5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pregnant: நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவிப்பா..? இந்த 7 வழிமுறைகள் பலன் தரும்..!

How to Get Pregnant: பெண்கள் விரைவாக கர்ப்பம் தரிக்க வேண்டுமானால், இதற்கு சரியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். சில தம்பதிகள் அதிக முயற்சி இல்லாமல் எளிதான கருத்தரிக்கும் வேளைகளில், சில தம்பதிகள் கருத்தரிக்க மாதங்கள் மற்றும் சில நேரங்களில் ஆண்டுகள் எடுக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்தவகையில் கர்ப்பம் தரிக்க 7 முக்கிய வழிமுறைகளை பின்பற்றி, நல்ல பலன்கள் கிடைக்கும்.

Pregnant: நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவிப்பா..? இந்த 7 வழிமுறைகள் பலன் தரும்..!
கர்ப்பம் (Image: Freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 08 Nov 2024 17:36 PM

சில தம்பதிகள் திருமணம் செய்து பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. சில தம்பதிகள் எப்போது ஒன்றாக இணைவது என்பது தெரியாது. இதனால் கர்ப்பம் தரிக்க முடியாமல் போய்விடுகிறது. அந்தவகையில், கர்ப்பம் தரிக்கவும், இந்த தடைகளை நீக்கவும், கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கவும் விரும்புவோர், சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கருத்தரிப்பதற்கு சில எளிதான விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் குழந்தை கனவை நனவாக்கலாம்.

விரைவாக கர்ப்பம் தரிக்க வேண்டுமானால், இதற்கு சரியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். சில தம்பதிகள் அதிக முயற்சி இல்லாமல் எளிதான கருத்தரிக்கும் வேளைகளில், சில தம்பதிகள் கருத்தரிக்க மாதங்கள் மற்றும் சில நேரங்களில் ஆண்டுகள் எடுக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்தவகையில் கர்ப்பம் தரிக்க 7 முக்கிய வழிமுறைகளை பின்பற்றி, நல்ல பலன்கள் கிடைக்கும்.

ALSO READ: Stomach Pain: சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!

அண்டவிடுப்பின் நாள்:

கர்ப்பம் தரிக்க விரும்பும் தம்பதியினர் மாதவிடாய் முடிந்த 12ம் நாள் சேருவது நல்லது. அதன்பிறகு, 14ம் நாளில் கருமுட்டை உருவாகி, கருத்தரிக்க உதவி செய்யும். இத்தகைய செயல் அண்டவிடுப்பின் நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் கருப்பை வாய் அதிக ஈரப்பதத்துடன் இருக்கும்.

மாதவிடாய் நெருங்கும்போது, பெண்களின் உடலில் வெப்பநிலை வேறுபாடு ஏற்படும். இது அண்டவிடுப்பின் அறிகுறியாகும். அண்டவிடுப்பின்போது கருப்பை வாய் சிறிது திறந்திருக்கும். இது கரு உருவாக வழிவகுக்கும். பல வருடங்களாக கருத்தரிக்க முடியாமல் தவிப்பவர்கள் இதை செய்யுங்கள்.

கருத்தடை மாத்திரை:

பெரும்பாலான தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு, விரைவில் குழந்தை பெற விரும்பாவதவர்களும், தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், நீங்கள் குழந்தைக்கு தாயாக விரும்பினால், இந்த கருத்தடை மாத்திரைகளை பல மாதங்களுக்கு முன்பே நிறுத்துவது நல்லது.

அதேபோல், கருத்தடை மாத்திரைக்கு பதிலாக ஹார்மோன் கருத்தடை, ஊசி போன்றவற்றை நீங்கள் எடுத்துக்கொண்டாலும், இவற்றை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

மாதவிடாய் சுழற்சி:

விரைவில் கர்ப்பமாக இருக்க விரும்பும் பெண்கள், உங்கள் மாதவிடாய் சுழற்சியை பற்றி நன்கு அறிவது மிகவும் முக்கியம். உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக இருந்தால், அதாவது சில நாட்கள் முன்னதாகவோ, சில நாட்கள் தாமதமாகவோ வந்தால் மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.

இது பிசிஓடி அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையாக இருக்கலாம். ஏனெனில், இந்த நோய்கள் கர்ப்பம் தரிப்பதை தடுக்கும்.

உடலுறவுக்கான நேரம்..?

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை இயற்கையாகவே காலையில் அதிகமாக இருக்கும். எனவே, காலையில் உடலுறவு கொள்வது நன்மை தரும். அதிகாலையில் உடலுறவு கொள்வது புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால், உங்கள் துணையின் கருமுட்டைக்குள் செல்லும்.

முதுகு புறம் படுத்து கொள்ளுங்கள்:

உடலுறவுக்கு பிறகு 10-15 நிமிடங்கள் படுக்கையில், பெண்கள் முதுகு படுமாறு தூங்குவது நன்மை பயக்கும். ஏனெனில், இது கருப்பை வாயில் விந்தணுவின் இயக்கத்தை எளிதாக்குகிறது. உடலுறவு மேற்கொண்டபிறகு, உடனடியாக கழிப்பறைக்கு சென்று சிறுநீர் கழிப்பதை தடுக்கவும்.

அதிக எடை:

அதிக எடை பருமன் பிரச்சனை உள்ளவர்களும், கர்ப்பம் தரிப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். இதையடுத்து, போதுமான அளவு எடையை குறைப்பது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அதேபோல், பெண்கள் மற்றும் ஆண்கள் என யாராக இருந்தாலும் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்துவது மிக முக்கியம். இவற்றை உட்கொள்வதும் குழந்தை பிறக்கும் வாய்ப்பை குறைக்கும்.

ALSO READ: Vitamin D: மழை, குளிர் காலத்தில் அதிகரிக்கும் வைட்டமின் டி குறைபாடு… இந்த பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்?

உணவு விஷயத்தில் கவனம்:

வறுத்த மற்றும் துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். முடிந்தவரை, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றிலிருந்து விடுபட, உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். இவை கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News