5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Coonoor Tour: இயற்கையின் பேரின்பம் குன்னூர்.. ஆகஸ்ட் மாதம் செல்ல பக்கா டூரிஸ்ட் பிளேஸ்!

Travel Tips: நீங்களும் உங்கள் பாட்னருடன் வெளியூர் செல்ல திட்டமிட்டு, இந்த முறை புதிய இடத்திற்கு செல்ல நினைத்தால், தாமதிக்காமல் இந்த முறை குன்னூருக்கு திட்டமிடுங்கள். தமிழ்நாட்டில் பல இடங்களை நீங்கள் கண்டிருந்தாலும், இந்த குன்னூர் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். குன்னூரின் அழகை பார்த்தவுடன் உங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும். இங்குள்ள பல அற்புதமான காட்சிகள் உங்கள் நினைவில் இருந்து என்றுமே மறையாது. குன்னூர் மலைகளில் இருந்தும் தேயிலை தோட்டங்களும் இருந்தும் உங்கள் கண்களை எடுக்க முடியாது.

Coonoor Tour: இயற்கையின் பேரின்பம் குன்னூர்.. ஆகஸ்ட் மாதம் செல்ல பக்கா டூரிஸ்ட் பிளேஸ்!
குன்னூர்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 21 Aug 2024 16:39 PM

குன்னூர் பயணம்: பயணம் விரும்பிகளாக நீங்கள்! சென்ற இடத்திற்கே சென்று உங்களுக்கு வெறுத்துவிட்டால், நாங்கள் சொல்லும் இந்த இடத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள். நீங்களும் உங்கள் பாட்னருடன் வெளியூர் செல்ல திட்டமிட்டு, இந்த முறை புதிய இடத்திற்கு செல்ல நினைத்தால், தாமதிக்காமல் இந்த முறை குன்னூருக்கு திட்டமிடுங்கள். தமிழ்நாட்டில் பல இடங்களை நீங்கள் கண்டிருந்தாலும், இந்த குன்னூர் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். குன்னூரின் அழகை பார்த்தவுடன் உங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும். இங்குள்ள பல அற்புதமான காட்சிகள் உங்கள் நினைவில் இருந்து என்றுமே மறையாது. குன்னூர் மலைகளில் இருந்தும் தேயிலை தோட்டங்களும் இருந்தும் உங்கள் கண்களை எடுக்க முடியாது. அந்த அளவிற்கு அழகிய அதியசங்களை அடக்கி வைத்துள்ள குன்னுரை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Salem Tour: இயற்கை அழகு கொண்ட நகரம் சேலம்.. சின்ன பட்ஜெட்டில் சூப்பர் டூர் போங்க!

குன்னூர்:

தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்று நீலகிரி மலைகளில் பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள குன்னூர். இந்த சொர்க்க பூமிக்கு தம்பதிகளும், காதலர்களும் ஜாலியாக ஒரு பயணம் மேற்கொள்ளலாம். தற்போதைய ஆகஸ்ட் மாதத்தில் குன்னூரில் இதமான வானிலையும், குளிர்ந்த காற்றும் வீசும். இங்கு பல சுற்றுலா தலங்களுடன், மலையேற்றம் போன்ற மெய்சிலிர்க்கும் அனுபவத்தையும் ஜாலியாக கொண்டாடலாம்.

பார்க்க வேண்டிய இடங்கள்:

குன்னூர் ரயில் நிலையம்:

குன்னூர் நீலகிரி மலை ரயில் நிலையம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு வரும் ரயிலில் நீங்கள் சவாரி செய்து, மொத்த நீலகிரி மலைகளை கண்டுகளிக்கலாம். இந்த ரயில் நிலையம் உதகமண்டலம் (ஊட்டி) செல்லும் ரயில்களுக்கான முக்கியமான ரயில் நிலையமாகும். குறைந்த செலவில் ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் விடுமுறையை இங்கே திட்டமிடலாம்.

முகூர்த்தி நேஷனல் பார்க்:

நீலகிரி அமைந்துள்ள முகூர்த்தி தேசிய பூங்கா தமிழ்நாட்டில் அதிகம் பார்வையிடப்படும் தேசிய பூங்காக்களில் ஒன்றாகும். 78.46 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள முகூர்த்தி தேசியப் பூங்கா, மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக உள்ளது. இங்கு பெங்கால் புலி, ஆசிய யானை போன்ற அழிந்து வரும் விலங்குகளும், குரைக்கும் மான்கள், சிறுத்தைகள், நரிகள் பலவகையான விலங்கு இனங்களும் உள்ளது.

அருங்காட்சியம்:

உதகையில் இருந்து மைசூர் செல்லும் பாதையில் உள்ள கிளப் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், கடந்த 1989ம் ஆண்டு திறக்கப்பட்டது. முன்பு, இங்கு வாழ்ந்த பழங்குடியினரான தோடர் இன மக்கள் பயன்படுத்திய பல வகையான பொருட்கள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, கல் சிற்பங்கள், வெண்கல வேலைப்பாடுகள், பல்வேறு காலத்தை சேர்ந்த பழமையான நாணயங்கள் என ஏகப்பட்டவற்றை கண்டு களிக்கலாம்.

லேடி கானிங் சீட்:

கடந்த 1857ம் ஆண்டு இந்தியாவின் வைசியராக இருந்தவர் கானிங் பிரபு. இவரது மனைவி பெயர்தான் லேடி கானிங். முதல் சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கானிங் பிரவு திணறி கொண்டிருக்க, மறுபக்கம் அவரது மனைவி லேடி கானிங், குதிரை சவாரி, ஓவியம், மலையேற்றம் என மகிழ்ச்சியாக இருந்தார். லேடி கானிங் ஜாலியாக சுத்தி திரிந்த காரணத்தினால், இப்பகுதி லேடி கானிங் என்ற பெயரை பெற்றது. பழங்குடியினர் இந்த இடத்தைப் பட்டாம்பூச்சி நாடு என்று அழைக்கின்றனர். இந்த பகுதியானது லேம்ப்ஸ் ராக்கிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ALSO READ: Hampi Tour: ஹம்பிக்கு நம்பி சுற்றுலா போங்க.. புத்துணர்ச்சி தரும் பழைய நகரத்தின் அழகு..!

பகாசுரன் குன்று:

குன்னூரியில் இருந்து சரியாக 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த குன்றை பகாசுரன் குன்று என்று அழைப்பார்கள். இதற்கு அருகில்தான் திப்பு சுல்தான் கட்டிய மாபெரும் கோட்டை ஒன்றூள்ளது. தற்போது இந்த கோட்டை சிதைந்த நிலையில் இருந்தாலும், பழம்பெரும் கோட்டையாக இன்றளவும் உள்ளது. இதை பகாசுரன் கோட்டை என்றும் அழைப்பார்கள்.

Latest News