Kitchen Tips: சமையலறை கத்தியில் துருவா..? கவலை வேண்டாம்! இப்படி க்ளீன் பண்ணுங்க!

Home Tips: சமையலறையில் இருந்து கத்தி காணாமல் போனால், காலை உணவு முதல் இரவு உணவு வரை சமைக்க மிக கடினமாக இருக்கும். சமையலறையில் கத்தில் பல வகையான செயல்முறைகளில் அதாவது வெட்டுவது மட்டுமின்றி, உரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். சமையலறையை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருப்போமோ, அதே அளவிற்கு கத்திகளை சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். பாத்திரத்தை கழுவும் நாம், கத்தியை சுத்தம் செய்ய மறந்துவிடுகிறோம்.

Kitchen Tips: சமையலறை கத்தியில் துருவா..? கவலை வேண்டாம்! இப்படி க்ளீன் பண்ணுங்க!

கோப்பு புகைப்படம்

Published: 

26 Aug 2024 17:04 PM

வீட்டு கத்தியை சுத்தம் செய்யும் முறை:  வீட்டின் மிக முக்கியமான ஒரு இடமாகும். அந்த சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் கத்தியும் ஒன்று. சமையலறையில் இருந்து கத்தி காணாமல் போனால், காலை உணவு முதல் இரவு உணவு வரை சமைக்க மிக கடினமாக இருக்கும். சமையலறையில் கத்தில் பல வகையான செயல்முறைகளில் அதாவது வெட்டுவது மட்டுமின்றி, உரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். சமையலறையை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருப்போமோ, அதே அளவிற்கு கத்திகளை சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். பாத்திரத்தை கழுவும் நாம், கத்தியை சுத்தம் செய்ய மறந்துவிடுகிறோம். இந்தநிலையில், கத்தியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health Tips: மலச்சிக்கலுக்கு மகத்தான மருந்து வெற்றிலை தண்ணீர்! எளிதாக தயாரிப்பது எப்படி..?

  1. நீங்கள் வாங்கும் கத்திகளை நீண்ட காலம் பயன்படுத்த வேண்டுமென்றால், அவற்றை சரியாக சுத்தம் செய்வது முக்கியம். அவற்றை முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், துருப்பிடிக்கலாம் அல்லது ஷார்ப்பான விளிம்புகள் மழுங்கி போய்விடலாம்.
  2. காய்கறி, இறைச்சி வெட்டியபின் கத்தியை பாதுகாப்பாக பிடித்து, குழாய் தண்ணீரில் நனைக்கவும். அதன்பின் ஸ்க்ரப் கொண்டு உணவுத் துகள்களை கவனமாக துடைக்கவும். நீங்கள் வேகமாக அழுத்தி சோப்பு போடும்போது காயப்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே, பாதுகாப்பாக பயன்படுத்துவது நல்லது.
  3. உணவின் கறை இன்னும் போகவில்லை என்றால், கத்தியை சோப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைக்கலாம். அதன்பின், சோப்பு நீர் போகும் வரை ஓடும் நீரின் கீழ் கத்தியை காண்பிக்கவும்.
  4. தொடர்ந்து, ஒரு துணியை வைத்து உடைத்து, பின்னர் சுத்தமான இடத்தில் வைக்கவும்.

பேக்கிங் சோடா:

உங்கள் கத்தியில் துரு இருந்தால், அதை எளிதாக அகற்ற சமையலறையில் இருக்கும் சமையல் சோடாவைப் பயன்படுத்தலாம். முதலில் கத்தியை ஈரப்படுத்தி, சிறிது பேக்கிங் சோடாவை எடுத்து, கத்தியின் உலோகப் பகுதியில் நன்கு தடவவும். சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு, ஸ்க்ரப்பரின் உதவியுடன் கத்தியைத் தேய்த்து சுத்தம் செய்யவும். சிறிது நேரத்திற்குள் உங்கள் கத்தியில் உள்ள துரு மறைந்து பிரகாசிக்கும்.

வினிகர்:

சமையலறையில் இருக்கும் வினிகரை பயன்படுத்தியும், கத்தியில் உள்ள துருவை நீக்கலாம்.. முதலில் அரை கப் வினிகரை எடுத்து துருப்பிடித்த கத்தியில் நனைக்கவும். 10 நிமிடங்களுக்கு பிறகு சுத்தமாக தேய்த்து கழுவினால், துரு சில நிமிடங்களில் மறையும்.

ALSO READ: Home Tips: மெத்தை கறை சட்டுனு போகணுமா? எப்போதுமே புதுசு மாதிரி பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க!

உருளைக்கிழங்கு சாறு:

கத்திகளில் உள்ள துருவை நீக்க உருளைக்கிழங்கு சாற்றையும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம், கத்தியில் உள்ள துருவை எளிதில் அகற்றும். முதலில் ஒரு உருளைக்கிழங்கை கால்வாசி வெட்டி, கத்தி துருப்பிடித்த பகுதியை வைக்கவும். உருளைக்கிழங்கின் நடுவில் கத்தியை வைத்து சிறிது நேரம் கழித்து, உருளைக்கிழங்கின் நடுவில் இருந்து கத்தியை எடுத்து சுத்தம் செய்தால் துரு நீங்கும்.

இதேபோல், வெங்காயம் மற்றும் எலுமிச்சையை பயன்படுத்தியும் கத்தியில் உள்ள துருவை நீக்கலாம். இவை அனைத்தையும் பயன்படுத்தி உங்கள் கத்தியை க்ளீன் செய்யும்போது, உங்கள் கைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்வது முக்கியம்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!