AC Side Effects: ஏசி இல்லாமல் உங்கள் வாழ்க்கை இல்லையா? இந்த பிரச்சனைகள் வந்து சேரும்!
Air Conditioner: தூங்கும்போது ஏசி ஓடவில்லை என்றால், பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் சூழ்நிலைக்கு பழகிவிட்டார்கள். இப்படி நாம் பழகிகொள்வது நம் உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றன.
சமீபகாலமாக இந்தியாவில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. கோடை காலமாக இருந்தாலும் சரி, குளிர் காலமாக இருந்தாலும் சரி, இங்கு ஏசி இல்லாமல் பலர் தூங்கவது இல்லை. வெட்கைக்கு ஏசியை பயன்படுத்திய காலங்கள் கடந்து, ஏசியில் தூங்குவது என்பது கௌரவத்தில் அடையாளமாகவே மாறிவிட்டது. வீட்டில் இருந்தாலும் ஏசி, அலுவலகத்திலும் இருந்தாலும் ஏசி என்று ஏசியோடு நாம் வாழ பழகிவிட்டோம். இதுமட்டுமின்றி, தூங்கும்போது ஏசி ஓடவில்லை என்றால், பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் சூழ்நிலைக்கு பழகிவிட்டார்கள். இப்படி நாம் பழகிகொள்வது நம் உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றன. அந்தவகையில் ஏசி பயன்படுத்துவதால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Winter Season: குளிர்காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பது நல்லதா..? பக்கவிளைவுகளை தருமா..?
நுரையீரல் பாதிப்பு:
நாள்தோறும் அல்லது நீண்ட நேரம் ஏசியில் இருப்பதன் விளைவாக, இது சுவாசக் குழாயில் சளி பிடிக்க செய்யும். தொடர்ந்து, சளி பிரச்சனைகளால் இருமல் போன்றவை வர தொடங்கும். ஒருநாள் இரவு ஏசியில் தூங்கினாலே மறுநாள் காலையில் தொண்டை வறண்டு போகும், உடலில் அழுத்தம் ஏற்படும். அந்தவகையில், அதிக நேரம் ஏசியில் இருப்பது ஒருமல், மூச்சுத்திணறல் மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கி, நுரையீரல் பாதிப்பை நாளடைவில் உண்டாக்கும்.
கண்கள் வறட்சி:
பொதுவாகவே, குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று காரணமாக நம் கண்களில் வறட்சி ஏற்பட்டு, கண் சிவக்க தொடங்கும். அதேபோல், நீங்கள் ஏசியில் அதிக நேரம் இருக்கும்போது, அதிலிருந்து வெளிப்படும் காற்று, காற்றில் ஈரப்பதத்தை குறைக்கும். இது கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும். இதன் காரணமாக, இரவில் ஏசியில் தூங்குவது கண்களில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து கண் வறட்சியை உண்டாக்கும்.
ஒவ்வாமை:
குளிர்காலத்தில் மூச்சுத்திணறல் அல்லது கண்களில் நீர் வடிதல், முகம் வீக்கம், தொடர்ந்து தும்மல் போன்றவை குளிர் அலர்ஜி உண்டாகும். இதையே, ஒவ்வாமை பிரச்சனை என்று அழைக்கிறோம். தினமும் ஏசியை பயன்படுத்துவதன்மூலம், இந்த பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கும்.
ஒற்றை தலைவலி:
வானிலை மாறும்போது பொதுவாகவே தலைவலி, காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் ஏசியில் அதிக குளிர்ச்சியில் இருந்துவிட்டு, வெளியே வெயில் தாக்கம் உடனடியாக உங்களது உடலில் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கும். இது, உங்களுக்கு ஒற்றை தலைவலி பிரச்சனையையும் உண்டாக்கலாம். எனவே, அடிக்கடி ஒற்றை தலைவலி பிரச்சனையால் அவதிப்படுவர்கள் ஏசியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
ALSO READ: Agoraphobia: கூட்டத்திற்கு செல்ல பயமா..? தனிமை பிடிக்கிறதா..? இந்த பிரச்சனைதான் காரணம்!
சுவாச பிரச்சனைகள்:
ஏசியில் நீண்ட நேரம் இருப்பது சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். நாம் பயன்படுத்தும் ஏசியில் உள்ள பில்டர் சுத்தமாக இல்லாவிட்டால், தூசி மற்றும் அழுக்குகள் சேரும். இதில் இருந்து வெளிப்படும் காற்றை நாம் சுவாசிக்கும்போது சுவாச பாதையில் பாதித்து நுரையீரல் பிரச்சனைகளை உண்டாக்கும். இதன் காரணமாக, ஏசியை சரியாக சுத்தம் செய்வதும், குறைவாக பயன்படுத்துவதும் நல்லது.
உடல் பருமன் பிரச்சனை:
ஏசியை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் பருமன் அதிகரிக்க செய்யும் என்று கூறப்படுகிறது. ஏசியின் குளிர்ச்சியால் உடலில் குறைந்த வெப்பநிலை நிலவும். இதனால், நமது உடல் சுறுசுறுப்பாக இயங்குவதை தடுக்கும், அப்போது, உடலின் ஆற்றல் சரியான அளவில் பயன்படுத்தப்படாமல், உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால், உங்களது உடல் பருமன் அதிகரிக்க தொடங்கும்.
மூட்டு மற்றும் தசை வலி:
ஏசியை பயன்படுத்துவதன் மூலம் பலருக்கு மூட்டு வலி வர ஆரம்பிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், கை மற்றும் கால் குடைச்சல் உள்ளிட்ட தசை வலியும் உண்டாக்கும். இந்தப் பிரச்சனை தொடரும்போதும், எதிர்காலத்தில் எலும்பு தொடர்பான நோய்களையும் உண்டாக்கலாம். அந்தவகையில் தேவைக்கேற்ப ஏசியை பயன்படுத்துவதன்மூலம், உங்களது உடலை ஆரோக்கியமாக வைக்கலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)