5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Visa Free Entry to Thailand: இந்திய பயணிகள் மகிழ்ச்சி! விசா இல்லாத நுழைவு.. காலவரையின்றி நீட்டித்த தாய்லாந்து!

Thailand: தாய்லாந்தில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. கடந்த 2023ம் ஆண்டு தாய்லாந்து நாட்டிற்கு சுமார் 1.6 மில்லியனுக்கும் அதிகமாக இந்திய சுற்றுலா பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம், தாய்லாந்தின் பொருளாதாரம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Visa Free Entry to Thailand: இந்திய பயணிகள் மகிழ்ச்சி! விசா இல்லாத நுழைவு.. காலவரையின்றி நீட்டித்த தாய்லாந்து!
தாய்லாந்து (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 05 Nov 2024 14:52 PM

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகம் தரும் வகையில், இந்திய குடிமக்களுக்கான விசா இல்லாத நுழைவு கொள்கையை தாய்லாந்து காலவரையின்றி நீட்டித்துள்ளது. முன்னதாக, இந்த அறிவிப்பானது வருகின்ற நவம்பர் 11ம் தேதி முடிவடைய இருந்தது. இதையடுத்து, புது டெல்லியில் உள்ள ராயல் தாய்லாந்து தூதரகத்தின் அதிகாரிகள், விசா இல்லாத நுழைவு கொள்கை காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்திய சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு முறையும் விசா இல்லாமல் 2 மாதங்கள் வரை தாய்லாந்தில் தங்க அனுமதிக்கபடுவார்கள்.

சுற்றுலா பயணிகள் 60 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினால், அங்குள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்து 30 நாட்களுக்கு மேல் நீட்டித்து கொள்ளலாம். இதன்மூலம், இந்திய சுற்றுலா பயணிகள் ஒரே பயணத்தில் தாய்லாந்தில் 90 நாட்கள் வரை தங்கலாம்.

ALSO READ: இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய சுற்றுலாதலங்கள் என்னென்ன தெரியுமா?

இந்தியாவிற்கு மட்டும் சிறப்பு ஆஃபர் ஏன்..?

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்கு ஈர்ப்பதற்கான தாய்லாந்து நாட்டின் திட்டமாகும். இதன்மூலம், தாய்லாந்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சுவையான தாய் உணவு, கலாச்சாரம், அழகிய கடற்கரைகள் மற்றும் ரிசார்டுகளை தேடி இந்தியர்கள் பயணம் செய்வார்கள்.

இந்தியர்களின் வருகை அதிகரிப்பு:

தாய்லாந்தில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. கடந்த 2023ம் ஆண்டு தாய்லாந்து நாட்டிற்கு சுமார் 1.6 மில்லியனுக்கும் அதிகமாக இந்திய சுற்றுலா பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம், தாய்லாந்தின் பொருளாதாரம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல், தாய்லாந்து ஊடக அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் 20, 2024க்குள் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணில்லை சுமார் 1,64 மில்லியனை எட்டியுள்ளது. இதன் காரணமாக, மலேசியா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து மூன்றாவது பெரிய சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, 2024ம் ஆண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 2 மில்லியனை எட்டும் என்று தாய்லாந்து எதிர்பார்க்கிறது.

தாய்லாந்தில் பார்க்க வேண்டிய இடங்கள்:

பாங்காக்:

தாய்லாந்தில் அதிக மக்கள்தொலை கொண்ட அழகான நகரமாக பாங்காக் உள்ளது. இந்த பெயரை நாம் அடிக்கடி டிவி மற்றும் பலர் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். பாங்காக் நகரத்தில் பல யாத்திரை இடங்கள், சுற்றுலா தலங்கள், நைட் கிளப், மார்க்கெட்கள் உள்ளன. இவை அங்கு மிகவும் பிரபலம். அதேபோல், லும்பினி பார்க், எமரால்டு புத்தர் கோயில், கிராண்ட் பேலஸ் மற்றும் வாட் ப்ரா போன்ற பாங்காக்கில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களும் உள்ளன.

கிராபி:

கிராபி தாய்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரை நகரமாகும். இங்கு புதுமண தம்பதிகள் ஹனிமூன் செல்ல சிறந்த இடமாகும் உள்ளது. இங்குள்ள அழகிய கடற்கரைக்களுக்காக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மேலும், கடற்கரையை சுற்றியுள்ள காடுகள் மக்களை அதிகம் ஈர்க்கிறது.

பூகெட்:

கிராபி போன்று பூகெட் கடற்கரையும் தாய்லாந்தில் மிகவும் பிரபலமானது. இந்த கடற்கரையில் உள்ள புத்தர் கோபுரம் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும். அதேபோல், இந்த பூகெட் கடற்கரை உலகின் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றாகவும் உள்ளது.

பட்டாயா:

பாங்காக்கில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் பட்டாயா உள்ளது. தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரம் ஒரு காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்தது. ஆனால், தற்போது உலகின் மிகவும் அழகான கிராமமாக உள்ளது. இங்கு வரும் பயணிகள் பெரும்பாலும் சிறந்த தாய் உணவுகளை ருசிக்கவே வருகின்றனர். உணவுக்கு பிறகு, பல நீர் விளையாட்டு அனுபவங்களை பெறவும் இந்திய மக்கள் அதிகம் இங்கு வருகின்றனர்.

ALSO READ: Travel Tips: சிலிர்க்க வைக்கும் சிவகங்கை மாவட்ட சுற்றுலா தளங்கள்…

அயுத்தாயா:

சியாமின் பண்டைய தலைநகரமான அயுத்தாயாவை தாய்லாந்துக்கு சென்றால் மிஸ் செய்யாமல் பார்த்து விடுங்கள். இங்கு கட்டப்பட்டுள்ள சில கோயில்களின் கட்டிடக்கலை பல நூற்றாண்டுகள் பழமையானவை. அதேபோல், இங்குள்ள தலையில்லாத புத்தர் சிலை உலகளவில் மிகவும் பிரபலம்.

தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் மறக்காமல் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு சென்று புது அனுபவங்களை பெற்று மகிழுங்கள்.

Latest News