Smoking Side Effects: புகைபிடித்தல் நுரையீரலை மட்டுமல்ல.. அனைத்து உடல் உறுப்புகளையும் பாதிக்கும்! - Tamil News | smoking side effects: Here we will know about the side effects of smoking on the body in tamil | TV9 Tamil

Smoking Side Effects: புகைபிடித்தல் நுரையீரலை மட்டுமல்ல.. அனைத்து உடல் உறுப்புகளையும் பாதிக்கும்!

Smoking: புகைப்பிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுவது மட்டுமின்றி, உடலின் எந்தப் பகுதியிலும் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. இது குரல்வளை, சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், கல்லீரல், நுரையீரல், கணையம், வயிறு மற்றும் பிற இடங்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

Smoking Side Effects: புகைபிடித்தல் நுரையீரலை மட்டுமல்ல.. அனைத்து உடல் உறுப்புகளையும் பாதிக்கும்!

புகைபிடித்தல் (Image: Freepik)

Published: 

17 Oct 2024 16:43 PM

சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று நம் அனைவரும் ஒருமுறையாவது கேள்வி பட்டிருப்போம். முதலில் ஸ்டைல் என்று நினைத்து புகைப்பிடிக்க தொடங்கி, அதற்கு அடிமையாகிவிடுகிறோம். சிகரெட் நுரையீரலை சேதப்படுத்துவது மட்டுமின்றி, மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயத்தை வழிவகுக்கும். புகை பிடிப்பதால் சுவாச பிரச்சனைகள் மட்டுமின்றி, எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும். சிகரெட்டில் நிகோடினுடன் காட்மியம், ஈயம், நிக்கல், குரோமியம் மற்றும் கார்மன் மோனாக்சைடு போன்ற ஆபத்தான மற்றும் நச்சு பொருட்கள் உள்ளன.

இது உடலுக்கு பல வகைகளில் தீமையை தருகிறது. அந்தவகையில், புகைப்பிடித்தல் உடலில் என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று இங்கே தெரிந்து கொள்வோம். புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், சிஓபிடி மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும். புகைப்பிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுவது மட்டுமின்றி, உடலின் எந்தப் பகுதியிலும் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. இது குரல்வளை, சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், கல்லீரல், நுரையீரல், கணையம், வயிறு மற்றும் பிற இடங்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தலாம். மேலும், புகைபிடித்தல் இதய நோய், சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு நோயையும் உண்டாக்கலாம்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்வீட்.. வீட்டிலேயே சுவையான பால் பணியாரம், ஜிலேபி செய்வது எப்படி?

முதுகெலும்பு:

புகைபிடித்தல் முதுகு தண்டுவடத்தை நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும். புகைப்பிடித்தல் ஊட்டசத்து குறைபாட்டை ஏற்படுத்தி, எலும்பு முதுகெலும்பு வட்டுடன் சந்திக்கும் இடத்தில், இது செல்கள் உருவாவதையும் பாதிக்கிறது. அன்னல்ஸ் ஆஃப் தி ருமாட்டிக் நோய்களில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, புகைபிடிப்பதால் முதுகுவலி ஏற்படுவதற்கான ஆபத்து 30 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக 13,000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், அதிகளவில் புகைப்பிடிப்பவர்களுக்கு கழுத்து, தோள்கள், முழங்கைகள், கைகள், இடுப்பு மற்றும் முழங்கால்களில் அதிக வலி ஏற்படுத்தியாக கண்டறியப்பட்டது.

திசு பாதிப்பு:

சிகரெட்டில் உள்ள நிகோடின் புதிய இரத்த நாளங்களை உருவாக்கும் உடலின் திறனை பாதிக்கும். மேலும், இது திசுவில் ஏற்படும் பிரச்சனைகளை தனிச்சையாக செயல்படும் முறையை தடுக்கிறது.

கண்பார்வையை குறைக்கும்:

புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்றவற்றால் கண்பார்வை குறையும். இதுமட்டுமின்றி, சிகரெட் கண்புரை பிரச்சனையையும் உண்டாக்கும். புகைபிடிப்பதால் கண்கள் உட்பட உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்கள் சுருங்கும். இத்தகைய சூழ்நிலையில், மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை போன்ற நிலைமைகளை உருவாக்கும் ஆபத்து அதிகரிக்கலாம். மேலும், புகைப்பிடித்தல் கண்களில் உள்ள தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தலாம். இது கடுமையான பார்வை இழப்பு அல்லது குருட்டுத்தன்மையை வழிவகுக்கலாம்.

சரும பாதிப்பு:

புகைபிடித்தல் உடலில் முன்கூட்டியே உடலில் சுருக்கங்களை ஏற்படுத்தி, முதுமை தோற்றத்தை தரும். சிகரெட் உடலில் கொலாஜன் அளவை குறைக்கிறது. புகைபிடித்தல் நமது சருமத்தை முதிர்ச்சி அடைய செய்கிறது. புகைபிடித்தல் நமது சருமத்திற்கு வலிமையையும் நெகிழ்ச்சியையும் தரும் எலாஸ்டின் இழைகளை சேதப்படுத்துவதன் மூலம் சுருக்கங்களை உருவாக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

உடல் பருமனை அதிகரிக்கும்:

புகைபிடித்தல் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க செய்து, நாளமில்லா அமைப்பை பாதிப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த வடிவத்தை அதிகரிக்க செய்யும். நீண்ட நாட்கள் புகைபிடிப்பவர்களுக்கு நகங்களின் நிறத்தை மாற்ற செய்யும். மேலும், பற்கள் மஞ்சள் நிறமாக மாற்றுவது மட்டுமின்றி, சிகரெட் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

ALSO READ: Health Tips: காய்ச்சல், சளி பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? தினமும் இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!

முக தோற்றம் மாறும்:

புகைபிடிப்பதால் முகத்தில் நிறமி ஏற்படும் அபாயம் உள்ளது. சிகரெட் மெலனின் அளவை அதிகரிக்க செய்து, முகத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்துகிறது. இந்த நிறமி படிப்படியாக அதிகரித்து முகம் முழுவதும் பரவுகிறது. பலர் சிகரெட்டை விரல்களுக்கு இடையில் நீண்ட நேரம் வைத்திருப்பார்கள், இதன் காரணமாக நிகோடின் மற்றும் பிற இரசாயனங்கள் தோல் மஞ்சள் நிறமாக மாறும். இதனால் விரலில் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...
நடிகை மடோனாவின் நியூ ஆல்பம்..!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..?