Tattoo Care Tips: டாட்டூ குத்த போகிறீர்களா? இந்த விஷயங்களை தெரிஞ்சுகிட்டு போங்க..!
Tips for Tattooing: நீங்களோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களோ டாட்டூ குத்த திட்டமிட்டால், நிபுணத்துவம் வாய்ந்த டாட்டூ ஆர்ட்டிஸ்டிடம் டாட்டீ குத்தி கொள்ளுங்கள். சாலையோரங்களில் பச்சை குத்திக்கொள்வது பணத்தை சிக்கனப்படுத்தி கொள்ளும் என்றாலும், எச்.ஐ.டி மற்றும் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் எப்போது டாட்டூ குத்துகிறீர்களோ, அந்த டாட்டூ போடும் ஊசி புதியதா என்பதை ஒன்றுக்கு 2 முறை சோதித்து பாருங்கள்.
உலகம் முழுவதும் பச்சை குத்தி கொள்ளும் பழக்கம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையோரம் முதல் பெரிய மால்கள் வரை டாட்டூ கலைஞர்கள் இப்போது அதிகமாகி கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், நீங்களோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களோ டாட்டூ குத்த திட்டமிட்டால், நிபுணத்துவம் வாய்ந்த டாட்டூ ஆர்ட்டிஸ்டிடம் டாட்டீ குத்தி கொள்ளுங்கள். சாலையோரங்களில் பச்சை குத்திக்கொள்வது பணத்தை சிக்கனப்படுத்தி கொள்ளும் என்றாலும், எச்.ஐ.டி மற்றும் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் எப்போது டாட்டூ குத்துகிறீர்களோ, அந்த டாட்டூ போடும் ஊசி புதியதா என்பதை ஒன்றுக்கு 2 முறை சோதித்து பாருங்கள்.
அந்தவகையில், இன்று டாட்டூ போடுவதற்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம்.
இவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும்:
டாட்டூ குத்த போகிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு முன்பு எந்தவொரு மதுபானத்தையும் குடிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், மதுபானம் இரத்தத்தை லேசாக மாற்றிவிடும். இது பச்சை குத்தும்போதும் அல்லது அதற்கு பிறகு இரத்தப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது தவிர, காஃபின் போன்ற பானங்களை உட்கொள்வதை தவிர்க்கலாம். காஃபின் உங்கள் உடலில் இருக்கும் நீரை உறிஞ்சும். இது பச்சை குத்தும்போது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். இரத்தத்தை லேசாக்கும் எந்தவொரு மருந்தையும் எடுத்து கொள்ளாதீர்கள்.
அதிகமாக தண்ணீரை குடியுங்கள்:
பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்திருந்தால், அதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன் தினமும் ஆரோக்கியமான பானங்களை குடியுங்கள். அதேபோல், நிறைய தண்ணீரையும் எடுத்து கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்கும். இதன் காரணமாக, பச்சை குத்துவதற்கு ஊசியின் அழுத்தத்தை தாங்க உங்கள் தோல் தயாராக இருக்கும். பச்சை குத்துவதற்கு செல்லும் நாளில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை வயிறு நிரம்ப சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். இதன் மூலம், பச்சை குத்தும்போது பதட்டம், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
ஆடைகள்:
பச்சை குத்த போகும்போது தளர்வான மற்றும் காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள். இதன் மூலம், நீங்கள் பச்சை குத்தும்போது, வியர்வை, பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
பச்சை குத்திய பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள்:
- பச்சை குத்தியவுடன், நீங்கள் வீட்டிற்கு வரும் வரை சுத்தமான துணியால் மூடி வீட்டிற்கு வரவும். சூரிய ஒளி படும்போது தோல் சிவத்தல், அரிப்பு, வீக்கம் மற்றும் வலியை அதிகரிக்கும். இதுதவிர தூசி, மண் போன்றவற்றால் தொற்று நோய் பரவும் அச்சமும் உள்ளது.
- வீட்டிற்கு வந்தபிறகு டாட்டூ ஆர்டிஸ்ட் பரிந்துரைத்த திரவம் அல்லது பாக்டீரியா எதிர்ப்பு சோப்பைக் கொண்டு பச்சை குத்திய இடத்தை சுத்தம் செய்யுங்கள்.
- பச்சை குத்திய இடத்தில் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்.
- பச்சை குத்திய இடத்தை அழுத்தி தேய்ப்பது மூலம், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
- பச்சை குத்தி கொண்ட பிறகு குறைந்தது 15 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே சென்று வந்த பிறகு, லேசான சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு பச்சை குத்திய இடத்தை சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தூசியால் ஏற்படும் தொற்றுகளை தவிர்க்கலாம்.
- பச்சை குத்தப்பட்ட பகுதியை எப்போதும் எண்ணெய் உள்ளிட்டவற்றை கொண்டு ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். பச்சை குத்திய தோல் வறண்டிருந்தால், அரிப்பு ஏற்படும்.
- பச்சை குத்திய பிறகு அதிகப்படியான அரிப்பு அல்லது சொறி போன்றவற்றை நீங்கள் உணர்ந்தால், அவற்றை புறக்கணிக்காதீர்கள். அப்போது, உடனடியாக தோல் நிபுணர் மருத்துவரை அணுகுவது நல்லது.
- மறைக்க முடியாத இடத்தில் நீங்கள் பச்சை குத்தியிருந்தால், நல்ல SPF கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)