Home Tips: மெத்தை கறை சட்டுனு போகணுமா? எப்போதுமே புதுசு மாதிரி பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க!
Mattresses Clean: மெத்தைகள் மற்றும் தலையணைகளை அவ்வப்போது அல்லது மாதம் ஒருமுறை வெயிலில் காய போடுவது நல்லது. சூரிய ஒளி அவற்றில் இருக்கும் கிருமி மற்றும் துர்நாற்றங்களை நீக்குகிறது. நீங்கள் நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களான பால்கனி, மொட்டை மாடிகளில் மெத்தைகள் மற்றும் தலையணைகள் வைக்கலாம். காய போட்டு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை திருப்பி போடுங்கள்.
மெத்தை சுத்தம்: தினந்தோறும் ஓடி களைப்பு ஏற்பட்ட பிறகு, எப்போது வீட்டில் இருக்கும் மெத்தையில் சிறிது நேரம் படுப்போம் என்று எல்லாருக்கு ஒரு நிமிடம் தோன்றும். அப்படியான சுகத்தை தரும் மெத்தை, தலையணைகளை பெரும்பாலும் நாம் சுத்தம் செய்வது கிடையாது. அதிகமாக பேச்சுலர்கள் தங்கள் அறையில் இருக்கும் தலையணைகள் சுத்தம் செய்வதே இல்லை. இதன் காரணமாகவே, அவர்களுக்கு முகப்பரு மற்றும் சரும அலர்ஜி போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றன. வீட்டை எப்படி சுத்தம் செய்வோமோ, அதேபோல் மெத்தைகள் மற்றும் தலையணைகளை சுத்தம் செய்வது அவசியம். இப்படியான அழுக்கு ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே உங்கள் மெத்தை மற்றும் தலையணைகளை வீட்டிலேயே சுத்தம் செய்ய உதவும் குறிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மாதத்திற்கு ஒரு வெயிலில் உலர்த்தவும்:
மெத்தைகள் மற்றும் தலையணைகளை அவ்வப்போது அல்லது மாதம் ஒருமுறை வெயிலில் காய போடுவது நல்லது. சூரிய ஒளி அவற்றில் இருக்கும் கிருமி மற்றும் துர்நாற்றங்களை நீக்குகிறது. நீங்கள் நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களான பால்கனி, மொட்டை மாடிகளில் மெத்தைகள் மற்றும் தலையணைகள் வைக்கலாம். காய போட்டு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை திருப்பி போடுங்கள். கடைசியாக மெத்தை மற்றும் தலையணையை நன்றாக தூசி தட்டி வீட்டிற்குள் எடுத்து செல்லுங்கள்.
வேக்கம் கிளீனர்:
சூரிய ஒளியில் நேரடியாக வைக்க முடியாதவர்கள், வேக்கம் கிளீனர்களை பயன்படுத்து செய்யலாம். இது மெத்தைகளில் படிந்திருக்கும் தூசியை அகற்றி சுத்தமாக வைத்திருக்கும். மெத்தை மற்றும் தலையணைகளை திறந்தவெளியில் வைத்து சுத்தம் செய்த பிறகு, அவற்றை ஃபேனில் வைத்து சிறிது நேரம் உலர விடவும்.
ஸ்டீமர்:
துணிகள் பயன்படுத்தப்படும் ஸ்டீமரை கொண்டும் மெத்தைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். ஸ்டீமர் முனையை மெத்தைக்கு அருகில் நகர்த்தி சுத்தம் செய்யவும். இது மெத்தைகளில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை எளிதில் அகற்றும்.
மெத்தைகளில் மஞ்சள் கறை இருந்தால் இப்படி சுத்தம் செய்யுங்கள்.
காபி, டீ, வியர்வை மற்றும் தண்ணீர் போன்றவை மெத்தைகளைல் படும்போது மஞ்சள் மற்றும் பழுப்பு நிற கறைகளை ஏற்படுத்தும். அவற்றை இந்த முறை கொண்டு செய்து கறையை நீக்கலாம்.
முதலில் மெத்தையை வேக்கம் கிளீனரை கொண்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்பு, துணி துவைக்கும் சோப்பு மற்றும் சோடாவை பேஸ்ட் செய்து கறை படிந்த இடத்தில் தடவி 10 நிமிடங்கள் காய விடுங்கள். அதன்பிறகு, ஒரு சுத்தமாக துணியால் பேஸ்டை லேசாக துடைக்கவும். தொடர்ந்து, ஒரு சுத்தமான துணியை தண்ணீரில் நனைத்து, பேஸ்ட் எஞ்சியிருக்காதவாறு அதை நன்கு சுத்தம் செய்யவும். இந்த முறையை செய்தபின் மெத்தைகளை வெயிலில் உலர்த்தி எடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் மெத்தை மற்றும் தலையணைகள் முற்றிலும் சுத்தமாகும்.