Long Distance Relationship: லாங் டிஸ்டன்ஸ் ஜோடிகளா நீங்கள்..? இதை செய்தால் காதல் குறையாது..! - Tamil News | tips for long distance relationship make a strong relationship | TV9 Tamil

Long Distance Relationship: லாங் டிஸ்டன்ஸ் ஜோடிகளா நீங்கள்..? இதை செய்தால் காதல் குறையாது..!

Long Distance Relationship: லாங் டிஸ்டன்ஸ் ஜோடிகளா நீங்கள்..? இதை செய்தால் காதல் குறையாது..!

கோப்பு புகைப்படம்

Published: 

26 Jul 2024 08:34 AM

வேலை காரணமாக பல நேரங்களில் தம்பதியினர் மற்றும் காதலர்கள் ஒருவரையொருவர் விட்டு விலகி வேறு ஊர்களின் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதை நாம் பொதுவாக லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் என்று அழைக்கிறோம். மக்கள் தங்கள் கனவுகளையும், தொழிலையும் மேம்படுத்த இத்தகைய முடிவுகளை சில நேரம் எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். எவ்வளவுதான் ஒருவர் மீது ஒருவர் காதல் அதிகமாக வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் நம்பிக்கை உடைந்து சந்தேகம் என்ற பூதம் கிளம்பும். இதனால், நன்றாக சென்ற அன்பான ஜோடிகளின் வாழ்க்கை ஆபத்தை நோக்கி நகரும். இந்தநிலையில், ஜோடிகள் வேலை அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் வெவ்வேறு நகரங்களில் வாழ்ந்தால், அவர்கள் தங்கியிருந்தாலும் ஒருவருக்கொருவர் விலகி, ஆனால் உங்கள் உறவுகளை வலுவாக வைத்திருக்க, நீங்கள் சில விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்களது ஒரு தவறு உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம். ஒருவருக்கொருவர் விலகியிருந்தாலும் உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க, நீங்கள் சில தவறுகளைத் தவிர்த்தாலே போதும். உங்கள் லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் அழகாக இருக்கும். அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.

Also read: Relationship Tips: காதலிப்பவர்களா நீங்கள்! தவறுதலாக கூட இதை செய்யாதீர்கள்.. முறிவுக்கு கொண்டு செல்லும்..!

தினமும் ஒரு முறையாவது பேசுங்கள்:

லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பை பொதுவாக நல்லபடியாக கொண்டு செல்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எவ்வளவு அன்பான காதலர்கள் அல்லது தம்பதிகளாக இருந்தாலும் இடைவெளி வரும். பல மாதங்களாக சந்திக்க முடியாமல் போனால், ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் ஈர்ப்பு குறைய வாய்ப்புண்டு. எந்தவொரு உறவையும் வலுவாக வைத்திருக்க, உங்கள் துணையுடன் தினமும் பேசுங்கள். எனவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் பேசுவது மிகவும் முக்கியமானது. மணிக்கணக்கில் பேச வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு கிடைக்கும் சிறிய நேர இடைவெளியில் கூட, போனில் பேசுதல், வீடியோ கால் மூலம் அழைத்தல் போன்ற சிறிய விசயங்கள் செய்தால் கூட உங்கள் வாழ்க்கை அழகாக செல்லும். இப்படியான செயல்கள் உங்களை இன்னும் நெருக்கமாக உணர வைக்கும்.

பொய் சொல்வதை தவிர்க்கவும்:

ஒருவரையொருவர் விட்டு விலகி இருக்கும்போதும் பொய் சொல்லாதீர்கள், ஏனென்றால் மற்றவர் உண்மையை அறிந்தால், அது நம்பிக்கையை உடைத்துவிடும். இதன் காரணமாக உங்களது உறவில் விரிசல் ஏற்படலாம். முடிந்தவரை, போனில் அழைத்து பேசும்போதும் அன்றைய நாளில் நடந்தவற்றை பற்றி தெளிவாக, எதையும் மறைக்காமல் பேசினாலே போதும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரிப்பத்துடன், காதலும் கூடும்.

குறை சொல்லாதீர்கள்:

நான் போனில் அழைத்தபோது ஏன் எடுக்கவில்லை. நீ யாருடன் பேசிட்டு இருந்த..? எப்போதும் பிஸியாகதான் இருப்பியா..? என்னுடன் பேச மாட்டியா..? என இதுபோன்ற விஷயங்களை தினமும் கேட்காதீர்கள். இது எதிரே இருக்கும் உங்களது அன்பானவர்களுக்கு எரிச்சலை தரும். அவர்கள் வேலையில் மும்முரமாக இருந்ததால் கூட உங்களது போனை எடுக்காமல் போயிருக்கலாம். இதுபோன்ற சிறிய விஷயங்களை பெரியதாக எடுத்து கொள்ளாமல் விட்டாலே போது, பெரிய சண்டைகளாக உருவெடுக்காது. இப்படி கேட்ப்தால், உங்களது அன்புகுரியவர்களை நீங்கள் நம்பவ்ல்லை என்று அவர்கள் உணர தொடங்கிவிடுவார்கள்.

பிறருடன் ஒப்பிடாதீர்கள்:

பெரும்பாலான லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் தம்பதிகள் மற்றும் காதலர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று பிறருடன் ஒப்பிட்டு பேசுவது. இது உங்களது காதல் வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். அவர் பார் அவங்களோட மனைவிக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க என்று ஒப்பிட்டு பேசினாலே போதும். உங்கள் வீட்டில் பூகம்பமே வெடிக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது முற்றிலும் நல்லது.

சந்திக்க செல்லுங்கள்:

நீங்கள் வேறொரு நகரத்தில் வசிக்கிறீர்கள் என்றால் 6 மாதங்களுக்கு ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும். நீங்கள் அருகில் இருக்கும் நகரத்தில் இருந்தால், ஒரு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் துணையை சந்திக்கவும். இருவரும் உங்களது அலுவலகத்தில் சில நாட்கள் விடுப்பு எடுத்து, எங்கையாவது சென்று வந்தால் இது உங்கள் உறவை வலுப்படுத்த உதவும்.

பாதுகாப்பாக உணர செய்யுங்கள்:

தம்பதியினர் ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி இருந்தாலும், அவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் தொடர்பான அனைத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இது காதல் வாழ்க்கையில் உங்களுக்குள் புரிதலை ஏற்படுத்தும். எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும்போது நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

Also read: Relationship: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்கும் அந்த 5 விஷயங்கள் இதுதான்..

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?