Summer Tips : கர்ப்பிணிகள் கோடைகாலத்தை சமாளிப்பது எப்படி? இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க! - Tamil News | | TV9 Tamil

Summer Tips : கர்ப்பிணிகள் கோடைகாலத்தை சமாளிப்பது எப்படி? இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

Published: 

10 May 2024 18:08 PM

Warning for Pregnancy women: மசக்கையாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் வாந்தி, மயக்கம், குமட்டல், சோர்வு என எல்லாமும் இருப்பது இயல்புதான், ஆனால் அதுவே வெயில் காலத்தில் பன்மடங்காகிப் போகிறது.

Summer Tips : கர்ப்பிணிகள் கோடைகாலத்தை சமாளிப்பது எப்படி? இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

கர்ப்பிணி - மாதிரிப்படம்

Follow Us On

கோடைக்காலத்தைப் பொருத்தவரை வெயில்தான் ஒரு பெரும் பிரச்சனையே. சாதாரண மனிதர்களையே இந்த வெயில் பாடாய்ப்படுத்தும் பட்சத்தில், ஒரு கருவை சுமக்கும் பெண் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்.மசக்கையாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் வாந்தி, மயக்கம், குமட்டல், சோர்வு என எல்லாமும் இருப்பது இயல்புதான், ஆனால் அதுவே வெயில் காலத்தில் பன்மடங்காகிப் போகிறது. அதிக வெயிலின் தாக்கத்தால் வியர்வை நிறைய வெளியேறுகிறது அதுபோக வாந்தியும் வேறு. எனவே அதிக நீர் வெளியேறுவதால் நீர்ச்சத்து குறைய அதிக வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் தாகம் எடுத்தாலும் குமட்டல் மற்றும் வாய் ஒவ்வாமை காரணமாக தண்ணீரை அதிகம் உட்கொள்ளவும் முடியாத சூழல். எனவே இந்த நீர்ச்சத்துக் குறைபாட்டை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்க்கலாம்.

வெறும் தண்ணீராக குடிக்க முடியாதவர்கள் எலுமிச்சம்பழச் சாறாகவோ, குளுக்கோஸ் பவுடர் சேர்த்தோ அல்லது மோர் இளநீர் என எப்படியாவது நீராகரத்தை சேர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். நீராக அருந்த முடியாத பட்சத்தில் பழமாகவாவது சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, தர்பூசணி,மாதுளை, சாத்துக்குடி, நுங்கு, வெள்ளரி, காய்கறிகளில் சுரக்காய், பீர்க்கங்காய் என எதையாவது உணவில் சேர்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.

Also Read : தொப்பையை சர்ரென குறைத்துவிடலாம்.. இதை ஃபாலோ பண்ணுங்க!

மசக்கையாக இருக்கும் இந்த காலத்தில்தான் கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த்தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிலும் நீர்க்கடுப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே அதிக தண்ணீரை எடுத்துக்கொள்ள முயலவேண்டும். சரியான நேரத்திற்கு அடக்கிவைக்காமல் சிறுநீரை வெளியேற்ற வேண்டும், எலுமிச்சம்பழச் சாறில் இருக்கும் சிட்ரிக் அமிலத்திற்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் என்பதால் அவ்வபோது எலுமிச்சம் ஜூஸ் அருந்தவேண்டும்.

அதிகம் பேர் பயன்படுத்தும் பொது கழிவறையை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம், அப்படி பயன்படுத்தும் பட்சத்தில் அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக கழுவுவது அவசியம். இது நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கும். சிறுநீர் நிறம் மாறுவதை வைத்தே உடலில் நீரின் அளவு குறைவதை ஓரளவு கணித்துவிடலாம், எனவே சிறுநீர் கழிக்கும்போதும் கவனம் தேவை. எலுமிச்சம் பழத்தைப் போன்றே சாத்துக்குடி ஜூஸ் அதிகம் பருகலாம். தேவையற்ற அடைத்துவைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version