Health tips: வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்.. இந்த பிரச்சனைகளை தரும்! - Tamil News | These foods should be completely avoided on an empty stomach | TV9 Tamil

Health tips: வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்.. இந்த பிரச்சனைகளை தரும்!

Updated On: 

21 Jul 2024 13:53 PM

Empty Stomach: காலை உணவு என்பது பொதுவாக வெறும் வயிற்றில் நாம் உண்ணும் உணவாகும். இது ஆரோக்கியத்தை தருவதுடன் செரிமானத்தை மேம்படுத்தவும், முக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அப்படி இருக்க, நாம் வெறும் வயிற்றில் இருக்கும்போது நாம் தேர்வு செய்யும் உணவுகள் உங்களை பெரிய சிக்கலில் தள்ளலாம். எனவே, வெறும் வயிற்றில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை இங்கே பார்க்கலாம்.

Health tips: வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்.. இந்த பிரச்சனைகளை தரும்!

Empty Stomach

Follow Us On

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்: ஆரோக்கியமான ஊட்டச்சத்து நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. காலையில் எழுந்தவுடன் நாம் எடுத்துகொள்ளும் உணவுகள்தான் அன்றைய தினம் நமக்கு எப்படி செல்லும் என்பதை தீர்மானிக்கும். காலை உணவு என்பது பொதுவாக வெறும் வயிற்றில் நாம் உண்ணும் உணவாகும். இது ஆரோக்கியத்தை தருவதுடன் செரிமானத்தை மேம்படுத்தவும், முக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அப்படி இருக்க, நாம் வெறும் வயிற்றில் இருக்கும்போது நாம் தேர்வு செய்யும் உணவுகள் உங்களை பெரிய சிக்கலில் தள்ளலாம். எனவே, வெறும் வயிற்றில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை இங்கே பார்க்கலாம்.

Also read: Salt Expiry Date: உப்புக்கு காலாவதி தேதி உள்ளதா..? கெட்டுப்போனதை எப்படி அறிந்துகொள்வது..?

சிட்ரஸ் பழங்கள்:

ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இது குடலில் அமில உற்பத்தியை அதிகரித்து, அழற்சி மற்றும் இரைப்பை புண்களை உண்டாக்கும். இதையேதான் நாம் அல்சர் என்று அழைக்கிறோம். மேலும், இத்தகைய பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பிரக்டோஸ் உள்ளதால் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கவும் செய்யும்.

காபி:

காலையில் எழுந்தவுடன் மக்கள் முதலில் விரும்புவது டீ மற்றும் காபியைதான். ஆனால், வெறும் வயிற்றில் காபியை அருந்துவதும் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். காபி அருந்துவதால் செரிமான அமைப்பில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரப்பை தூண்டுகிறது. இது இரப்பை அழற்ஜியை ஏற்படுத்தும். மேலும், வெறும் வயிற்றில் காபி குடித்தால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் தரும்.

தயிர்:

வெறும் வயிற்றில் தயிர் போன்ற புளித்த பால் பொருட்களை உட்கொள்வதால், தயிரில் உள்ள லாக்டிக் அமில பாக்டீரியாக்கள், வயிற்றில் அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தும். அதிக அமில அளவு காரணமாக, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியாகி, வாய் துர்நாற்றம், வயிற்று வலி மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

சாலடுகள்:

சாலட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பச்சைக் காய்கறிகள் மதிய உணவிற்கு சிறந்த தேர்வாக இருக்கலாம். ஆனால், காலை உணவிற்கு ஏற்றது கிடையாது. பச்சைக் காய்கறிகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது வெறும் வயிற்றில் கூடுதல் சுமையை ஏற்றி, வாய்வு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். உதாரணமாக, தக்காளியில் டானிக் அமிலம் உள்ளது. இது வயிற்றில் உள்ள இரைப்பையை தூண்டி, வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும்.

பழச்சாறுகள் (ஜூஸ்):

இங்கு பழச்சாறுகள் என்று சொன்னவுடன் பலரும் ஆச்சரியப்படலாம். ஆனால், இதிலும் ஆபத்து இல்லாமல் இல்லை. இதை வெறும் வயிற்றில் எடுத்துகொள்வது, கணையத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். பழங்களில் உள்ள பிரக்டோஸ் வடிவில் உள்ள சர்க்கரை உங்கள் கல்லீரலையும் பாதிக்கலாம். மேலும், இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்துவதுடன், உடல் பருமனையும் அதிகரிக்க செய்கிறது.

Also read: Jeera Water Benefits: உடலை ஆரோக்கியமாக்கும் சீரக தண்ணீர்.. தினமும் குடிப்பதால் பல நன்மைகள்!

மேலும் சில..

  • அதிக காரமுள்ள மற்றும் மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்கும்.
  • கார்பனேற்றன் செய்யபட்ட கோக் போன்ற பானங்கள் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version