5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dehradun Tour: வீக் எண்ட் வந்ததும் டூர் போக பிளானா..? டேராடூனுக்கு ஜாலியா போங்க!

Travel Tips: வார இறுதியில் தமிழ்நாட்டில் இருந்து தொலை தூரம் பயணம் செய்ய விரும்புவோர் டேராடூனுக்கு சென்று பார்வையிடலாம். இங்கு குச்சு பானி என்று அழைக்கப்படும் கொள்ளையர்கள் குகை, சஹஸ்த்ரதாரா உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள் உள்ளன. விடுமுறை தினம் என்பதால் டெல்லி மற்றும் சுற்றியுள்ள இடங்களிலிருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் உத்தரகண்ட்-க்கு வருகை தருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த விடுமுறை தினங்களில் டேராடூனுக்கு சென்று வரலாம்.

Dehradun Tour: வீக் எண்ட் வந்ததும் டூர் போக பிளானா..? டேராடூனுக்கு ஜாலியா போங்க!
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 06 Nov 2024 11:21 AM

டேராடூன் டூர்: இமயமலைக்கு அடியில் அமைந்துள்ள டேராடூன், இயற்கை ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள் சென்று வர சிறந்த இடமாகும். வார இறுதியில் தமிழ்நாட்டில் இருந்து தொலை தூரம் பயணம் செய்ய விரும்புவோர் டேராடூனுக்கு சென்று பார்வையிடலாம். இங்கு குச்சு பானி என்று அழைக்கப்படும் கொள்ளையர்கள் குகை, சஹஸ்த்ரதாரா உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள் உள்ளன. விடுமுறை தினம் என்பதால் டெல்லி மற்றும் சுற்றியுள்ள இடங்களிலிருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் உத்தரகண்ட்-க்கு வருகை தருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த விடுமுறை தினங்களில் டேராடூனுக்கு சென்று வரலாம். டேராடூனுக்கு அருகில் அமைந்துள்ள சில தனித்துவமான கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் சிறிய நகரங்கள் பார்க்கவே அவ்வளவு அழகாக காட்சியளிக்கும். இங்கு செல்வதன்மூலம், குறைந்த பணத்தில் நிம்மதியான மற்றும் வசதியான விடுமுறை அனுபவிக்கலாம்.

ALSO READ: Coonoor Tour: இயற்கையின் பேரின்பம் குன்னூர்.. ஆகஸ்ட் மாதம் செல்ல பக்கா டூரிஸ்ட் பிளேஸ்!

டேராடூனில் பார்க்க வேண்டிய இடங்கள்:

தப்கேஷ்வர்:

தம்கேஷ்வர் மகாதேவ் கோயில் டேராடூனில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயின் சிவலிங்கத்தின் மீது பாறையிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டே இருக்கும். இதை பார்க்கவே ஏராளமான பக்தர்கள் வந்து வருகை புரிவார்கள்.

தக்பதர்:

டேராடூனில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் யமுனை நதிக்கரையில் உள்ள சிறிய ஆனால் வசீகரமான நகரம். இங்குள்ள இயற்கை அழகும், டக்பதர் தடுப்பணைக்கும் பெயர் பெற்ற அழகிய காட்சிகளாகும். மேலும், சுற்றுலா மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு பிரபலமான இடமாகவும் உள்ளது. இங்கு படகு சவாரி, மீன் பிடித்தல் போன்ற பல்வேறு சாகசங்களை மேற்கொள்ளலாம். இங்கு பேரேஜ் பறவைகள் சரணாலயமும் உள்ளது. பறவை பிரியர்களுக்கு இங்கு சொர்க்கமாக காட்சியளிக்கும்.

சக்ரதா:

டேராடூனில் உள்ள சக்ரதா சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். இங்கு, சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,228 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த தனித்துவமான நகரத்தில், அடர்ந்த காடுகள் மற்றும் கண்கவர் காட்சிகள் என பல இடங்களை நீங்கள் கண்டுகளிக்கலாம். சக்ரதா நகரம் சாகசம் மற்றும் அமைதியை தேடுபவர்களுக்கு சிறந்த இடமாகும். சக்ரதாவில் உள்ள அழகான புலி நீர்வீழ்ச்சியும், சுற்றியுள்ள மலைகளுக்கு மலையேற்றம் அழகிய நினைவுகளை தரும்.

லாச்சிவாலா:

டேராடூனில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள லாச்சிவாலா, நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று. இயற்கையான நீருற்றுகளால் உருவாக்கப்பட்ட செயற்கை நீர் குளங்களுக்கு இந்த அழகிய சுற்றுலா தலம் பிரபலமானது. லாச்சிவாலாவில் குழந்தைகளுக்கான பூங்காவும், சைக்கிள் ஓட்டுவதற்கும், மலையேறுவதற்கும் ஏற்ற பல பாதைகளும் உள்ளன.

கல்சி:

டேராடூனில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ள கல்சி, வரலாற்று மற்றும் இயற்கை முக்கியத்துவம வாய்ந்த ஒரு தனித்துவமான கிராமமாகும். இங்கு கிமு 253 தேதியிட்ட புகழ்பெற்ற அசோகர் கல்வெட்டுகள் உள்ளது. இதுபோக, பல பழங்கால சிற்பங்களையும் உங்களால் இங்கு காண முடியும்.

ALSO READ: Travel Tips: பனியும், பனி சார்ந்த இடமும் அவுலி.. குடும்பத்துடன் ஜில்லுன்னு ஒரு டூர் போங்க..!

மால்தேவதா:

டேராடூனில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் உள்ள மால்தேவதா ஒரு அமைதியான இடமாகும். இந்த இடத்திற்கு பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் செல்வது கிடையாது. பசுமை, நீரோடைகள், அமைதியான சூழலுடன் கூடிய இந்த அழகிய இடம் ஒருநாள் சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும்.

Latest News