Refrigerator Cleaning Tips: ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்வது எப்படி? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க! - Tamil News | | TV9 Tamil

Refrigerator Cleaning Tips: ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்வது எப்படி? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

Updated On: 

02 Jul 2024 09:11 AM

இன்றைய நவீன காலத்தில் ஃபிரிட்ஜ் என்பது ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய தேவையாகி விட்டது. இருப்பினும், இதை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற மின் உபயோக பொருட்களை 3 மாதத்திற்கு ஒரு முறை அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அப்போது, எந்தஒரு பிரச்னையும் இல்லாமல் சீராக செயல்படும்.

1 / 6இன்றைய

இன்றைய நவீன காலத்தில் ஃபிரிட்ஜ் என்பது ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய தேவையாகி விட்டது. இருப்பினும், இதை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற மின் உபயோக பொருட்களை 3 மாதத்திற்கு ஒரு முறை அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அப்போது, எந்தஒரு பிரச்னையும் இல்லாமல் சீராக செயல்படும்.

2 / 6

குறிப்பாக ஃபிரட்ஜை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஏனென்றால் அதில் சாப்பாடு பொருட்களை வைப்பதாலும், தினமும் பயன்படுத்தி வருவதால் அதனை உரிய நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஆனால், ஃபிரிட்ஜ் சுத்தம் செய்வது எளிதானது அல்ல. இருப்பினும், எப்படி ஈஸியாக சுத்தம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

3 / 6

முதலில், ஃபிரட்ஜில் உள்ள பொருட்களை எடுத்து வெளியே வைத்துவிட்டு, தண்ணீரை கொண்டு ஃபிரிட்ஜ் முழுவதும் துடைத்து எடுக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் எதை ஸ்டோர் செய்தாலும் தனியாக டப்பாவொலோ இல்லை மூடி இருக்கும் பாத்திரத்தில் அடைத்து வைப்பது நல்லது. ப்ளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

4 / 6

ஃப்ரிட்ஜை சுத்தும் செய்யும்போது லிக்விட்டை பயன்படுத்துவதி அவசியம். ஒரு பாத்திரத்தில் 2 பெரிய டம்பளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்ததும் அடுப்பை அணைத்து மூன்று பழங்களின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதோடு, ஒரு கப் வொயிட் வினிகர் அரை கப் வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்க்கவும்.

5 / 6

இதை நன்றாக கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும். இதன் மூலம் ஃபிரிட்ஜை சுத்தம் செய்யலாம். இதனால், துர்நாற்றம் போகும். ஃபிரட்ஜின் அனைத்து இடத்திலும் இந்த லிக்விட்டை கொண்டு நன்றாக சுத்தம் செய்துவிட்டு குறைந்தது ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜை திறந்து வைத்துவிடுங்கள். பிறகு பயன்படுத்த தொடங்கலாம்.

6 / 6

எனவே, ஃப்ரிட்ஜை 6 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். முடிந்த வரை ஃப்ரிட்ஜில் வைக்கும் பொருட்களை மூடி வைப்பது நல்லது. சூடான பொருட்களை அல்லது பாத்திரங்களை கண்டிப்பாக ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. அடிக்கடி மின் நிறுத்தம் பிரச்னை இருந்தார் ஸ்டெபிலைசரை வைக்கவும்.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version