால் இப்படி தூங்கும் முறை தவிர்ப்பது நல்லது.

நுரையீரல்:

நீங்கள் இறுக்கமாக முகத்தை மூடிக்கொண்டு தூங்கும்போது நுரையீரலை பாதிக்க செய்யும். அதாவது, போர்வைக்குள் நன்றாக உறங்கும்போது, நுரையீரலுக்கு காற்று இயக்கம் சரியாக செயல்படாது. இதன் காரணமாக, நுரையீரல் சுருங்க தொடங்கும். இது ஆஸ்துமா, டிமென்ஷியா மற்றும் தலைவலி போன்ற பிரச்சனையை உண்டாக்கலாம். அதேநேரத்தில், ஏற்கனவே ஆஸ்துமா போஒனேஅ பிரச்சனை உள்ளவர்கள், தவறுதலாக கூட போர்வையை இறுக்கமாக மூடிக்கொண்டு தூங்காதீர்கள்.

போர்வை தடிமனாகவோ அல்லது கனமாகவோ இருந்து தலையை முழுவதுமாக மூடி தூங்கும்போது ஈசியாக சுவாசிக்க கடினமாக இருக்கும். அசௌகரியத்தைத் தவிர்க்க போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

மாரடைப்பு:

போர்வையை இறுக்கமாக மூடிக்கொண்டு தூங்குபவர்களுக்கு மாடரைப்பு அபாயம் அதிகரிக்கும். அதாவது போர்வைக்குள் முகத்தை மூடிக்கொண்டு தூங்கும்போது, உடலுக்கு சரியான ஆக்ஸிஜன் கிடைக்காது. இது இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், மாரடைப்புடன் மூச்சுத்திணறல் ஏற்படும் ஆபத்தும் அதிகம். இது தவிர, காற்று புகாத சூழ்நிலையில் தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

இரத்த ஓட்டம்:

ஒரு நபர் போர்வையால் முழுவதும் போர்த்திகொண்டு தூங்கும்போது, போதுமான அளவு ஆக்ஸியன் உள்ளே சென்றடையாது. இதன் காரணாக, உடல் உள்ளே இருக்கும் ஆக்ஸிஜனை மீண்டும் மீண்டும் பயன்படுத்த தொடங்கும். ஆக்ஸிஜன் அளவு குறைய தொடங்கும்போது, அது இரத்த ஓட்டத்தில் தாக்கத்தை கொடுக்கும். இதன் காரணமாக, உடலில் ஒவ்வொரு பகுதியிலும் சரியான அளவில் இரத்த ஓட்டம் நடைபெறாது.

ALSO READ: Health Tips: நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது முழங்கால்களை பாதிக்குமா..? இது உண்மையா..?

எடை அதிகரிக்கும்:

போர்வைக்குள் முகத்தை மூடிக்கொண்டு தூங்கும்போது உடல் எடையில் மறைமுக விளைவு ஏற்படும். அதாவது, நன்றாக மூடி தூங்கும் நேரத்தில் உடலுக்கு வெப்பத்தை அலிக்கும். இதனால், அந்த நபர் நீண்ட தூக்கத்தை பெறுவார். நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோமோ, அவ்வளவு மெதுவாக நமது உடலில் மெட்டாபாலிசம் வேலை செய்யும். இதன் காரணமாக, உடல் எடை அதிகரிக்கும்.

முடிந்தவரை, இலகுவான போர்வையைப் பயன்படுத்துவது நல்லது. அறையின் வெப்பநிலையை சரிசெய்வது போன்ற ஏதாவது ஒன்றை கண்டறிவது உதவியாக இருக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News