Travel: மறக்காம போங்க.. இந்தியாவின் அழகான 5 கிராமங்கள்!
Beautiful villages in India: இந்தியா சுற்றுலாத்தலத்திற்கு ஒரு பிரபலமான நாடாக திகழ்கிறது. எல்லா விதமான நிலப்பரப்பையும் இந்தியா கொண்டுள்ளது. மணாலி, சிம்லா, கேரளா, ஊட்டி போன்ற பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளை கவரும் இயற்கை அழகு நிறைந்த கிராமங்களும் உள்ளது. வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று ரசிக்க வேண்டிய 5 இந்திய கிராமங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும்.
இந்தியாவில் பார்க்க வேண்டிய பல அழகான இடங்கள் உள்ளன. மலைகள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள் பாலைவனங்கள், வரலாற்று கட்டிடங்கள் மற்றும் பசுமை நிறைந்த இடங்கள் என இந்தியாவில் ஏகப்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்குச் சென்றால் வாழ்க்கையில் மறக்க முடியாத பல அனுபவங்களை பெற முடியும். இந்த அழகிய சுற்றுலாத் தலங்களை காண இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் அதிக அளவில் வருகின்றனர். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப உங்கள் பயணத்தை திட்டமிடக்கூடிய நாடு இந்தியா. குளிர் காலத்தில் பாலைவனப் பகுதியிலும் வெயில் காலத்தில் மலை பிரதேசங்களிலும் பயணம் செய்து மகிழலாம். மணாலி, முசோரி, வட கிழக்கு மலைகள், ஊட்டி, வயநாடு, கேரள மற்றும் தமிழக கடற்கரைகள் உள்ளிட்ட பல பயண இடங்கள் உள்ளன. இங்கு சென்றால் அற்புதமான நினைவுகளை சேகரிக்க முடியும்.
அந்த வகையில் அழகான மற்றும் தனித்துவமான விஷயங்களைக் கொண்ட பல கிராமங்கள் நம் நாட்டில் உள்ளது. இது மலைகள் மற்றும் பசுமை நிறைந்த பல அற்புதங்களை கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு ஒரு முறையாவது சென்று வந்தால் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். இந்தியாவில் உள்ள 5 வித்தியாசமான கிராமங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மலாலா, இமாச்சல் பிரதேசம்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்த கிராமம் இந்தியாவின் கடைசி கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இப்போது அது குலு பள்ளத்தாக்கின் வடகிழக்கே முதல் கிராமமாக அறியப்படுகிறது. குலு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அழகிய கிராமம் இது. சுவாரஸ்யமாக, மணாலி குலுவில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், வெகு சிலரே இங்கு வருவார்கள். எனவே இது இமாச்சல் ஹில் ஸ்டேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர்.
Also Read: Tourist Spots: இந்தியாவில் உள்ள ஏரிகளின் நகரங்கள் எது என்று தெரியுமா?
ஜீரோ பள்ளத்தாக்கு, அருணாச்சல பிரதேசம்
வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளின் இயற்கை அழகு மனதைக் கவரும். அருணாச்சல பிரதேசத்தில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது ஜீரோ பள்ளத்தாக்கு. இது பச்சை மூங்கில் காடுகள், பைன் மரங்கள் மற்றும் நெல் வயல்களால் நிறைந்த இடமாகும். இந்த பள்ளத்தாக்கு வனவிலங்குகளின் தாயகமாகும். மலையேற்றம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக ஜீரோ பள்ளத்தாக்குக்கு வருவார்கள். இங்கிருந்து அருகிலுள்ள டாலி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம், டிபி ஆர்க்கிட் ஆராய்ச்சி மையம் போன்ற பல சுற்றுலா இடங்களுக்குச் செல்லலாம்.
கிப்பர், ஸ்பிட்டி பள்ளத்தாக்கு
கிப்பர் கைபர் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டியில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமமாகும். இந்த இடத்தில் இருந்து பனி மூடிய மலைகளை காணலாம். இந்த சுற்றுலா தலத்தை பார்ப்பதோடு மலையேற்றமும் செய்யலாம். இங்கு கிப்பர் வனவிலங்கு சரணாலயம், சிம் சிம் பாலம், கி மடாலயம், காஜா, தாஷிக்யாங் போன்ற பல இடங்கள் உள்ளன.
கிம்சர், ராஜஸ்தான்
விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். பல சுற்றுலாப் பயணிகள் ஜெய்ப்பூர், ஜோத்பூர் அல்லது ஜெய்சால்மருக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான ராஜஸ்தான், பார்க்க வேண்டிய பல இடங்களைக் கொண்டுள்ளது. எல்லாப் பக்கங்களிலும் மணலால் சூழப்பட்ட கிம்சார் கிராமம் இதில் ஒன்று. இங்கு ஒரு ஏரியும் உள்ளது. அதைச் சுற்றி மரங்களும் குடிசைகளும் கட்டப்பட்டுள்ளன.
Also Read: Tourism: இந்த ஏரியாக்கள் டூர் போறீங்களா? அனுமதி வாங்கணும்.. முழு விவரம்!
மாவ்லின்னாங், மேகாலயா
ஆசியாவின் தூய்மையான இடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கிலிருந்து 78 கிமீ தொலைவில் இந்த சுற்றுலாத் தலம் உள்ளது. மேகாலயாவில் உள்ள இந்த கிராமம் கடவுளின் தோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. எழுத்தறிவு விகிதம் கணிசமாக அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், பெண்கள் அதிகாரமளித்தலுக்கும் பெயர் பெற்றது. இங்கு புகைபிடித்தல் மற்றும் பாலித்தீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவுக்குச் செல்பவர்கள் மாவ்லின்னாங்கிற்குச் செல்ல வேண்டும்.