Mayonnaise Side Effects: மயோனைஸ் லவ்வரா நீங்கள்..? இதயத்திற்கு இவ்வளவு ஆபத்தை தரும்..!
Mayonnaise: கேஎஃப்சி, பர்கர், பீட்சா மற்றும் தெருவோர கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65 வரை மயோனைஸ் இல்லாமல் மக்கள் சாப்பிட விரும்புவது கிடையாது. மயோனைஸ் என்பது எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, வினிகர், பூண்டு, உப்பு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கிரீம் வகையாகும்.
மயோனைஸ் என்பது உணவுப் பொருட்களின் சுவையை அதிகரிக்கும் ஒரு உணவு பொருளாகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். கேஎஃப்சி, பர்கர், பீட்சா மற்றும் தெருவோர கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65 வரை மயோனைஸ் இல்லாமல் மக்கள் சாப்பிட விரும்புவது கிடையாது. மயோனைஸ் என்பது எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, வினிகர், பூண்டு, உப்பு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கிரீம் வகையாகும்.
அப்படி, நாம் விரும்பி உண்ணும் இந்த உணவு நம் உடலுக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பதை பற்றி யாரும் யோசிப்பது கிடையாது. மயோனைசை அதிகமாக உட்கொள்வதால் ஒருவர் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ALSO READ: Daily Shaving: தினமும் ஷேவ் செய்வது நல்லதா..? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷேவ் செய்யலாம்?
மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
இரத்த சர்க்கரை அளவு:
உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள், மயோனைஸ் மற்றும் மயோனைஸால் செய்யப்பட்ட உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் மோமோஸ் மற்றும் பர்கர்கலில் உள்ள மயோனைஸால் செய்யப்பட்ட பொருட்களை அதிகளவில் சாப்பிடுகிறார்கள். இது அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். ஒவ்வொரு டீஸ்பூன் மயோனைஸிலும் சுமார் 1 கிராம் சர்க்கரை உள்ளது. இது, மேலும் உங்களுக்கு பிரச்சனையை தரலாம்.
எடை கூடும்:
இன்றைய காலத்தில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் பருமன் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம், மயோனைஸ் போன்ற உணவுகள்தான். குழந்தைகளுக்கு இந்த வகை உணவுகளே மிகவும் பிடிக்கும். அதேபோல், எந்த உணவு பொருளில் மயோனைஸை பயன்படுத்தும்போது, அது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து போய்விடுகிறது. இதனால். குழந்தைகள் மயோனைஸ் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டு, படிப்படியாக உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட தொடங்குகின்றனர்.
ஒரு டீஸ்பூன் மயோனைஸில் 100 கலோரிகள் உள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் மயோனைஸால் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். மயோனைஸில் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் தொடர்ந்து உட்கொள்வது உங்கள் எடையை அதிகரிக்க செய்யும்.
இதய நோய் ஆபத்து:
அதிகப்படியான மயோனைஸ் சாப்பிடுவது நமது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை தரும். மயோனைஸில் காணப்படும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்க செய்யும். எனவே, குறைந்த அளவு உட்கொள்வது நல்லது.
ஒரு குழந்தை அல்லது பெரியவர்கள் மயோனைஸ் சாப்பிடுவதற்கு அடிமையாகிவிட்டால், அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இதில் உள்ள கொழுப்பு நரம்புகளில் தேங்கி, அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மயோனைஸில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக உள்ளது. இந்த கொழுப்புகள் இதய நரம்புகளில் சிக்கி கொண்டு, இதய மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். இந்த கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்து, இதயத்தில் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்த தொடங்கும்.
ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. ரசகுல்லா, ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி?
தலைவலி மற்றும் வாந்தி:
கடைகளில் மயோனைஸ் தயாரிக்கும்போது பல வகையான ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் செயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ள எம்.எஸ்.ஜி உடல் நல்லத்திற்கு கேடு விளைவிப்பதோடு பலருக்கு தலைவலி, பலவீனம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
சிறுநீரக பாதிப்பு:
மயோனைஸ் சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரகம் தொடர்பான பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம்:
ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் மயோனைஸில் அதிக அளவில் உள்ளது. இது நமது உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். நீங்கள் எப்போது மயோனைஸை சாப்பிட்டாலும், உங்கள் இரத்த அழுத்த அளவை அதிகரிக்க செய்வது நல்லது.
கீல்வாதம்:
மயோனைஸை அதிகமாக உட்கொள்வது கீல்வாதத்தின் அபாயத்தை அதிகரிக்கும். இதில் உள்ள ஒமேகா 26 கொழுப்பு அமிலங்கள் உடலில் முடக்கு வாதம் போன்ற நோய்களில் அபாயத்தை அதிகரிக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)