5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இவ்வளவு வேகமாக சமைக்கும் உணவுகள் இருக்கறப்போ என்ன கவலை!

30 minute south indian dishes : முப்பதே நிமிடங்களில் செய்து அசத்தக்கூடிய தென்னிந்திய உணவுகள்! கிச்சனே கதி என குடியிருக்கும் பெண்களுக்கு வேகமாய் சமைக்கும் சில உணவுகளைப் பற்றி சொல்கிறோம்.

இவ்வளவு வேகமாக சமைக்கும் உணவுகள் இருக்கறப்போ என்ன கவலை!
தென்னிந்திய உணவுகள்
Follow Us
intern
Tamil TV9 | Published: 16 May 2024 22:44 PM

பொதுவாக பெண்கள் சமையறையைப் பொருத்தவரை, போனால் போனது என்றுதான் இருப்பார்கள். சட்டுபுட்டென்று சமைத்தோமா அறையைவிட்டு வெளியேறினோமா என்றெல்லாம் இருக்கவே மாட்டார்கள். கிச்சனே கதி என அங்கேயே குடியிருப்பார்கள். அப்படி இருக்கும் பெண்களுக்கு வேகமாய் சமைக்கும் சில உணவுகளைப் பற்றி சொல்கிறோம்.

1. கேரட் பீன்ஸ் பொறியல்.

ஒன்றுமே இல்லை கேரட்டையும் பீன்சையும் சுத்தம் செய்து நறுக்கி, உப்பு போட்டு வேகவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு தாளித்தால், கேரட் பீன்ஸ் பொறியல் தயார்.

2. அவல் மெதுவடை

அவலை ஊறவைத்து தண்ணீர் வடிகட்டி, அதில் உப்பு, மிளகு, சீரகம், பச்சைமிளகாய் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து, தட்டி எண்ணெயில் போட்டு எடுத்தால் அரைமணி நேரத்தில் அவல் மெதுவடை தயார்.

3. ரசம்

புளியை ஊறவைத்து கரைத்துக்கொண்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து தக்காளியை பிசைந்துவிட்டு, பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து தாளித்துவிட்டால் ரசம் தயார்.

4. மசாலா தோசை

வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதோடு பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள் எல்லாம் போட்டு தாளித்து, அதை தோசயின் நடுவே வைத்து தோசையை மடித்து எடுத்தால் மசாலா தோசை தயார்.

Also Read: ஓமப்பொடிய கடையில வாங்கிக்கொடுக்காம , இப்படி வீட்டுலையே செஞ்சு கொடுங்க!

5. எலுமிச்சை சாதம்

எலுமிச்சம்பழச்சாற்றை, தாளிப்புக்குத் தயாராக இருக்கும் எண்ணெயுடன் கடுகு, கடலப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, சாதம் போட்டு கிளறினால் அவ்வளவுதான் எலுமிச்சை சாதம் தயார்.

6. இட்லி

அரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாம் சேர்த்து ஊறவைத்து இரவே மாவை ஆட்டிவைத்திருந்தால் போதும். மாவை இட்லி சட்டியில் ஊற்றி பத்தே நிமிடங்களில் வேகவைத்து எடுத்துவிடலாம்.

7. பனியாரம்

இட்லிக்கு அரைத்த மாவில் வெல்லம் அல்லது வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு தாளித்துக்கொட்டி பனியார சட்டியில் ஊற்றியெடுத்தால் பனியாரம் தயார்.

Latest News