Skin Care With Potato: சருமத்திற்கு பொலிவு தரும் உருளைக்கிழங்கு.. இப்படி பயன்படுத்துங்க முகம் பளபளக்கும்!

Skin Care: சூரிய ஒளியால் தோல் கருமை அடைவது, முகப்பரு, தோலில் புள்ளிகள் என இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கில் உள்ள இந்த ஊட்டச்சத்துகள் சருமத்தில் ஏற்படும் துளைகளை இறுக்குவதம் மூலம் வயதான எதிர்ப்பு பிரச்சனைகளை சரி செய்கிறது. இதுமட்டுமின்றி உருளைக்கிழங்கு சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டாகவும் செயல்பட்டு, முகத்தில் பொலிவை தருகிறது. உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தொடர்ந்து சில நாட்கள் தடவுவதன் மூலம், உங்களுக்கு நல்ல ரிசல்ட் தெரியும்.

Skin Care With Potato: சருமத்திற்கு பொலிவு தரும் உருளைக்கிழங்கு.. இப்படி பயன்படுத்துங்க முகம் பளபளக்கும்!

உருளைக்கிழங்கு (Image: freepik)

Published: 

13 Sep 2024 10:41 AM

சருமத்தை பாதுகாக்கும் உருளைக்கிழங்கு: ஓடி கொண்டிருக்கும் நவீன வாழ்க்கையில் சில சருமத்தை பாதுகாக்க மறந்துவிடுகிறார்கள். இது பின் வரும் நாட்களில் முக சுருக்கங்கள், பருக்கள், வறட்சி போன்ற பிரச்சனையை தருகிறது. இத்தகைய பிரச்சனைகளை போக்க மக்கள் பல்வேறு வகையான கெமிக்கல்களை பயன்படுத்தி தங்களது சருமத்தை பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு சிலர் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி முகத்தில் பல்வேறு வகையான பேஸ் பேக்குகளை போடுகிறார்கள். இன்றைய காலத்தில் தோல் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சிறு வயதிலேயே ஏற்பட தொடங்குகின்றன. சூரிய ஒளியால் தோல் கருமை அடைவது, முகப்பரு, தோலில் புள்ளிகள் என இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கில் உள்ள இந்த ஊட்டச்சத்துகள் சருமத்தில் ஏற்படும் துளைகளை இறுக்குவதம் மூலம் வயதான எதிர்ப்பு பிரச்சனைகளை சரி செய்கிறது. இதுமட்டுமின்றி உருளைக்கிழங்கு சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டாகவும் செயல்பட்டு, முகத்தில் பொலிவை தருகிறது. உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தொடர்ந்து சில நாட்கள் தடவுவதன் மூலம், உங்களுக்கு நல்ல ரிசல்ட் தெரியும். அந்தவகையில் இந்த தொகுப்பில் உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: Lemon Peels: எலுமிச்சம்பழத் தோலை தூக்கி எறியாதீங்க.. இவ்வளவு விஷயத்திற்கு பயன்படும்!

பொட்டாசியம்:

பொட்டாசியம் நிறைந்த உருளைக்கிழங்கு முக அழகை மேம்படுத்த பெரிதும் உதவும். இந்த பொட்டாசியம் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் புள்ளிகளை குறைக்கிறது. மேலும், இது தோல் அடுக்குகளில் மறைந்திருக்கும் இறந்த செல்களை சுத்தம் செய்து, சருமத்தை உள்ளிருந்து பளபளக்க உதவி செய்கிறது.

வைட்டமின் பி6:

உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி6 அழற்சி எதிர்ப்பு பண்புகளாக செயல்படுகிறது. இது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தேவையில்லாத கோடுகளை குறைக்க உதவும். மேலும், இந்த தோலை பராமரிக்க உதவிகரமாக உள்ளது. அதாவது கோடைகாலத்திலும் கூட பொலிவு மற்றும் பளபளமாக மின்னுவதற்கு ஏற்ப சருமத்தை தயார் செய்கிறது.

வைட்டமின் சி:

வைட்டமின் சி நிறைந்த உருளைக்கிழங்கு, சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது. இது உங்கள் முகத்தில் உள்ள துளைகளை அடைத்து, பருக்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

வெயிலில் இருந்து பாதுகாப்பு:

உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சூரிய ஒளி மற்றும் சூரிய பாதிப்புகளை தடுக்கும். கடுமையான சூரிய ஒளியால் ஏற்படும் தோல் வெடிப்பு, வீக்கம் மற்றும் சிவத்தல் போன்றவற்றை குறைக்கவும், பாதிக்கப்பட்ட பகுதியை குளிர்விக்கும் ஆற்றலையும் வழங்குகிறது.

மாய்ஸ்சரைசர்:

உங்கள் தோலில் நீங்கள் உருளைக்கிழங்கு சாறை தடவுவதன்மூலம் சருமத்தின் நீரேற்றத்தை தக்க வைத்து, சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்க உதவி செய்யும். எனவே, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உருளைக்கிழங்கு மாஸ்க் தயாரித்து முகத்தில் பயன்படுத்தலாம்.

ALSO READ: Bike Washing Tips: பைக்கை கழுவும் போது இந்த தவறை செய்யாதீர்கள்.. அதிக செலவை இழுத்து விடும்!

மேலும் சில நன்மைகள்:

  • உருளைக்கிழங்கைப் பயன்படுத்துவது சருமத்திற்கு குளிர்ச்சியைத் தருகிறது.
  • உருளைக்கிழங்கில் இருக்கும் சில நொதிகள் முக வீக்கத்தைக் குறைக்கின்றன.
  • உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்குகிறது.
  • உருளைக்கிழங்கில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தை குறைக்க உதவுகிறது.
  • உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள வைட்டமின் பி6 வயதான பிரச்சனையைத் தடுக்கிறது.
  • உருளைக்கிழங்கு சாறுடன் ரோஸ் வாட்டர் கலந்து தடவினால் முகப்பருக்கள் குறையும்.

சருமத்தை பாதுகாக்க உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்தலாம்..?

  1. ஒரு உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றை எடுக்கவும்.
  2. இப்போது அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  3. நன்கு கலக்கியபின் உங்கள் முகத்தில் விரல்களின் உதவியுடன் தடவி 10-15 நிமிடங்கள் விடவும்.
  4. அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வேறு வழி:

  1. முதலில் உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் செய்யவும்.
  2. அதில் இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் தேவையான அளவு மஞ்சள் கலந்து கொள்ளவும்.
  3. அதை முகத்தில் தடவி சுமார் 10-15 நிமிடங்கள் உலர விடவும்.
  4. இப்போது முகத்தை தண்ணீரில் நன்கு கழுவவும்.
  5. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தடவினால், சருமம் பொலிவும், களங்கமற்றதாகவும் இருக்கும்.
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!