Waterfalls: சென்னையை சுற்றி இத்தனை அருவிகளா..? ஒருநாளில் சென்று வர சூப்பர் இடங்கள்..!
Travel Tips: சென்னையில் உள்ளவர்களுக்கு ஒருநாள்தான் விடுமுறை எங்கையாவது ஜில்லுன்னு குளிச்சுட்டு வரலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. சென்னையில் அருவிகளே இல்லையே என்ற கவலை உள்ளவர்களுக்கு இந்த செய்தி உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள், சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், கூழாங்கற்கள் என இந்த அருவிகளுக்கு சென்று ஜாலியாக, சந்தோஷமாக குளிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு சென்னையை சுற்றியுள்ளவர்கள் ஒருநாளில் சென்று வருமாறு உள்ள 5 அருவிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னையை சுற்றியுள்ள அருவிகள்: சென்னையில் உள்ளவர்களுக்கு ஒருநாள்தான் விடுமுறை எங்கையாவது ஜில்லுன்னு குளிச்சுட்டு வரலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. அருவிகள் என்றால் நீங்கள் தென்காசியில் உள்ள குற்றாலத்திற்கு செல்ல வேண்டாம். கேரளாவிலும் அதிக அருவிகள் இருக்கிறது அங்கேயும் செல்ல வேண்டாம். சென்னையில் அருவிகளே இல்லையே என்ற கவலை உள்ளவர்களுக்கு இந்த செய்தி உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள், சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், கூழாங்கற்கள் என இந்த அருவிகளுக்கு சென்று ஜாலியாக, சந்தோஷமாக குளிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு சென்னையை சுற்றியுள்ளவர்கள் ஒருநாளில் சென்று வருமாறு உள்ள 5 அருவிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: Chennai Tour: சென்னையில் ஒருநாள் சுற்றுலா.. எங்கெங்கு செல்லலாம்..? இங்கே தெரிஞ்சுக்கோங்க!
மூல கோனா அருவி:
மூல கோனா அருவிக்கு சென்னையில் இருந்து செல்ல விரும்புவோர், முதலில் சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக புத்தூர் சென்று அங்கிருந்து மூல கோனா அருவிக்கு செல்லலாம். இந்த அருவிய சுற்றி எந்தவொரு வசதிகளும் இல்லாததால் முடிந்தவரை சாப்பாடு, தண்ணீர் என அனைத்தையும் எடுத்து செல்வது நல்லது. குடும்பத்திற்கு சென்று வர பெரிதாக பாதுகாப்பு வசதி இல்லையென்றாலும், நண்பர்களுடன் ஒரு நாள் பொழுதை கழிக்க சிறந்த இடம். இது சரியான சென்னையில் இருந்து 109 கிமீ தொலையில் அமைந்ததுள்ளது. மலையேற்ற பயணிகளுக்கும் மூல கோனா அருவி சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது.
கைலாசா கோனா அருவி:
நகரு மலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த கைலாசா கோனா அருவி. இந்த அருவியானது திருப்பதி மாவட்டம் , நாராயணவனம் மண்டலத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். இந்த அருவிக்கு அருகில் சிவன் மற்றும் பார்வதி கோவில் உள்ளது. இந்த அருவி சுமார் 40 அடி உயரம் கொண்டது.
சென்னையில் இருந்து 90 கிமீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டுதோறும் இங்கு நீர்வரத்து வரும் என்பதால் எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம். மழை காலங்களில் நீர் வரத்தை தெரிந்து கொண்டு சென்று வருவது நல்லது.
சதாசிவா அருவி:
அடர்ந்த மரங்களுக்கு நடுவே இந்த சதாசிவா அருவி உள்ளது. இந்த அருவிக்கு அருகில் சிவன், பார்வதியும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஆந்திராவில் உள்ள புத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து தனியார் பேருந்தில் ஏறி 45 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டும். அங்கிருந்து 2.5 கி.மீ தூரம் நடந்து மலை அடிவாரத்தை அடையலாம். சொந்த வாகனம் வைத்திருப்பருவர்கள் நேரடியாக கூகுள் மேப் மூலம் சென்று வாருங்கள். மலையின் அடிவாரத்தில் முறையே இடது மற்றும் வலது பக்கமாக இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன.
ஆரே அருவி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இந்த ஆரே அருவி அமைந்துள்ளது. இந்த அருவியை சுற்றி பட்டாம் பூச்சிகள் பறந்து செல்லும் என்பதால் பார்க்கவே அவ்வளவ் அழகாக இருக்கும். குடும்பத்துடன் சென்று வர மிகவும் பாதுகாப்பான அருவிகளில் இதுவும் ஒன்று. இங்கு மொத்தமாக 5 அருவிகள் இருக்கும். இந்த அருவிக்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 50 வசூலிக்கப்படுகிறது.
ALSO READ: Rameswaram Tour: ராமேஸ்வரத்தில் சுற்றி பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா..? ஜாலியா போயிட்டு வாங்க!
தடா அருவி:
உப்பலமுடுகு நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படும் தடா நீர்வீழ்ச்சி, இந்தியாவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள டிரிசிட்டி மற்றும் ஒன்னெஸ் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அழகிய நீர்வீழ்ச்சியாகும். தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு மலையேற்றம், நடைபயணம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சிறந்த இடமாகும். தடா நீர்வீழ்ச்சி அதன் நம்பமுடியாத நிலப்பரப்பு, பசுமையான மற்றும் இயற்கையான குன்றுகளுக்கு பெயர் பெற்றது.