Solo Travel: இந்தியாவில் சோலோ ட்ரிப் செல்ல சிறந்த இடங்கள் இவைதான்.. ஜாலியா ஒரு ரவுண்ட் அடிங்க..!
Travel Tips: தனியாக சுற்றுலா செல்வது பொழுதுபோக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். இந்த நவீன வாழ்க்கையில் நீங்கள் படு பிஸியாக உங்கள் வாழ்க்கையை தினமும் கடந்து வருவீர்கள். இது உங்களுக்கு அதிகபடியான மன அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு ஒரு தீர்வு பயணம்தான். தனியாக சுற்றுலா செல்வது வித்தியாசமான அனுபவம். அந்தவகையில், இந்தியாவில் தனியாகப் பயணம் செய்வதற்கு பல அழகான இடங்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.
சோலோ ட்ரிப்: தனியாக பயணம் செய்வது பலருக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று. யாருடனும் சேராமல் பயணம் மேற்கொண்டு, வாழ்க்கையை ஜாலியாக ரசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தனியாக சுற்றுலா செல்வது பொழுதுபோக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். இந்த நவீன வாழ்க்கையில் நீங்கள் படு பிஸியாக உங்கள் வாழ்க்கையை தினமும் கடந்து வருவீர்கள். இது உங்களுக்கு அதிகபடியான மன அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு ஒரு தீர்வு பயணம்தான். தனியாக சுற்றுலா செல்வது வித்தியாசமான அனுபவம். அந்தவகையில், இந்தியாவில் தனியாகப் பயணம் செய்வதற்கு பல அழகான இடங்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.
ALSO READ: Goa Tour: குறைந்த செலவில் கோவா சுற்றுலா.. இதோ தெளிவான டூர் விவரம்!
ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார்:
ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் தனியாக பயணம் செய்ய இந்தியாவில் ஏற்ற இடங்களில் ஒன்று. கங்கை நதிக்கரையில் அமர்ந்து இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். இங்கு, நீலகண்ட மகாதேவ் கோயில், பாரத் கோயில், திரிவேணி காட், லக்ஷ்மண் ஜூலா, வசிஷ்ட குகை உள்ளிட்ட பல இடங்களுக்கு தனிமையில் சென்று அனுபவிக்கலாம்.
கேரளா:
கேரளாவும் ஒரு தனி பயணத்திற்கு மிகவும் அழகான இடமாகும். கேரளாவின் இயற்கை அழகு உங்கள் தனி பயணத்தை இன்னும் மறக்க முடியாததாக மாற்றும். அலப்பி கேரளாவில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். கேரளாவில், கடலோர நகரமான திருவனந்தபுரம், கொச்சி, ஆலப்புழா, குட்டநாடு, முழப்பிலங்காட் கடற்கரை, போல்கட்டி தீவு மற்றும் மூணாறு போன்ற இடங்களுக்கும் தனியாக் சென்று இயற்கையோடு ஒன்றலாம்.
கர்நாடகா:
கர்நாடகாவில் உள்ள ஹம்பி நகரம், தனி பயணத்திற்கு தனித்துவமான இடமாகும். இங்குள்ள பழங்கால இடிபாடுகள், கோவில்கள் மற்றும் வரலாற்று தளங்கள் உங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும். ஹம்பி தனியாக பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடம். இங்கே விருபாக்ஷா கோயில், விட்டல் கோயில்கள் பார்வை விடலாம். மேலும், ஹேம்கூட் மலை பகுதியில் தனியாக சைக்கிள் ஓட்டி பயணம் மேற்கொள்ளலாம்.
தர்மஷாலா:
தர்மஷாலா ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். இங்குள்ள அமைதியான மலைகள் மற்றும் திபெத்திய கலாச்சாரம் உங்கள் தனி பயணத்தை சிறந்ததாக மாற்றும். இங்கு நீங்கள் திபெத்திய மடாலயம், திபெத்திய சந்தை மற்றும் திபெத்திய உணவுகளை அனுபவிக்கலாம்.
உதய்பூர்:
உதய்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகான சுற்றுலா தலமாகும், இது ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நீங்கள் ஜக் மந்திர், சிட்டி பேலஸ் மற்றும் தூத் தலை போன்ற இடங்களை பார்வையிடலாம். இது தவிர, மோதி மஹால், தில்குஷ் மஹால், ஃபடல் பிரகாஷ் அரண்மனை மற்றும் ஷீஷ் மஹால் போன்ற இடங்களையும் பார்க்கலாம்.
ALSO READ: Salem Tour: இயற்கை அழகு கொண்ட நகரம் சேலம்.. சின்ன பட்ஜெட்டில் சூப்பர் டூர் போங்க!
கோவா:
கோவா பல இளைஞர்களின் கனவு நகரம். இங்கு ஒருமுறையாவது சென்று வரவேண்டும் என்று பலரும் நினைக்கும் இடம் கோவா. இங்கு நீங்கள் கடற்கரை, நைட் பார்ட்டி மற்றும் நீர் விளையாட்டுகளை ஜாலியான அனுபவமாக இருக்கும். மேலும், நீங்கள் இங்கு கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் போன்றவையும் செய்து மகிழலாம்.