5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Heart Attack: 30 நாட்களுக்கு முன்பே தோன்றும் மாரடைப்பு அறிகுறிகள்… இப்படி இருந்தால் அலட்சியம் வேண்டாம்!

Heart Attack Symptoms: மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் முதல் அறிகுறியாக நெஞ்சில் வலி ஏற்படும். இது மெதுவாக வளர்ந்து கை, தோள்பட்டை, தாடை வரை வலியை கொடுக்கும். சிலருக்கு வாந்தி கூட வரலாம். காலையில் தூங்கி எழுந்தவுடன் கண் முன் இருளாகவும், நடக்கும்போது அதிகளவிலான மூச்சுத் திணறல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வரலாம்.

Heart Attack: 30 நாட்களுக்கு முன்பே தோன்றும் மாரடைப்பு அறிகுறிகள்… இப்படி இருந்தால் அலட்சியம் வேண்டாம்!
மாரடைப்பு (Image: freepik)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 01 Nov 2024 17:53 PM

மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு வரும் என்பதை கடந்து, நவீன வாழ்க்கை முறை, நடைபயிற்சி இல்லாமை, மது அருந்துதல், புகை பிடித்தல், துரித உணவுகள் காரணமாக இளைஞர்களையும் தாக்குகிறது. இதன் காரணமாக, 40 முதல் 60 வயதுடையவர்கள் மட்டுமின்றி 20 முதல் 24 வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் இறக்கின்றனர் என்றும், அதில் 5ல் 4 இறப்புகள் மாரடைப்பால் மட்டுமே ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

பெரும்பாலானோர் மாரடைப்பு என்பது திடீரென வரும் என்று நினைக்கிறார்கள். இது பாதி தவறு, பாதி உண்மை. இதய தசையில் இரத்த ஓட்டம் குறையும் போது அல்லது நிறுத்தப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும் மற்றும் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், முழு உடலிலும் மாற்றங்கள் நிகழ்ந்து பல்வேறு அறிகுறிகள் தோன்றும். அதாவது, பெரும்பாலான மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலி, மார்பின் நடுவில் அல்லது இடது பக்கத்தில் கடுமையான வலி, அழுத்தம், அழுத்தும் உணர்வு ஏற்படலாம். இதுவே மாரடைப்பின் பொதுவான அறிகுறி என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மாரடைப்பு ஏற்படும் முன் தோன்றும் 7 அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ: Gas Problem Solution: அடிக்கடி வயிற்றில் வாயு உருவாகி தொல்லையா? உடனடி நிவாரணம் பெற என்ன செய்யலாம்?

மாரடைப்புக்கு 1 மாதத்திற்கு முன் தோன்றும் அறிகுறிகள் இவை:

  • நெஞ்சு வலி
  • அழுத்துவது போன்ற உணர்வு
  • விரைவான இதயத் துடிப்பு
  • சுவாசிப்பதில் சிரமம்
  • நெஞ்செரிச்சல்
  • சோர்வு
  • தூக்க பிரச்சனைகள்

வெளியான ஆய்வு முடிகள்:

NCBI என்ற ஆய்வு மையம் சமீபத்தில் 243 பேரிடம் ஆய்வு நடத்தியது. அதில், மாரடைப்பின் இந்த தொடக்க அறிகுறிகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் காணப்படுகின்றன. 50 சதவீத பெண்கள் மாரடைப்பு முன் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதாகவும், 32 சதவீத ஆண்களுக்கு மட்டும் இந்த அறிகுறிகள் தோன்றுவதாக கூறப்படுகிறது.

மேலும் சில அறிகுறிகள்:

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் முதல் அறிகுறியாக நெஞ்சில் வலி ஏற்படும். இது மெதுவாக வளர்ந்து கை, தோள்பட்டை, தாடை வரை வலியை கொடுக்கும். சிலருக்கு வாந்தி கூட வரலாம். காலையில் தூங்கி எழுந்தவுடன் கண் முன் இருளாகவும், நடக்கும்போது அதிகளவிலான மூச்சுத் திணறல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வரலாம். இது தவிர, மூச்சுத் திணறல், வியர்வை, கைகளில் கூச்சம் போன்ற பிரச்சனைகளும் காணப்படுகின்றன. எனவே, தொடை முதல் தொப்புள் வரை ஏற்படும் வலியை அலட்சியப்படுத்தாமல் மருத்துவர்களை தொடர்பு கொள்வது நல்லது.

பிபி, சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மேலும், தினமும் அரை மணி நேரம் நடப்பது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும்.

குளிர்காலத்தில் கவனம் தேவை:

குளிர்காலத்தில் மாரடைப்பு ஆபத்து அதிகம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது குளிர்காலத்தில் நரம்புகள் மேலும் சுருங்கி கடினமாகிவிடும். நரம்புகளை சூடாகவும், இயங்கவும் இரத்த ஓட்டம் உடலில் அதிகரிக்கும். இப்படி இரத்த அழுத்தம் அதிகரிப்பதால், மாரடைப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. மாரடைப்பு ஏற்படாமல் தவிர்க்க குளிர்காலத்தி வாக்கிங் செல்ல வேண்டும், கனமான மற்றும் வெதுவெதுப்பு தரக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.

ALSO READ: ABC Juice: ஏபிசி ஜூஸில் நன்மைகள் ஏராளம்.. இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா..?

மாரடைப்பு தவிர்க்க தினமும் என்ன செய்யலாம்..?

  • வறுத்த மற்றும் துரித உணவுகளை தவிர்த்து பச்சை காய்கறிகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.
  • எடையை கட்டுப்படுத்த, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களை கைவிட வேண்டும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News