Travel Tips: அக்டோபரில் சுற்றுலா செல்ல திட்டமா..? மலையேற்றம் செய்ய சிறந்த இடங்கள் இதோ!
Trekking Places: மலையேற்றத்தின்போது அழகிய மலை பகுதிகள், காடுகள் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றையில் நடக்க வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு மன நிம்மதியை தரும். பொதுவாக அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்கள் நீண்டநேரம் நடப்பது அல்லது மலையேறும்போது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்தவகையில், இன்று இந்தியாவில் எந்தெந்த இடங்கள் மலையேற்றம் மற்றும் முகாமிடுவதற்கு சிறந்தவை என்று இங்கே பார்க்கலாம்.
இன்றைய கால இளைஞர்களுக்கு பயணம் என்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. வேலை நாட்களை தவிர்த்து கிடைக்கும் விடுமுறை நாட்களில் தங்கள் பைகளை பேக் செய்து பிடித்த ஊர்களுக்கு கிளம்பி விடுகிறார்கள். பயணத்தை போன்று இப்பொதெல்லாம் பலர் மலையேற்றத்தையும் விரும்புகிறார்கள். மலையேற்றத்தின்போது அழகிய மலை பகுதிகள், காடுகள் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றையில் நடக்க வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு மன நிம்மதியை தரும். பொதுவாக அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்கள் நீண்டநேரம் நடப்பது அல்லது மலையேறும்போது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்தவகையில், இன்று இந்தியாவில் எந்தெந்த இடங்கள் மலையேற்றம் மற்றும் முகாமிடுவதற்கு சிறந்தவை என்று இங்கே பார்க்கலாம்.
ALSO READ: Acne Tips: 30 வயதுக்கு பிறகும் முகத்தில் பருக்கள் வருகிறதா? இவை காரணங்களாக இருக்கலாம்!
கீர்கங்கா ட்ராக்:
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கீர்கங்கா என்ற மத ஸ்தலமும் மலையேற்றத்திற்கு மிகவும் பிரபலமான ஒரு இடமாக உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கீர்கங்கா வழியாக ஏறி பார்வதி கணவாயை சென்றடையலாம். ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அக்டோபர் மாதமான இந்த மாதம் இங்கே செல்ல சரியான நேரம். இங்கு மலையேற்றத்திற்கு பல வழிகள் உள்ளன. டூரிஸ்ட் இடம் என்பதால் இது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு செல்ல வேண்டுமென்றால் உள்ளூர் வழிகாட்டியின் உதவியை நாடுவது நல்லது.
டோடிடல் ட்ராக்:
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள டோடிடல் மலையேற்றத்திற்கும் மிகவும் பிரபலமான இடமாகும். இந்த மலையேற்றமானது சங்கம் பட்டி கிராமத்தில் இருந்து தொடங்கி உங்களுக்கு அழகான நினைவுகளை தரலாம். மலையேற்றத்தின் போது, கங்கோத்ரி பள்ளத்தாக்கின் பனி நிறைந்த வழியாக நெடு மரங்களையும், சிகரங்களையும் காணலாம். வழிகளில் நீங்கள் செல்லும்போது சில கிராமங்களில் கூடாரம் போட்டு அழகிய இரவையும் நீங்கள் கழிக்கலாம்.
குஞ்சா கடக் ட்ராக்:
குஞ்சா காரக் மலையேற்ற பாதை உத்தரகாண்டில் உள்ள பங்கோட்டில் இருந்து தொடங்குகிறது. பெரிய பெரிய மரங்களுக்கு நடுவே காடு வழியாக பாதையில் செல்லும் பயணத்தை ரசிக்கலாம். நேபாளம் மற்றும் இந்தியாவின் எல்லையை பிரிக்கும் குஞ்ச் சாலையில் ரப்தி நதி தெரியும். இந்த இடத்தில் மலையேற்றத்திற்கு அக்டோபர் சிறந்ததாக இருக்கும்.
சீதாபனி ட்ராக்:
சீதாபனி ட்ராக் மலையேற்றம் உத்தரகண்ட் மாநிலம் ஜிம் கார்பெட்டில் உள்ள சீதாபனி கோயிலில் இருந்து தொடங்கி போலா கோயிலில் முடிவடைகிறது. இந்த அடர்ந்த காடுகளின் வழியாக ஒருவர் 8 முதல் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டிய சூழல் ஏற்படும். அடர்ந்த மரங்கள் மட்டுமின்றி சிங்கம், யானை, யானை போன்ற வனவிலங்குகளும் செல்லும் வழிகளில் காணலாம். எனவே, இங்கு செல்லும்போது உள்ளூர் வழிகாட்டியின் வழிகாட்டுதல் படி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வது நல்லது.
பின்சார் ஜீரோ பாயிண்ட்:
உத்தரகாண்ட் கபின்சர்பி மலையேற்றத்திற்கு சிறந்த இடமாக உள்ளது. இங்கு இயற்கையின் அழகிய காட்சியுடன், பல வகையான பறவைகளையும் இங்கு காணலாம். பின்சார் வனவிலங்கு சரணாலயம் வழியாக செல்லும் இந்த பாதை மிகவும் எளிதான அழகிய பாதையாகும்.
மலையேற்றத்திற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கடைப்பிடிப்பது மிக மிக முக்கியம். அதன்படி, மலையேற்றத்திற்கு முன் முதலில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம். இதற்குப் பிறகு, சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து, போதுமான அளவு தண்ணீர் மற்றும் உணவை எடுத்துக்கொள்வது நல்லது. அதேபோல், மலையேற்ற பாதை பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. மலையேற்றத்திற்கு தேவையான ஷூ மற்றும் செருப்புகளை எடுத்து வைத்து கொள்ளுங்கள். வானிலைக்கு ஏற்ப இடத்தை திட்டமிடுவது முக்கியம். இது தவிர, சில நேரங்களில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மருத்துவப் பெட்டியையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
குடும்பத்தை அழைத்து செல்ல விரும்பினால் முதலில் நீங்கள் அந்த இடத்திற்கு சென்று பாதுகாப்பான இடமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அங்கு சென்று குடும்பத்துடன் கஷ்ட வேண்டிய சூழல் இருக்காது.