Health Tips: மூளைக்கு புத்துணர்ச்சி தரும் கத்திரிக்காய்.. புற்றுநோய்க்கு சூப்பர் ஃபுட்..!

Brinjal Benefits: கத்திரிக்காய் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவது மட்டுமல்லாமல், மூளைக்கும் மிகவும் நன்மை பயக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் ஏ, சி, ஈ, பி2, பி6 மற்றும் இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது. கத்திரிக்காய் பல வண்ணங்களில் விளைக்கின்றன. இவற்றில் ஊதா, பச்சை மற்றும் வெள்ளை கத்தரிக்காயை நீங்கள் பார்த்திருக்கலாம். பச்சை மற்றும் வெள்ளை கத்திரிக்காய்கள் அரிதாகவே காணப்படுகின்றன. வெள்ளை மற்றும் பச்சை கத்தரிக்காயில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவற்றின் சுவையும் வித்தியாசமானது.

Health Tips: மூளைக்கு புத்துணர்ச்சி தரும் கத்திரிக்காய்.. புற்றுநோய்க்கு சூப்பர் ஃபுட்..!

கத்திரிக்காய் (Image:freepik)

Published: 

09 Sep 2024 10:18 AM

கத்திரிக்காயின் நன்மைகள்: கத்திரிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதே என்றாலும், இதை வெகு சிலரே விரும்பி சாப்பிடுவார்கள். கத்திரிக்காய காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. கத்திரிக்காய் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவது மட்டுமல்லாமல், மூளைக்கும் மிகவும் நன்மை பயக்கும். கத்திரிக்காய் பல வண்ணங்களில் விளைக்கின்றன. இவற்றில் ஊதா, பச்சை மற்றும் வெள்ளை கத்தரிக்காயை நீங்கள் பார்த்திருக்கலாம். பச்சை மற்றும் வெள்ளை கத்திரிக்காய்கள் அரிதாகவே காணப்படுகின்றன. வெள்ளை மற்றும் பச்சை கத்தரிக்காயில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவற்றின் சுவையும் வித்தியாசமானது. இந்தநிலையில், கத்திரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: Mango Leaves Benefits: உடல் ஆரோக்கியத்தை காக்கும் மா இலை.. சர்க்கரை நோய், இதய நோய்களை தடுக்கும் மருந்து..!

மூளைக்கு புத்துணர்ச்சி:

கத்தரிக்காயில் உள்ள அந்தோசயனின் மற்றும் நாசுனின் என்சைம்கள் மூளை செல்களின் சவ்வுகளை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது மட்டுமின்றி, மூளையின் செல்களை நச்சுத்தன்மையாக்குவதுடன், மூளையில் ரத்த ஓட்டத்தையும் கத்தரிக்காய் அதிகரிக்கிறது. கத்திரிக்காய்களில் உள்ள பைட்டோநியூட்னியண்ட், மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் இரசாயனங்கள் நிறைந்துள்ளது. இதன் காரணமாக, உணவில் கத்திரிக்காயை சேர்த்து கொள்வதன் மூலம் நினைவாற்றலை மேம்படுத்தலாம். மேலும், கத்திரிக்காய் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

எலும்புகள்:

கத்திரிக்காயில் அதிகளவிலான வைட்டமின் கே உள்ளது. இது எலும்புகளை கட்டமைக்கவும், சரி செய்யவும் உதவுகிறது. கத்தரிக்காயில் உள்ள பீனாலிக் என்ற நொதி எலும்பின் அடர்த்தியை அதிகரித்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

இதயத்திற்கு நல்லது:

கத்தரிக்காயை உட்கொள்வதால் இதய ஆரோக்கியமும் மேம்படும். இதில் உள்ள பயோஃப்ளவனாய்டுகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இது மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. கத்திரிக்காயில் காணப்படும் என்சைம் குளோரோஜெனிக் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

புற்றுநோய் பாதுகாப்பு:

கத்திரிக்காயில் அந்தோசயனின் என்ற சிறப்பு தனிமம் உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, அந்தோசயனின் புற்றுநோய் செல்களின் விளைவை குறைக்கும் என்று கூறுகின்றன. எனவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கத்திரிக்காய் அதிக அளவில் நன்மை பயக்கும்.

இரத்த சோகை:

ஃபோலேட் மற்றும் இரும்பு இரண்டும் கத்தரிக்காயில் ஏராளமாக காணப்படுகின்றன. இந்த மருத்துவ குணங்கள் நம் உடலில் ஏற்படும் இரத்த சோகையின் அபாயங்களைக் குறைப்பதில் உதவியாக இருக்கிறது.

ALSO READ: Health Tips: மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்.. இவை பிரச்சனைகளை தரலாம்!

நோய் எதிர்ப்பு சக்தி:

கத்திரிக்காயில் வைட்டமின் ஏ, சி, ஈ, பி2, பி6 மற்றும் இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் திறனையும் தருகிறது.

உடல் எடை:

உடல் எடையை குறைக்க விரும்புவோர் கத்திரிக்காயை எடுத்து கொள்ளலாம். கத்தரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், வைட்டமின் பி போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது தவிர, இதில் நல்ல அளவு நார்ச்சத்தும் உள்ளது. எனவே, கத்திரிக்காயை சாப்பிடுவது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!