5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Walking Benefits: தினமும் 30 நிமிடங்கள் நடந்து பாருங்க.. உடலில் இந்த 8 மாற்றங்கள் நிகழும்…!

Health Tips: உடற்பயிற்சி, ஓடுதல் போன்றவற்றை செய்ய முடியாவிட்டாலும் சில நிமிடங்கள் நடப்பது நன்மை தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நடைபயிற்சிக்கு அதிக முயற்சியும் செய்ய தேவையில்லை, அதிக நேரத்தையும் செலவழிக்க தேவையில்லை. நடைபயிற்சி நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நமது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

Walking Benefits: தினமும் 30 நிமிடங்கள் நடந்து பாருங்க.. உடலில் இந்த 8 மாற்றங்கள் நிகழும்…!
நடைபயிற்சி (Image: GETTY)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 26 Oct 2024 18:20 PM

நவீன வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கங்கள் காரணமாக நமது ஆரோக்கியத்தில் பலவிதமான தாக்கம் ஏற்படுகிறது. இதனால், சிறுவயது முதலே குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்க்கு ஆளாகின்றன. இவற்றில் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் ஒன்று. தொடர்ந்து, வயிற்று வலி, கொழுப்பு கல்லீரல், உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இந்த காலத்தில் பெரும்பாலான மக்கள், வேலை பளு காரணமாக வீட்டைவிட்டு வெளியே எங்கையும் செல்வது கிடையாது. இதனால், உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க விரும்புவது இல்லை.

உடற்பயிற்சி, ஓடுதல் போன்றவற்றை செய்ய முடியாவிட்டாலும் சில நிமிடங்கள் நடப்பது நன்மை தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நடைபயிற்சிக்கு அதிக முயற்சியும் செய்ய தேவையில்லை, அதிக நேரத்தையும் செலவழிக்க தேவையில்லை. நடைபயிற்சி நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நமது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அந்தவகையில், தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்வதால்கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Mayonnaise Side Effects: மயோனைஸ் லவ்வரா நீங்கள்..? இதயத்திற்கு இவ்வளவு ஆபத்தை தரும்..!

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

எடை பருமன் குறையும்:

ஜிம்மிற்கு சென்று அதிக எடை தூக்கி உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், எடையை கட்டுக்குள் வைக்க தினமும் சில நிமிடங்கள் நடக்கலாம். இதனால். நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து, உடல் எடையும் குறையும். நடப்பது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம், நமது செரிமான அமைப்பை மேம்படுத்தும்.

இதய ஆரோக்கியம்:

தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற பல நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். மேலும், நடைபயிற்சி இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக இயக்க உதவி செய்வதுடன், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

எலும்புகள் வலுவடையும்:

ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடப்பது மூலம், நமது எலும்புகள் வலுவடையும், தசைகளும் வலுவடையும். தசைப்பிடிப்பு, எலும்பு வலி மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என்பது கிடையாது. ஆனால், தினமும் நடைபயிற்சி செய்வதன் மூலம், அதை கணிசமாக குறைக்கலாம். மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தினமும் நடப்பது நல்லது.

ஆற்றல் அளவு:

நடைபயிற்சி உங்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்யும். அன்றாட வாழ்வில் காலை உணவை உண்டுவிட்டு வேலைக்கு செல்வதும், வழக்கமான வேலைகளை செய்துவிட்டு தூங்குவது பல தீமைகளை தரும். இதனால், உடலின் செயலற்ற தன்மை உங்களை ஆற்றலை இழக்க செய்யும். மாறாக, இது நடைபயிற்சி உங்களுக்கு ஆற்றலை தருவது மட்டுமின்றி, உற்சாகத்தை தரும்.

ALSO READ: Daily Shaving: தினமும் ஷேவ் செய்வது நல்லதா..? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷேவ் செய்யலாம்?

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

அடிக்கடி வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதை குறிக்கும். ஒரு நபர் தொடர்ந்து பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியால் பாதிக்கப்பட்டால், அது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். அந்தவகையில், தினமும் சில நிமிட நடைப்பயிற்சி நமது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

சர்க்கரை நோய்:

தினமும் காலையில் குறைந்தது 30 நிமிடங்கள் நடப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும். சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும், நல்ல உணவை பின்பற்றுவது மட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும்.

இரத்த அழுத்தம்:

இரத்த அழுத்தத்தால் சிரமப்படுவோர், தினமும் காலையில் 30 நிமிட நடைப்பயிற்சி செய்வது நல்லது. இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும்.

மன அழுத்தத்தை குறைக்கும்:

மற்ற உடற்பயிற்சிகள் போல் இல்லாமல் நடப்பது மன ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, அது உங்கள் மனதை தளர்த்துவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News