5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: சமையலறையில் இருக்கும் இந்த பொருள்.. இரைப்பை புற்றுநோயை உண்டாக்குமா..?

Stomach Cancer: வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளை பெரும்பாலும் மக்கள் சாதாரண நிலை என கருதி மருத்துவரிடம் செல்வது கிடையாது. இந்த புற்றுநோய் மூன்றாவது அல்லது நான்காவது கட்டத்தை அடையும்போதே மருத்துவர்களை தொடர்பு கொள்கின்றனர். பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Health Tips: சமையலறையில் இருக்கும் இந்த பொருள்.. இரைப்பை புற்றுநோயை உண்டாக்குமா..?
வயிற்று புற்றுநோய் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 13 Nov 2024 17:55 PM

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வேறு உணவு கலாச்சாரங்கள் உள்ளது. அதன்படி, சமைக்கும்போது நாம் உணவுகளில் சேர்க்கப்படும் சில பொருட்கள்தான், உணவுக்கு அதீத சுவையை தருகிறது. இவற்றில் மிக முக்கிய பங்கு வகிப்பது உப்பு. உணவில் உப்பு சேர்க்கப்படாதபோது, அது சுவையாக இருக்காது. அதேநேரத்தில், அதிக உப்பு சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக உப்பு உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு கேடு என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உப்பு அதிகமாக எடுத்துக்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதை பற்றி இங்கு முழுமையாக தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health Tips: திடீரென எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றலா? இவைதான் முக்கிய காரணங்கள்..!

ஆய்வு என்ன சொல்கிறது..?

உணவில் அதிக உப்பை உட்கொள்வது இரைப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், சுமார் 4,71,144 பேரிடம் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டதன் விளைவுகள் குறித்து கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் உப்பினாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் இரைப்பை புற்றுநோய் ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.

இரைப்பை புற்றுநோய் என்றால் என்ன..?

உலகில் கண்டறியப்பட்டுள்ள 200க்கு அதிகமான புற்றுநோய் வகைகளில் இரைப்பை புற்றுநோயும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டு மில்லியனுக்கு அதிகமான மக்கள் இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வயிற்றுக்குள் கட்டி செல்கள் உருவாகும் செயலே இரைப்பை புற்றுநோய் என்று அழைக்கிறோம். மேலும், இந்த வகை புற்றுநோய் வயிற்று புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது.

வயிற்றில் உள்ள அசாதாரண செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரத் தொடங்கும் போது இரைப்பை புற்றுநோய் அதாவது வயிற்று புற்றுநோய் ஏற்படுகிறது. அதிகப்படியான மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம், ஜீன், புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்ற காரணங்களுக்காகவும் வயிற்று புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

உப்பு எவ்வாறு புற்றுநோயை உண்டாக்குகிறது..?

அதிக அளவு உப்பு எடுத்து கொள்வது வயிற்றின் புறணியை பாதிக்கிறது. இது வயிற்றில் வீக்கத்தை வழிவகுக்கும். இந்த வீக்கமானது ஹெலிகோபாக்டர் பைலோரி எனப்படும் பாக்டீரியாவால் சுவரில் தொற்றுநோயை ஊக்குவித்து, வயிற்று புண்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக, ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா வயிற்றுப் புற்றுநோய்க்கான முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்த பாக்டீரியாவால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளை பெரும்பாலும் மக்கள் சாதாரண நிலை என கருதி மருத்துவரிடம் செல்வது கிடையாது. இந்த புற்றுநோய் மூன்றாவது அல்லது நான்காவது கட்டத்தை அடையும்போதே மருத்துவர்களை தொடர்பு கொள்கின்றனர். பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில சமயங்களில் இந்த புற்றுநோய் இளைஞர்களையும் பாதிக்கிறது. 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு வயிற்று புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் 30% அதிகரித்துள்ளன.

வயிற்று புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவை

  • இரைப்பை லிம்போமா
  • இரைப்பை குடல் ஸ்ட்ரோமல் கட்டி
  • நியூரோஎண்டோகிரைன் கட்டி

இவை வயிறு மட்டுமின்றி, உணவுக்குழாய் மற்றும் வயிற்றை இணைக்கும் பகுதியும் புற்றுநோயால் பாதிக்கப்படும்.

ALSO READ: Raw Milk Side Effects: பசும்பாலை ஏன் பச்சையாக குடிக்கக்கூடாது? இவ்வளவு பக்க விளைவுகள் ஏற்படுமா?

இரைப்பை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள்:

  • திடீர் எடை இழப்பு
  • வயிற்று வலி
  • பசி எடுக்காமை
  • உணவை விழுங்குவதில் சிரமம்
  • வயிற்றில் அதிக புண்கள்
  • சிறிதளவு உணவு உண்டபிறகு நிரம்பிய உணவு
  • சோர்வு
  • அடிக்கடி புளிப்பு ஏப்பம்
  • ஹீமோகுளோபின் குறைபாடு
  • அஜீரணம்
  • குமட்டல்
  • வாந்தி

இரைப்பை புற்றுநோயை தடுப்பதற்கான முறைகள்:

  • ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுதல்
  • புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடுங்கள்.
  • எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.
  • நொறுக்கு தீனிகளை தவிர்த்தல்
  • புதிய பழங்கள், காய்கறிகளை எடுத்து கொள்ளுதல்

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News