வெறும் வயிற்றில் காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்! - Tamil News | these foods should be avoided in breakfast even though it is healthy | TV9 Tamil

வெறும் வயிற்றில் காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Updated On: 

19 Sep 2024 14:55 PM

Breakfast: சில உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறப்படுகிறது. காலையில் காலை உணவு சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது அவசரமாக ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டாலோ சோர்வு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

வெறும் வயிற்றில் காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கோப்புப் படம் (Photo Credit: Monica Bertolazzi/Moment/Getty Images)

Follow Us On

காலை உணவு என்பது இது நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. ஒருவர் காலையில் காலை உணவு சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது அவசரமாக ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டாலோ சோர்வு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம். மறுபுறம், நீங்கள் காலையில் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் முறையில்லாமல் நாம் உண்ணும் உணவு கூட சில நேரங்களில் நம் உடலை பாதிக்கிறது. குறிப்பாக  ஆனால் சில ஆரோக்கியமான உணவுகளை கூட காலை உணவாக அவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

அந்த உணவுகளில் கலோரிகள் அதிகம் என்பதால், வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு அதிகரித்து, எடை கூடும். எனவே, காலை உணவில் வெல்லம், கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சில உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறப்படுகிறது. எனவே காலை உணவாக அவற்றை எடுத்துக்கொள்ளாதீர்கள்.

பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திஸ்: பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகளில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. இவற்றை காலையில் வெறும் வயிற்றில் காலை உணவாக உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது தவிர, நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மீண்டும் பசி உணர்வு சிறிது நேரத்தில் ஏற்படுகிறது. அதிக சர்க்கரை கலக்காத நார்ச்சத்து அதிகம் இருக்கும் ஸ்மூத்திகள் குடிக்கலாம்.

தயிர்: தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் இருந்தாலும் இதில் சர்க்கரை அதிகம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், காலை உணவாக இதை உட்கொள்வது அதிக கலோரிகளை சேர்க்கும். மேலும், சிறிது நேரம் கழித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும்.

வாழைப்பழம்: இதில் பல ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளன. இருப்பினும், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அளவு அதிகரிக்கிறது. அப்போது இதயத் துடிப்பில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Also Read: மாதுளை பழத்துக்குள் ஒளிந்திருக்கும் பலநூறு நன்மைகள்!

எண்ணெய் பலகாரங்கள்: காலையில் வெறும் வயிற்றில் எண்ணெய் பொருட்களை சாப்பிட்டால் வாந்தி, நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புசம், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

புளிப்பான உணவுகள்: வெறும் வயிற்றில் புளிப்பான உணவுகளை சாப்பிடுவதால் தொண்டையில் அசவுகரியம் ஏற்படும். புளிப்பான உணவுகள் வயிற்றில் ஒரு விதமான கெட்ட பாக்டீரியாக்களை உருவாக்கி வாந்தி, மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். எனவே பழங்களாக இருந்தால் கூட புளிப்புச் சுவை மிக்க பழங்களை தவிர்ப்பது நல்லது.

இனிப்பு வகைகள்: பெரும்பாலும் எல்லோரும் இனிப்பு வகையை எந்த நேரத்தில் கொடுத்தாலும் சாப்பிட தயாராக இருப்பார்கள். அந்த அளவுக்கு இனிப்பின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இனிப்பு பண்டங்களை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நெஞ்சில் ஒருவித புளிப்பு தன்மையை ஏற்படுத்துகிறது.

அசைவ உணவுகள்: அசைவ உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது.

பேரிக்காய்: பேரிக்காயின் நார் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் இதை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது வயிற்று வலி மற்றும் சளி சவ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பச்சை காய்கறிகள்: பச்சைக் காய்கறிகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும் அதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் அமினோ அமிலங்கள் அதிக அளவில் இருப்பதால் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். சில நேரங்களில் அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.

எனவே காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. எனவே, காலை உணவு எப்போதும் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை காலை உணவாக சாப்பிடுவதால் பசி குறைகிறது. எடையைக் வெகுவாக குறைக்கிறது.

Also Read: Exclusive: சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிடக்கூடாது..? டாக்டர் அட்வைஸ்!

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version