Bathing Tips: குளிக்கும் முன்னும் பின்னும் செய்யக்கூடாத விஷயங்கள்.. இது பக்கவாதத்தை ஏற்படுத்தும்! - Tamil News | Things not to do before and after bathing; health tips in tamil | TV9 Tamil

Bathing Tips: குளிக்கும் முன்னும் பின்னும் செய்யக்கூடாத விஷயங்கள்.. இது பக்கவாதத்தை ஏற்படுத்தும்!

Published: 

05 Oct 2024 12:38 PM

Bathing Mistakes: உணவு உண்ட பிறகு உடனே குளிக்கக் கூடாது. நீங்கள் குளிக்க வேண்டும் என்றால் உணவு உண்ணும் முன்னோ அல்லது சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். ஏனெனில் உணவு உண்ட பிறகு நமது செரிமான அமைப்பில் ஒரு வகை சூடு உண்டாகி உணவை ஜீரணிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். நாம் குளிக்கும்போது தண்ணீர் உடலில் படும்போது உடல் வெப்பநிலை குறைக்கிறது.

Bathing Tips: குளிக்கும் முன்னும் பின்னும் செய்யக்கூடாத விஷயங்கள்.. இது பக்கவாதத்தை ஏற்படுத்தும்!

குளியல் (Image: freepik)

Follow Us On

நவீன வாழ்க்கையில் சாப்பிடும் உணவுகளில் கவனம் செலுத்தும் நாம், எப்படி குளிக்க வேண்டும், எப்போது குளிக்க வேண்டும் என்ற சில விஷயங்களை பற்றி கவலை படுவதில்லை. நம் அன்றாட வாழ்வில் சில விஷயங்களை செய்து முடித்த உடனே குளிப்பதால் சில பிரச்சனைகளை உடல் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் சில வேலைகளை செய்துவிட்டு குளிப்பதை தவிர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதுகுறித்து, உங்களுக்கு இங்கு நாங்கள் சொல்கிறோம்.

நேரம் கெட்ட நேரத்தில் குளிப்பது நமக்கு சளி, இருமல், தலைவலி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை மட்டும் தராமல், பக்கவாதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பை தரும். அந்தவகையில், இன்று குளிக்கும் முன்னும் பின்னும் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Pepper Benefits: எடை குறைப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. சிறந்த பலனை தரும் மிளகு..!

குளிக்கும் முன்னும் பின்னும் செய்யக்கூடாத விஷயங்கள்:

வெளியில் இருந்து வந்தவுடன்:

எங்கேயாவது நடந்து வந்த பிறகோ அல்லது நீண்ட நேரம் வாகனம் ஓட்டியபிறகு வீட்டுக்கு வருவீர்கள். வீட்டிற்கு வந்தவுடனே குளிக்கவோ அல்லது முகம் கழுவவோ கூடாது. இதை செய்வதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஓய்வு எடுங்கள். அதன்பின் குளியுங்கள்.

ஏனென்றால், நாம் வெளியில் சென்று நீண்ட நேரம் நடந்தோ அல்லது வாகனம் ஓட்டியதன் காரணமாக உங்கள் உடலில் சூடு கணிசமாக அதிகரித்திருக்கும். இத்தகைய சூழ்நிலையில், உடலில் உடனடியாக நீர் படும்போது நமது உடலில் சூடு கிளம்பி சளி, இருமல், தலைவலி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனையை தரும்.

உணவுக்கு உண்ட பிறகு:

உணவு உண்ட பிறகு உடனே குளிக்கக் கூடாது. நீங்கள் குளிக்க வேண்டும் என்றால் உணவு உண்ணும் முன்னோ அல்லது சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். ஏனெனில் உணவு உண்ட பிறகு நமது செரிமான அமைப்பில் ஒரு வகை சூடு உண்டாகி உணவை ஜீரணிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். நாம் குளிக்கும்போது தண்ணீர் உடலில் படும்போது உடல் வெப்பநிலை குறைக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், வெப்பமும் குளிர்ச்சியும் சேர்ந்து உணவு செரிமான செயல்முறையை பாதிக்க செய்யும்.

உணவு உண்ட சிறிது நேரத்தில் குளிக்கும்போது அஜீரணம் ஏற்பட்டு, மலச்சிக்கலை உண்டாக்கும். இதனால், அந்த நபருக்கு காய்ச்சல் மற்றும் தலைவலியும் ஏற்படும். நீண்ட நாட்கள் ஒருவர் சாப்பிட்ட உடன் குளிப்பதை வழக்கமாக்கி கொண்டால், பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

டீ மற்றும் குளிர்பானங்கள்:

டீ அல்லது காபியை குளித்தால் 1 மணி நேரம் கழித்து கூட குளிக்கலாம். ஆனால், இளநீர் குடித்தால் குறைந்தது 2 மணி நேரத்திற்கு பிறகு குளிப்பதே நல்லது.

நாம் சூடான பானங்களை உட்கொள்ளும்போது, ​​அவற்றின் வெப்பநிலை சாதாரண உணவின் வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும். இதன் காரணமாக நமது உடல் வெப்பநிலை அதிகரிக்கும். இதன் காரணமாக உங்கள் உடல் வெப்பநிலை குறைய குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் ஆகும்.

காலையில் எழுந்தவுடன்:

காலையில் எழுந்தவுடன் ஷவரில் குளிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? அப்படி பழக்கம் கொண்டவராக இருந்தால் உடனே மாற்றி கொள்ளுங்கள். இப்படி செய்வது உங்கள் இதயம் மற்றும் பிபி தொடர்பான பிரச்சனையை உண்டாக்கும்.

தூங்கும்போது நமது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதுடன், இரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகமாக இருக்கும். தூங்கி எழுந்ததும் நேராக குளிக்கும்போது குளிர் மற்றும் வெப்பமும் சேர்ந்து உடலை பாதிப்படைய செய்யும். எனவே, காலையில் எழுந்தவுடன் குறைந்தது அரை மணி நேரம் கழித்து குளிப்பது நல்லது.

ALSO READ: Health Tips: அடிக்கடி இரவில் அதிகளவில் வியர்க்கிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்!

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி, யோகா, நடனம் போன்றவைகளில் ஈடுபடும்போது நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மக்கள் வெப்பம் மற்றும் வியர்வையைத் தவிர்க்க நடனம் அல்லது உடற்பயிற்சி செய்த உடனேயே குளிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடல் நலம் பாதிக்கப்படும்.

எனவே, உடற்பயிற்சி முடிந்த பிறகு இதய துடிப்பு இயல்பானதும் குளிக்க செல்லுங்கள். எனவே, உடற்பயிற்சிக்கு பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் கழித்து குளிப்பது நல்லது.

உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
Exit mobile version