Travel Tips: தென்னிந்தியாவின் அழகிய சுற்றுலாத் தலம்.. திருவனந்தபுரத்தில் பார்வையிட இவ்வளவு இடங்களா..?

Thiruvananthapuram: நீங்கள் பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை காண ஆர்வமாக இருந்தால், திருவனந்தபுரம் பார்க்க வேண்டிய முக்கிய இடம். திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஆட்டுக்கல் பகவதி கோயில், சிவன் கோயில், கரிக்காகம் சாமுண்டி கோயில், பழவங்காடி கணபதி கோயில் என பல கோயில்கள் உள்ளன. அதேபோல், திருவனந்தபுரத்தின் உணவுகளும் கடல் உணவுகளும் மற்ற உள்ளூர் தென்னிந்திய உணவுகளை போலவே மிகவும் பிரபலம்.

Travel Tips: தென்னிந்தியாவின் அழகிய சுற்றுலாத் தலம்.. திருவனந்தபுரத்தில் பார்வையிட இவ்வளவு இடங்களா..?

திருவனந்தபுரம் (Image: kerala tourism)

Published: 

24 Aug 2024 12:35 PM

திருவனந்தபுரம் டூர்: அழகிய கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களில் ஒன்று. மேலும், இது தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமாகவும் பார்க்கப்படுகிறது. கடற்கரையோரம் உயர்ந்து நிற்கும் தென்னை மரங்களும், கடலில் உயர எழும்பும் அழகிய அலைகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். நீங்கள் பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை காண ஆர்வமாக இருந்தால், திருவனந்தபுரம் பார்க்க வேண்டிய முக்கிய இடம். திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஆட்டுக்கல் பகவதி கோயில், சிவன் கோயில், கரிக்காகம் சாமுண்டி கோயில், பழவங்காடி கணபதி கோயில் என பல கோயில்கள் உள்ளன. அதேபோல், திருவனந்தபுரத்தின் உணவுகளும் கடல் உணவுகளும் மற்ற உள்ளூர் தென்னிந்திய உணவுகளை போலவே மிகவும் பிரபலம். எனவே, இந்த செய்தி தொகுப்பில் திருவனந்தபுரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Dehradun Tour: வீக் எண்ட் வந்ததும் டூர் போக பிளானா..? டேராடூனுக்கு ஜாலியா போங்க!

பத்மநாபசுவாமி கோயில்:

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் உள்ளது. இங்கு அனைத்து சமயத்தாரும் சென்று வர முடியாது இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவர். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இது வைணவ மதத்தின் முக்கிய வழிபாட்டு தலமாகவும் பார்க்கப்படுகிறது.

நேப்பியர் அருங்காட்சியகம்:

திருவனந்தபுரத்தில் உள்ள நேப்பியர் அருங்காட்சியகம் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. நகரின் மையத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஒரு கட்டிடக்கலை அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள இந்தோ – சராசெனிக் கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டு இந்த அருங்காட்சியகம், சுற்றுலா பயணிகள் செல்ல சிறந்த இடம்.

கனகக்குன்று அரண்மனை:

திருவிதாங்கூர் ராஜா ஆட்சி காலத்தின்போது நேப்பியர் அருங்காட்சியகத்திற்கு அருகில் கனகக்குன்று அரண்மனை கட்டப்பட்டது. தென்னிந்தியாவின் நாட்டுப்புற கலை மற்றும் நடனத்தை பார்வையிட விரும்புவோ, இந்த அரண்மனைக்கு செல்லுங்கள். இந்த அரண்மனை வளாகத்தில் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகள் உலகம் முழுவதும் மிக பிரபலம்.

அகஸ்தியர் கூடம்:

நெய்யார் வனவிலங்கு சரணாலயத்திற்குள்ளே 1,868 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த அகஸ்தியர் சிகரம். இதை அகஸ்தியர் கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிகரத்தில் இந்து முனிவரான அகஸ்தியரின் சிலை உள்ளது. இந்த சிகரத்தின் உச்சியில் இருந்து அழகிய மலைப்பகுதிகளை கண்டுகளிக்கலாம்.

சித்ரா ஆர்ட் கேலரி:

நீங்கள் கலை ஆர்வலர்களாக இருந்தால் ஸ்ரீ சித்ரா ஆர்ட் கேலரி ஏற்ற இடங்களில் ஒன்று. ராஜா ரவிவர்மாவின் புகழ்பெற்ற ஓவிய படைப்புகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், முகலாயர்கள், ராஜபுத்திரர்கள் போன்ற அரசர்களின் பிற கலைப் பொருட்களையும் இங்கு பார்வையிடலாம்.

ALSO READ: Coonoor Tour: இயற்கையின் பேரின்பம் குன்னூர்.. ஆகஸ்ட் மாதம் செல்ல பக்கா டூரிஸ்ட் பிளேஸ்!

திருவனந்தபுரம் விலங்கியல் பூங்கா:

இந்தியாவில் மிகவும் பழமையான மிருகக்காட்சி சாலையாக புகழ்பெற்ற திருவனந்தபுரம் விலங்கியல் பூங்கா விளங்குகிறது. இங்கு, எத்தியோப்பியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பல்வேறு பறவை இனங்களுக்கு பெயர் பெற்றவை. மேலும், இங்கு சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்யவும், இயற்கை அழகையும் கண்டுகளிக்கலாம்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?