Banana Halwa : செம்ம ருசியான வாழைப்பழ அல்வா ரெசிபி! - Tamil News | | TV9 Tamil

Banana Halwa : செம்ம ருசியான வாழைப்பழ அல்வா ரெசிபி!

Published: 

16 May 2024 22:15 PM

Recipe for banana halwa : வாழைப்பழ அல்வா செய்முறை.சும்மா வாழைப்பழத்த உறிச்சு சாப்டோமா போனோமான்னு இல்லாமல், அல்வாவா என்றுதானே கேட்கிறீர்கள். வாயில் போட்டதுமே கரைந்து போகுமளவிற்கு ருசியாக இருந்தால் வேண்மாமென்றால் சொல்வோம்.

Banana Halwa : செம்ம ருசியான வாழைப்பழ அல்வா ரெசிபி!

வாழைப்பழம்

Follow Us On

சும்மா வாழைப்பழத்த உறிச்சு சாப்டோமா போனோமான்னு இல்லாமல், அல்வாவா என்றுதானே கேட்கிறீர்கள். வாயில் போட்டதுமே கரைந்து போகும்ளவிற்கு ருசியாக இருந்தால் வேண்மாமென்றால் சொல்வோம். கால்மணி நேரம் மெனக்கெட்டால் போதும் வயிற்றுக்கும் வாயிக்கும் நல்ல ருசியான அல்வா ரெடியாகிவிடும்.

வாழைப்பழ அல்வா

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் – 3
சர்க்கரை – 4 ஸ்பூன்
நாட்டுச்சக்கரை – 6 ஸ்பூன்
நெய் – 4 ஸ்பூன்
கான்பிளவர் – 2 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 1/2 ஸ்பூன்
முந்திரி – ஸ்பூன்
பாதாம் – 2 ஸ்பூன்

செய்முறை :

முதலில் வாழைப்பழத்தை தோலை நீக்கிவிட்டு அதை நன்கு மசித்துக்கொள்ளவும்,

பிறகு ஒரு கடாயில் மசித்த வாழைப்பழம், சர்க்கரை, நாட்டுச்சக்கரை ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும்.

பின் அதோடு ஒரு ஸ்பூன் நெய்விட்டு கைவிடாமல் நன்கு கிளறவும், அடுப்பை மிதமான சூட்டிலேயே வைக்கவேண்டும். இல்லையேல் அடிபிடித்துவிடும்.

எல்லாம் கலந்து நன்கு கலவையாக வந்த பிறகு, கான்பிளவர் மாவை தண்ணீரில் ஓரளவுக்கு கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் கரைத்து அதோடு சேர்க்கவும்.

Also read: இந்த மந்திரங்களை சொல்லிப்பாருங்கள், கைமேல் பலன் கிடைக்கும்!

மீண்டும் 3 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். கான்பிளவர் சேர்த்த சில நிமிடங்களிலேயே அல்வா ஓரளவுக்கு நெய் பிரிந்து பதத்திற்கு வந்துவிடும்.

அல்வா பதத்திற்கு கடாயில் ஒட்டாமல் தனியாக பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

கடைசியாக பொடித்துவைத்திருக்கும் முந்திரி மற்றும் பாதாம் சேர்த்துக் கிளறி, அகலமான தட்டல் கொட்டி ஆறவிடவும்.

நன்கு ஆறாயதும் துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழ அல்வா தயார்.

நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
Exit mobile version