Hyderabad Tour: குடும்பத்துடன் செல்ல சிறந்த சுற்றுலா தலம்.. ஜாலியாக ஹைதராபாத் சுற்றி வரலாம்!
Travel Tips: சார்மினார் ஹைதராபாத்தின் பெருமைகளில் ஒன்று. மேலும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கட்டிடங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. உலக புகழ்பெற்ற இந்த சார்மினார் முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. உருது வார்த்தையான (சார்= நான்கு, மினார்= கோபுரம்) நான்கு கோபுரங்கள் என்பதே சார்மினார் என வழங்கப்படுகிறது. இது நகரின் நடுவில் கட்டப்பட்ட பெரிய வாயில் இது. இது 1591 இல் முகமது குலி குதுப் ஷா என்பவரால் நகரத்தில் பிளேக் நோயின் முடிவைக் கொண்டாடுவதற்காக கட்டப்பட்டது.
ஹைதராபாத் டூர்: தெலுங்கானாவில் ஹைதராபாத் நவாப்களின் நகரம் என்று அன்போடு அழைக்கப்படுகிறது. உணவு மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பஞ்சமில்லாத இந்த அழகிய ஊரில் அழகிய நினைவுச்சின்னங்களும் எக்கச்சக்கமாய் உள்ளது. அதேநேரத்தில், நீங்கள் ஷாப்பிங் செய்யும் காதலர்கள் என்றால் பல தரப்பட்ட சந்தைகள் உள்ளன. இதன் காரணமாக ஹைதராபாத் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணிகளாலும் அதிகம் விரும்பப்படுகிறது. பிர்லாமந்திர், ராமோஜி பிலிம் சிட்டி , சார்மினார், கோல்கொண்டா கோட்டை, ஹுசைன் சாகர் ஏரி உள்ளிட்ட ஏகப்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: Dindigul Tourist Places: அதியங்கள் நிறைந்த திண்டுக்கல்.. சூப்பரா சுற்றுலா போய்ட்டு வாங்க!
சார்மினார்:
சார்மினார் ஹைதராபாத்தின் பெருமைகளில் ஒன்று. மேலும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கட்டிடங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. உலக புகழ்பெற்ற இந்த சார்மினார் முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. உருது வார்த்தையான (சார்= நான்கு, மினார்= கோபுரம்) நான்கு கோபுரங்கள் என்பதே சார்மினார் என வழங்கப்படுகிறது. இது நகரின் நடுவில் கட்டப்பட்ட பெரிய வாயில் இது. இது 1591 இல் முகமது குலி குதுப் ஷா என்பவரால் நகரத்தில் பிளேக் நோயின் முடிவைக் கொண்டாடுவதற்காக கட்டப்பட்டது. அதன் இரண்டாவது மாடியில் நகரின் பழமையான மசூதி உள்ளது.
ராமோஜி பிலிம் சிட்டி:
ராமோஜி பிலிம் சிட்டி என்பது இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள அப்துல்லாபூர்மெட்டில் அமைந்துள்ள மிகப்பெரிய படப்பிடிப்பு நகரம் என்றே கூறலாம். ஹைதராபாத் நகருக்கு வெளியே ராமோஜி பிலிம் சிட்டி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். இது சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. எனவே இது உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ வளாகமாகும் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை இங்கு செல்லலாம். ஹைதராபாத்தில் சுற்றுலா தலங்களில் நீங்கள் தவிர்க்க கூடாத இடங்களில் இது மிக முக்கியம்.
பிர்லா மந்திர்:
பிர்லா மந்திர் என்பது ஐதராபாத்தில் அமைந்துள்ள, வெள்ளைச் சலவைக்கல்லினால் ஆன, வெங்கடாசலபதி ஆலயமாகும். சுமார் 280 அடி உயரத்தில் மலை மீது கட்டப்பட்டுள்ள இந்த கோவில் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக காட்சியளிக்கும். கோவிலின் மேல்தளத்திலிருந்து நீங்கள் ஹைதராபாத் நகரத்தை முழுமையாக கண்டுகளிக்கலாம்.
கோல்கொண்டா கோட்டை:
கோல்கொண்டா அல்லது கோல்கண்டா, தென் மத்திய இந்தியாவின் சிதைந்த நகரங்களில் அடையாளம். இது ஹைதராபாத் நகருக்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா ஆகும். இந்த கோட்டையானது நாட்டின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளில் ஒன்றான ஹுசைன் சாகர் ஏரியில் அமைந்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை இங்கு சென்று நீங்கள் பார்வையிடலாம். கோட்டையின் நுழைவாயிலில் எழுப்பப்படும் ஒலி கோட்டை முழுவதும் எதிரொலித்து ஆச்சர்யம் அளிக்கும்.
ALSO READ: Goa Tour: குறைந்த செலவில் கோவா சுற்றுலா.. இதோ தெளிவான டூர் விவரம்!
ஹுசைன் சாகர் ஏரி:
ஹைதராபாத் நகரின் மையப்பகுதியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஹுசைன் சாகர் ஏரி. ஹுசைன் சாகர் ஏரி தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். ஏரியின் மையத்தில் உள்ள புத்தபெருமானின் ஒற்றைப்பாதைக்கு பெயர் பெற்ற இந்த ஏரி, அழகான சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விரும்பப்படும் இடமாகும். செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத் நகரங்களை இணைக்கும் இந்த ஏரி சுமார் 32 அடி ஆழம் கொண்டது. ஹைதராபாத்தில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று.