Social Media and Sleep: தூக்கத்தை கெடுக்கும் சோஷியல் மீடியா.. ஷாக் ரிப்போர்ட் என்ன தெரியுமா? - Tamil News | | TV9 Tamil

Social Media and Sleep: தூக்கத்தை கெடுக்கும் சோஷியல் மீடியா.. ஷாக் ரிப்போர்ட் என்ன தெரியுமா?

Published: 

25 Jul 2024 23:47 PM

சமீபத்தில் ஒரு புதிய ஆய்வு தூங்குவதற்கு முன்பு திரை பயன்பாடு இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் தூக்க முறைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வில், இளம் பருவத்தினர், அவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களுடைய தூக்கப் பழம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும், இளைஞர்கள் தூங்கும் நேரத்தில் அவர்களின் ஃபோன் மற்றும் சோசியல் மீடியா பயன்பாடு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் மற்றும் தூக்க முறைகளை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி தெரிந்துக் கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

Social Media and Sleep: தூக்கத்தை கெடுக்கும் சோஷியல் மீடியா.. ஷாக் ரிப்போர்ட் என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Follow Us On

தூக்கம் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக, இளம் பருவத்தினருக்கு மிகவும் முக்கியம். அது, அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ஆனால், இந்த கால இளம் பருவத்தினர் இரவில் ஃபோன் மற்றும் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதால், சரியான தூங்குவதே கிடையாது. இதனால், அவர்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆய்வும் ஒன்றும் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில், தூங்குவதற்கு முன்பு திரை பயன்பாடு இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் தூக்க முறைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. 

Also Read: Optical Illusion: எந்த விமானத்தில் இறக்கைகள் இல்லை? 7 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா?

அதாவது, தூங்க செல்வதற்கு முன்பாக, ஃபோனை சைலண்ட் மோடில் அல்லது வைப்ரேட் மோடில் இருந்தாலும், மெசேஜ், அழைப்பு, மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷன் வரும்போது நம்மையே அறியாமல் ஃபோனை எடுத்துப்பார்க்க தூண்டும். அதுமட்டுமல்லாமல், நன்றாக தூங்கிய பிறகு நடு இரவில் ஏதாவது நோட்டிஃபிகேஷன் சத்தம் கேட்டாலும் உடனே எழுந்து பார்க்க தோன்றும். இவை அனைத்துமே தூக்கத்தில் ஈடையூறை ஏற்படுத்தும். 

அதுமட்டுமல்லாமல், படுக்கையறையில் டிவி அல்லது இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனம் இருந்தாலும், ஃபோனில் அலாரம் வைத்துக்கொண்டு தூங்குவதாலும் தூக்கத்தை மோசமாக பாதிக்கிறது. இவை அனைத்தும் இளம் தலைமுறையினர் இடையே பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

Also Read: Sweet Recipe: வீட்டில் கடலை மாவு இருந்த இந்த ஸ்வீட் செய்து பாருங்க.. பாகு பதம் தேவையில்லை.

தூக்கத்தை மேம்படுத்த சில குறிப்புகள்:

தூங்குவதற்கு முன் சோசியல் மீடியா பயன்படுத்துவது, வீடியோ கேம் விளையாடுவது, சாட்டிங், வீடியோ கால் போன்றவற்றை தவிர்க்கவும்.

தூங்குவதற்கு முன்பு படுக்கையில் இருக்கும் போது திரைப்படங்கள், வீடியோக்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

நடு இரவில் எழுந்தால், தொலைபேசியைப் பயன்படுத்தவோ அல்லது சமூக ஊடகங்களில் ஈடுபடவோ வேண்டாம்.

படுக்கையறையில் டிவி செட் அல்லது இன்டர்நெட் இணைக்கப்பட்ட சாதனம் இருந்தால் அவற்றை மற்ற அறைக்கு மாற்றவும்.

தூங்குவதற்கு முன்பு ஃபோனை வைப்ரேட், சைலண்ட் மோடில் போடுவதற்கு பதிலாக, முழுவதுமாக ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும்.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version