Bihar Tour: பீகாரில் இந்த அழகிய இடங்களை தவறவிடாதீர்கள்.. குடும்பத்துடன் இங்கு சென்று வாருங்கள்! - Tamil News | Tourist places to visit in Bihar with family; travel tips in tamil | TV9 Tamil

Bihar Tour: பீகாரில் இந்த அழகிய இடங்களை தவறவிடாதீர்கள்.. குடும்பத்துடன் இங்கு சென்று வாருங்கள்!

Published: 

05 Sep 2024 19:25 PM

Travel Tips: ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல சுற்றுலாத் தலங்கள், வரலாறு சார்ந்த இடங்கள், புனித யாத்திரை தலங்கள் என இந்தியா முழுவதிலும் பல இடங்கள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள பல அழகான இடங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும், ஆனால் நீங்கள் எப்போதாவது பீகார் சென்றிருக்கிறீர்களா? அந்தவகையில் பீகார் மற்றும் பீகாரை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றிபார்க்க எந்தெந்த இடங்கள் உள்ளன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Bihar Tour: பீகாரில் இந்த அழகிய இடங்களை தவறவிடாதீர்கள்.. குடும்பத்துடன் இங்கு சென்று வாருங்கள்!

பீகார் (Image: V. Muthuraman/IndiaPictures/Universal Images Group via Getty Images)

Follow Us On

பீகார் டூர்: இந்தியாவில் பல சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் சுற்றுலா செல்ல விரும்பும் மக்கள் மலை தொடர்பான இடங்கள், பசுமையான இடங்கள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களையே அதிகம் பார்க்க விரும்புகின்றனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல சுற்றுலாத் தலங்கள், வரலாறு சார்ந்த இடங்கள், புனித யாத்திரை தலங்கள் என இந்தியா முழுவதிலும் பல இடங்கள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள பல அழகான இடங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும், ஆனால் நீங்கள் எப்போதாவது பீகார் சென்றிருக்கிறீர்களா? அந்தவகையில் பீகார் மற்றும் பீகாரை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றிபார்க்க எந்தெந்த இடங்கள் உள்ளன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Travel Tips: அகமதாபாத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

கயா:

பீகாரில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று கயா. இந்த இடம் பௌத்த புனித தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கௌதம புத்தம் இங்குள்ள இரு மரத்தடியில் தான் ஞானம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. கயாவில் பல கோயில்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. நீங்கள் கயாவுக்கு சென்றால், போத்கயா, போத்கயா தொல்பொருள் அருங்காட்சியகம், தாய் கோயில், ராயல் பூட்டான் மடாலயம், மகாபோதி கோயில், விஷ்ணுபாத் கோயில், மங்கள கௌரி தீர்த்தம், பராபர் குகைகள், சீனக் கோயில், மடாலயம், போதி மரம், துங்கேஸ்வரி குகைக் கோயில் மற்றும் முச்சலிந்தா ஏரி உள்ளிட்ட பல இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றி பார்க்கலாம்.

நவ்லகா அரண்மனை:

ராஜ்நகரில் அமைந்துள்ள நவ்லகா அரண்மனை ராஜ்நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த புகழ்பெற்ற அரண்மனையை மகாராஜா ராமேஷ்வர் சிங்கால் கட்டப்பட்டது. கடந்த 1934ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இந்த நவ்லகா அரண்மனை இடிந்துள்ளது. இருப்பினும், இந்த அரண்மனையை பார்க்க பல்வேறு மக்கள் இன்று வரை பார்வையிட்டு வருகின்றனர்.

ஷேர்ஷா சூரி கல்லறை:

பீகாரில் உள்ள சசரம் பகுதியில் ஷேர்ஷா சூரி கல்லறை அமைந்துள்ளது. செங்கற்களால் ஆன இந்த கல்லறை பேரரசர் ஷேர்ஷா சூரி மறைந்தபோது, அவரது நினைவை போற்றும் வகையில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது தாஜ்மஹால் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கல்லறையின் தூண்கள், சுவர்கள் இன்றுவரை அழியாமல் அழகை வெளிப்படுத்துகிறது.

ALSO READ: Theni Tourism: இயற்கையை வாரி சுருட்டிக் கொண்ட தேனி.. இந்த இடத்திற்கு செல்ல மறக்காதீங்க!

நாளந்தா பல்கலைக்கழகம்:

நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 415–455) நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பழமையான நகரமான ராஜ்கிரில் அமைந்துள்ளது. இன்று நாளந்தா பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாக காட்சியளிக்கிறது. இந்தியாவின் வரலாற்றை அறிய விரும்பினால், இந்த இடத்திற்கு மறக்காமல் சென்று வாருங்கள்.

வைஷாலி:

பீகாரில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்று வைஷாலி. இது ஒரு முக்கியமான தொல்பொருள் தளமாக கருதப்படுகிறது. இங்குதான் கடைசி ஜைன தீர்த்தங்கரர் மகாவீரர் பிறந்தார் என்று கூறப்படுகிறது. வைஷாலியில், குடகர்ஷாலா விஹார், சௌமுகி மகாதேவ், ஸ்தூபம், விஸ்வ சாந்தி சிவாலயம், ராஜா விஷாலின் கோட்டை மற்றும் குண்டல்பூர் போன்ற இடங்களை சுற்றி பார்க்கலாம்.

 

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version