தோல் பராமரிப்பு: சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள் - Tamil News | Skin care: Natural ways to protect the skin | TV9 Tamil

தோல் பராமரிப்பு: சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்

Updated On: 

08 May 2024 19:56 PM

பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஹோலிக்கு வண்ணங்களின் ஆதாரமாக செயற்கை வண்ணங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது அதிலிருத்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்

தோல் பராமரிப்பு: சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்
Follow Us On

பெண்கள் தற்போதைய காலகட்டத்தில் முக அழகுக்கு மிகவும் முக்கியத்துவம் தருகின்றனர். அந்த வகையில் சருமத்தை பாதுகாப்பதற்கான வழிகளையும் பின்பற்ற வேண்டியது அவசியமாக அமைகிறது. குறிப்பாக முகத்தில் அழகு சாதன பொருட்களோ அல்லது ஹோலி நேரத்தில் பூசப்படும் செயற்கை வண்ணப்பொடிகளும் தீங்கு விளைவிக்கும் கூடிய வகையில் அமைகிறது. அதனால் முகம் வறண்டு சரும எரிச்சல் அதிக அளவில் காணப்படுகிறது என்று தோல்நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கோடைக்காலத்தில் மிகவும் அதிகளவில் முகம் வறண்டு சரும நோய்கள் ஏற்படுகிறது.  முகத்திற்கு பெரும்பாலானோர் தேங்காய் எண்ணெய் தேங்காய் என்னை வைப்பதை பின்பற்றுகின்றனர். தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும் அதே நேரத்தில் முகத்தை பாதுகாக்க கூடிய வகையில் என்ன செய்கிறோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது அதனை போக்கும் வகையில் உங்கள் சருமத்தை பாதுகாப்பது சிறந்தது. வெயில் நேரத்தில் உடலுக்கும், சருமத்திற்கும் ஆரோக்கியம் அளிக்கும் வகையில், உணவு முறைகளை பின்பற்றினால் நன்மை பயக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Also Read: நைட்டு தூக்கம் இல்லையா..? ஆஸ்துமாவின் அறிகுறியாக இருக்கலாம்..!

அழகு சாதன பொருட்கள்

பெண்கள் பெரும்பாலும் அழகுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அந்த வகையில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.  அழகு சாதன பொருட்கள் முகத்திற்கு எதிர்வினைகளை ஆற்றக் கூடியதாக உள்ளது. அதிலிருந்து சருமத்தை பாதுகாக்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

முகத்தை பாதுகாப்பதற்கான 4 எளிய இயற்கை குறிப்புகள்

  • நிறைய தண்ணீர் அவசியம்

முக அழகிற்கும் சரும பாதுகாப்பிற்கு  அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நம் உடல் நலத்திற்கும், சருமத்திற்கும் பாதுகாப்பை தருகிறது. சருமத்தை இயற்கையாக அழகாக வைத்துக் கொள்வதன் மூலம் தோலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் முகத்தில் உள்ள வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

  • தேங்காய் தண்ணீர்

தண்ணீருடன் தினமும் தேங்காய் நீரை சேர்த்துக் கொள்வது நல்லது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தேங்காய் தண்ணீரில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் அதிக அளவில் உள்ளதால் முகப்பருவை எதிர்த்து போராட உதவுகிறது.

  • பழங்கள் மற்றும் காய்கறிகள்

வாரத்தில் ஒருமுறையாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்த உணவை உட்கொள்வது உடலுக்கு மட்டுமின்றி சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. சீரான உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் எண்ணெயில் வறுத்த  உணவுகளை தவிர்ப்பது சருமத்திற்கும், உடல் நலத்திற்க்கும் நல்லது என்று தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • தேநீர், காபி தவிர்ப்பது நல்லது

தினமும் அன்றாட வாழ்க்கைகள் காலை மற்றும் மாலையில் காபி மற்றும் தேநீர் பருகுவது சரும ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மேலும் காபின் மற்றும் ஆல்கஹால் உங்கள் சருமத்தை பாதித்து,  எரிச்சல் தடுப்புகள் மற்றும் பல முக்கிய உடல் உபாதைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. இயற்கை முறைகள் அமைந்த பானங்களை பருகுவது சருமத்திற்கும் ஆரோக்கியமானதாக அமைகிறது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version