Theni Tourism: இயற்கையை வாரி சுருட்டிக் கொண்ட தேனி.. இந்த இடத்திற்கு செல்ல மறக்காதீங்க!
Travel Tips: தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேனி முக்கியமான இயற்கை வளங்களுக்கு பெயர் போன ஊர். இங்கு இயற்கை, வரலாற்று மற்றும் கலாச்சார்த்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகள் உள்ளன. தேனியில் நீங்கள் அற்புதமான மலைத் தளங்கள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். அந்த வகையில், இன்று தேனியின் என்னென்ன சுற்றுலா தலங்கள் உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
தேனி டூர்: தேனி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி மதுரை மாவட்டத்திலிருந்து தேனி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேனி முக்கியமான இயற்கை வளங்களுக்கு பெயர் போன ஊர். இங்கு இயற்கை, வரலாற்று மற்றும் கலாச்சார்த்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகள் உள்ளன. தேனியில் நீங்கள் அற்புதமான மலைத் தளங்கள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். அந்த வகையில், இன்று தேனியின் என்னென்ன சுற்றுலா தலங்கள் உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
வைகை அணை:
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அணை வைகை அணை. இந்த வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய இரு மாவட்டங்களுக்கும் குறிப்பிடத்தக்க பாசன நீர் ஆதாரமாக உள்ளது. 111 அடி உயரம் கொண்ட இந்த அணை மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. அணைப்பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்காகப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த வைகை அணை சுற்றுலா தலத்தை அப்பகுதி மக்கள் சிறிய பிருந்தாவனம் என்று அழைக்கின்றனர். வைகை அணை ஆண்டிப்பட்டியில் இருந்து சரியாக 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சுருளி அருவி:
சுருளி நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சியாகும். சுருளி நீர்வீழ்ச்சியில் உள்ள 18 குகைகள் அவற்றின் 18 ஆம் நூற்றாண்டின் இந்திய பாறை வெட்டப்பட்ட கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றவை. சுருளி அருவியும் ஒரு வற்றாத ஜீவ நதியாக பார்க்கப்படுகிறது. இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு தனித்தனியே வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேனியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் சுருளி அருவியை அடைந்து விடலாம்.
மேகமலை:
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையின் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேகங்களால் நிரம்பியிருக்கும் மேகமலை பச்ச குமாச்சி என அழைக்கப்படுகிறது. மலை ஏறி நீங்கள் உச்சிக்கு சென்றவுடன், மேகம் உங்கள் தலைக்கு மேல் மிக அருகில் செல்லும். அதற்காகவே, இந்த தனித்துவமான மலை மேகமலை என்று பெயர் பெற்றது.
போடிநாயக்கனூர்:
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, போடிநாயக்கனூரை “தெற்கு காஷ்மீர்” என்று குறிப்பிட்டார். அந்த அளவிற்கு போடிநாயக்கனூர் அழகுக்கு பெயர் பெற்ற ஊர். ஆண்டுதோறும் இங்கு ஏராளமான பணப்பயிர்களும், மசாலா பொருட்களும் பயிரிடப்படுகிறது. ஏலக்காய் அதிகம் உற்பத்தி செய்யப்படும் ஊர்களில் போடிநாயக்கனூரும் ஒன்று. இங்கு ஏராளமான பல தமிழ் திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
பெரிஜாம் ஏரி:
தேனியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பேரிஜம் ஏரி, இப்பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இருபுறமும் மலைகளால் சூழப்பட்ட இந்த நீர்நிலையானது இயற்கையான சூழலின் சில அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. குடும்பத்துடன் பாதுகாப்பாக இங்கே வளம் வரலாம்.
ஆனையிரங்கால் அணை நீர்த்தேக்கம்:
தேனியில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமான ஆனையிரங்கால் அணை நீர்த்தேக்கம், நீங்கள் பார்வையிட எப்போதும் மறவாதீர்கள். தேயிலைத் தோட்டங்களும், செழுமையான தாவரங்கள் நிறைந்த மலைகளும் இந்த இடத்தின் இயற்கை அழகைக் கூட்டுகின்றன. இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி யானைகள் இங்கு வந்து தண்ணீர் குடிப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை நீங்கள் செல்லும்போது, யானை தண்ணீர் குடித்தால் அது உங்கள் அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.
ALSO READ: Travel Tips: வீக் எண்ட் லாங் டிரைவ் பிளானா? மும்பையில் இந்த இடங்களை மறக்காமல் விசிட் பண்ணுங்க!
கும்பக்கரை அருவி:
கும்பக்கரை அருவி என்ற பெயரை நாம் அடிக்கடி கேள்வி பட்டிருப்போம். ஆனால், அது எங்கிருக்கிறது என்பதை பலருக்கும் தெரிவதில்லை. கும்பக்கரை அருவி அதிகம் அறியப்படாத நீர்வீழ்ச்சி கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் உள்ளது என்றாலும், இந்த நீர்வீழ்ச்சி ஆண்டு முழுவதும் ஏராளமான பயணிகளை ஈர்க்கிறது. வாய்ப்பு இருப்பின் இங்கேயும் ஒருமுறை சென்று வாருங்கள்.