Tea Tree Oil Benefits: சருமத்திற்கு அழகை அள்ளி தரும் டீ ட்ரீ ஆயில்.. இவ்வளவு பிரச்சனைகளை சரிசெய்யும்!

Health Tips: டீ ட்ரீ ஆயில் எண்ணெய் Melaleuca alternofolia தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாவரங்கள் ஆஸ்திரேலியாவில்தான் அதிகம் வளர்கிறது. இந்த தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்கள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே, இந்த எண்ணெய் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சருமத்தை பாதுகாக்கிறது. உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த டீ ட்ரீ எண்ணெயின் பயன்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Tea Tree Oil Benefits: சருமத்திற்கு அழகை அள்ளி தரும் டீ ட்ரீ ஆயில்.. இவ்வளவு பிரச்சனைகளை சரிசெய்யும்!

டீ ட்ரீ ஆயில்

Published: 

18 Aug 2024 14:31 PM

டீ ட்ரீ ஆயில் பயன்கள்: சரும அழகு தொடர்பான விஷயங்கள் பேசும்போதெல்லாம் டீ ட்ரீ ஆயில் என்ற வார்த்தையை அடிக்கடி கேள்வி பட்டிருப்போம். பெயரில் டீ இருந்தாலும் அதற்கும் டீக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இந்த எண்ணெய் தேயிலை மர எண்ணெய் (Tea tree oil) அல்லது மெலலூகா எண்ணெய் என்று கூறலாம். இந்த டீ ட்ரீ ஆயில் எண்ணெய் Melaleuca alternofolia தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாவரங்கள் ஆஸ்திரேலியாவில்தான் அதிகம் வளர்கிறது. இந்த தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்கள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே, இந்த எண்ணெய் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சருமத்தை பாதுகாக்கிறது. உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த டீ ட்ரீ எண்ணெயின் பயன்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Cucumber Seeds: வெள்ளரி விதையில் இவ்வளவு நன்மைகளா..? தீவிர நோய்களையும் தீர்த்துக்கட்டும்!

டீ ட்ரீ ஆயிலின் பயன்கள்:

சரும அழகை பராமரிக்கும்:

முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் தழும்புகளைப் போக்கவும், சருமத்தை பளபளப்பாக மாற்றவும் டீ ட்ரீ ஆயிலை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் பருக்களை குறைத்து, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க விரும்பினால், தேயிலை மர எண்ணெய் சிறந்தது. தேயிலை மர எண்ணெயில் 2-3 துளிகள் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் கலக்கவும். இவற்றை ஒன்றாக கலந்து, கலவையை உங்கள் விரல் நுனியால் முகத்தில் தடவி, 15 நிமிடம் உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிறுநீரக பிரச்சனை:

டீ ட்ரீ ஆயில் சிறுநீர்ப்பை நோய்த்தொற்றைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும். டீ ட்ரீ ஆயில் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக உள்ளது. குளிப்பதற்கு முன் பத்து சொட்டு டீ ட்ரீ எண்ணெயை தண்ணீரில் சேர்க்கவும். அந்த நீரில் குளித்தால் சிறுநீர் பாதைக்கு அருகில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறும்.

பூஞ்சை தொற்று:

பூஞ்சையால் ரிங்வோர்ம் ஏற்படுகிறது. ஆண்டிமைகோடிக் பண்புகளைக் கொண்ட டீ ட்ரீ எண்ணெய், இந்த ரிங்வோர்மைப் போக்க உதவுகிறது. சூடான நீரில் இரண்டு துளிகள் டீ ட்ரீ எண்ணெயுடன் 2 டீஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். அந்த நீரில் பாதிக்கப்பட்ட இடங்களை 20 நிமிடம் வைத்திருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பல் சொத்தை:

பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்களுக்கு டீ ட்ரீ ஆயில் நல்ல உதவியாக இருக்கும். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயை ஆரோக்கியமாக வைக்கிறது. ஒரு கப் வெந்நீரில் இரண்டு அல்லது மூன்று துளிகள் டீ ட்ரீ எண்ணெயைச் சேர்த்து, காலையில் விழுங்காமல் வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ALSO READ: Turmeric: மஞ்சள் மகிமை.. வீட்டு கிச்சனில் இருக்கும் சூப்பர் மருந்து.. இவ்வளவு விஷயம் இருக்கா?

மேலும் சில..

  1. சிலருக்கு அதிக அளவிலான வியர்வையால் உடல் துர்நாற்றம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இந்த டீ ட்ரீ எண்ணெயை பயன்படுத்தினால், அந்த துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
  2. தோல் சம்பந்தமான எக்ஸிமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இடத்தில் டீ ட்ரீ ஆயிலை தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  3. வறண்ட சருமத்தை குணப்படுத்த தேயிலை மர எண்ணெய், பூச்சி கடித்தால் ஏற்படும் அரிப்பு, அனைத்து தோல் வகைகளுக்கும் தேயிலை மர எண்ணெய் வேலை செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
  4. இந்த டீ ட்ரீ எண்ணெயை ஒருபோதும் தோலில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது, தேங்காய், ஆலிவ், பாதாம் உள்ளிட்ட மற்ற எண்ணெய்களுடன் கலந்து பயன்படுத்தலாம்.
தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?
30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!