5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Skin Care Tips: பருவ மாற்றத்தால் சருமத்தில் வறட்சியா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க!

Glowing Skin: கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது, தோல் தொடர்பான பிரச்சனைகளில் அபாயத்தை குறைப்பது மட்டுமின்றி, சருமத்திற்கு தேவையான பளபளப்பையும் தருகிறது.

Skin Care Tips: பருவ மாற்றத்தால் சருமத்தில் வறட்சியா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க!
கற்றாழை (Image: FREEPIK)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 29 Nov 2024 16:46 PM

மழை மற்றும் குளிர்காலத்தில் நமது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். அதாவது, பருவ மாற்றத்தின்போது சரும வறட்சி அதிகரிக்கும். இதனால், தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சருமத்தை ஈரப்பதமாக வைப்பது அவசியம். பருவ மாற்றத்தின்போது தோல் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. எனவே, இந்த காலத்தில் பளபளப்பான சருமத்தை பெற தோல் பராமரிப்பு மற்றும் உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்துவது நல்லது. மழை மற்றும் குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதத்தை பராமரிக்க கற்றாலை ஜெல்லை தடவலாம்.

ALSO READ: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையணுமா? இதை முயற்சி பண்ணுங்க!

கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது, தோல் தொடர்பான பிரச்சனைகளில் அபாயத்தை குறைப்பது மட்டுமின்றி, சருமத்திற்கு தேவையான பளபளப்பையும் தருகிறது. அந்தநிலையில், மழை மற்றும் குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை எவ்வாறு பயன்படுத்துவது, பளபளப்பான சருமத்திற்கு கற்றாழை ஜெல்லின் என்னென்ன பொருட்களை கலக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

பாதாம் எண்ணெய் – கற்றாழை:

கற்றாழை மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து தடவினால் முகம் மற்றும் கரும்புள்ளிகள் குறைய தொடங்கும். பாதாம் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தை பிரகாசமாக்க வைக்க உதவி செய்யும். பாதாம் எண்ணெயுடன் சிறிது கற்றாழை ஜெல்லைக் கலந்து படுக்கைக்குச் செல்வதற்கு முன் தடவலாம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் – கற்றாழை:

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழையை ஒன்றாக கலந்து பயன்படுத்துவது சருமத்திற்கு பளபளப்பை தரும். தேங்காய் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ மற்றும் பல தாதுக்கள் உள்ளன. இதை தடவினால் சருமம் வறண்டு போகாது. மேலும், இது கழுத்து, கை, கால்களிலும் ஏற்படும் வறட்சியையும் தடுக்கும்.

இரவில் தூங்கும் முன் கற்றாழை ஜெல் மூலம் முகத்தை சுத்தம் செய்யலாம். இதற்கு, ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலக்கலாம். இப்போது, தயாரிக்கப்பட்ட கலவையை உங்கள் முகத்தில் பயன்படுத்தலாம். இந்த இரண்டு பொருட்களும் உங்கள் முகத்தை ஆழமாக சுத்தம் செய்யும். இது முகத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி அதற்கு ஊட்டச்சத்தையும் அளிக்கும்.

மஞ்சள் மற்றும் கற்றாழை:

மஞ்சளுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவலாம். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனைத் தடவினால் சருமம் பொலிவடைவது மட்டுமின்றி தொற்று நோய்களிலிருந்தும் விடுபட உதவி செய்யும். குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தடவினால், சரும பொலிவுடன் வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம்.

தேன் – கற்றாழை:

பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தேனில் உள்ளன. இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்தை உள்ளிருந்து வழங்குகிறது. கற்றாழை ஜெல் மற்றும் தேனைப் பயன்படுத்துவதன் மூலம் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போக்கும். இதை தயாரிக்க, ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும். இதை முகத்தில் தடவி குறைந்தது 2-3 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

ALSO READ: Winter Skin Care Tips: குளிர்காலத்தில் வறண்ட சருமம் ஜொலிக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க!

ரோஸ் வாட்டர் – கற்றாழை:

இரவில் தூங்கும் முன் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் வறட்சி உள்ள பகுதிகளில் தடவலாம். இவை இரண்டையும் நன்கு கலந்து காட்டன் உதவியுடன் முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். காலையில் எழுந்தவுடன் முகத்தை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தின் நிறம் மேம்படும், பளபளக்கவும் தொடங்கும்.

கற்றாழை அதிக குளிர்ச்சி உடையது, எனவே சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் தவிர்ப்பது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News