Salem Tour: இயற்கை அழகு கொண்ட நகரம் சேலம்.. சின்ன பட்ஜெட்டில் சூப்பர் டூர் போங்க!
Travel Tips: தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய நகரான சேலம், தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. சேலம் என்றதும் ஞாபகத்திற்கு வருவது, மாம்பழம்தான். அந்த அளவிற்கு மாம்பழத்திற்கு பெயர் பெற்றது. சேலம் இயற்கையின் அழகிய காட்சிகள் மற்றும் கோவில்கள் மற்றும் பல சுற்றுலா தலங்களைக் கொண்டுள்ளது. ஏற்காடு மலைகளின் காட்சிகளும் இங்கு பார்க்கத் தகுந்தவை.
சேலம் டூர்: சேலம் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய நகரான சேலம், தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. சேலம் என்றதும் ஞாபகத்திற்கு வருவது, மாம்பழம்தான். அந்த அளவிற்கு மாம்பழத்திற்கு பெயர் பெற்றது. சேலம் இயற்கையின் அழகிய காட்சிகள் மற்றும் கோவில்கள் மற்றும் பல சுற்றுலா தலங்களைக் கொண்டுள்ளது. ஏற்காடு மலைகளின் காட்சிகளும் இங்கு பார்க்கத் தகுந்தவை. சேலம் நான்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய என பல்வேறு வம்ச மன்னர்களால் ஆளப்பட்டுள்ளது. இந்த மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டிடங்களால்தான் சேலம் பெரியளவிலான பெயர்களை பெற்றுள்ளது. சேலம் மாம்பழத்திற்கு மட்டுமின்றி காபி மற்றும் ஆரஞ்சு தோட்டங்களுக்கும் பெயர் பெற்றது. எனவே, இன்றைய செய்திக்குறிப்பில் சேலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
ALSO READ: Goa Tour: குறைந்த செலவில் கோவா சுற்றுலா.. இதோ தெளிவான டூர் விவரம்!
முட்டல் அருவி:
அழகிய நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற முட்டல் கிராமம், சேலம் நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அணியலரி அருவி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் வலுவான நீர் ஓட்டம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மழைக்காலத்தில் இங்குள்ள கல்வராயன் மலையில் இருந்து தண்ணீர் வேகமாக விழுந்து முட்டல் ஏரிக்கு வந்து சேரும். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு சவாரியையும் சுற்றுலாத்துறை தொடங்கியுள்ளது. படகு சவாரி செய்யும் போது, ஏரியின் இயற்கை காட்சிகளுக்கு நடுவே அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள அழகிய காட்சிகளை கண்டுகளிக்கலாம்.
சங்ககிரி கோட்டை :
சேலத்திலிருந்து 40 கிமீ தொலைவிலும் ஈரோடு நகரிலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ள சங்ககிரி கோட்டை 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. இதை ஆங்கிலேய அரசு தனது வீரர்களுக்கு தானியங்கள் மற்றும் ஆயுதங்களை சேமித்து வைக்க இந்தக் கோட்டையைப் பயன்படுத்தினர். முன்னதாக, இந்த கோட்டையை மைசூர் திப்பு சுல்தான் தனது பாதுகாப்பிற்காக பயன்படுத்தியதாகவும், அதன்பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் வீரர்கள் தங்க பயன்படுத்தியாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த கோட்டை இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.
ஏற்காடு:
ஏற்காடி சேலத்தின் உள்ள பிரபலமான மலைவாசஸ்தலம். இது கடல் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரத்தில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் பார்க்க அழகான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ளன, இது ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
அண்ணா பூங்கா:
சேலத்தில் அமைந்துள்ள அண்ணா ஏரியில் இந்த அண்ணா பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவானது மலர் கண்காட்சிக்கு பெயர் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த அண்ணா பூங்காவிற்குள் ஜப்பானிய பூங்கா என்ற பெயரும் உள்ளது.
ALSO READ: Yercaud Tour: சுற்றுலா தலங்களின் சொர்க்கமாக ஏற்காடு.. குடும்பத்துடன் இங்க போய் சுற்றி பாருங்க!
கரடி குகை :
சேலத்தின் புகழ்பெற்ற கரடி குகை பூமிக்கடியில் சுமார் 7 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இந்த குகையானது சேர்வராயன் கோவிலுடன் சுரங்கப்பாதை வழியாக இணைக்கப்பட்டுள்ளதாக பல கதைகள் உள்ளன.