Coorg Tourism: இந்தியாவின் ஸ்காட்லாந்து.. மழைக்காலத்தில் சுற்றுலா செல்ல சிறந்த இடம் கூர்க்..!
Travel Tips: அதிக மன உளைச்சல் காரணமாக நாம் பொறுமையிழந்து பல சமயங்களில் கார் மற்றும் பைக் எடுத்துக்கொண்டு லாங் டிரைவ் செல்வோம். அதிலும், குறிப்பாக சோலோ பயணம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் நீங்கள் எங்காவது வெகுதூரம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், கூர்க் செல்வது நல்ல முடிவு. கூர்க் சுற்றுலா உங்களை மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும். தென்னிந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாக கூர்க் கருதப்படுகிறது.
கூர்க் டூர்: மழைக்காலமாக இருந்தாலும் சரி, வெயில் காலமாக இருந்தாலும் சரி பணி சுமை காரணமாக நாம் எங்கையாவது செல்ல வேண்டும் என்று நினைப்போம். அதிக மன உளைச்சல் காரணமாக நாம் பொறுமையிழந்து பல சமயங்களில் கார் மற்றும் பைக் எடுத்துக்கொண்டு லாங் டிரைவ் செல்வோம். அதிலும், குறிப்பாக சோலோ பயணம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் நீங்கள் எங்காவது வெகுதூரம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், கூர்க் செல்வது நல்ல முடிவு. கூர்க் சுற்றுலா உங்களை மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும். தென்னிந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாக கூர்க் கருதப்படுகிறது. இது இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது. ஆண்டின் எந்த நேரத்திலும் நீங்கள் கூர்க்கிற்குச் செல்லலாம். இருப்பினும், மழைக்காலத்தில் இங்கு செல்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்தநிலையில், கூர்க்கில் பார்க்க வேண்டிய அழகான சுற்றுலா தலங்கள் என்னென்ன உள்ளது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
ஓம்காரேஷ்வர் கோயில்:
கூர்க்கில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயில் மிகவும் பிரபலமானது. சிவபெருமானுக்காக இந்த கோயில் 1820ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பகுதியில் உள்ள பழமையான கோயில் ஆகும். சுற்றிலும் மலைகள் மற்றும் ஆறுகள் இருப்பதால் இந்த கோயில் மிக அழகான காட்சியை உருவாக்குகிறது. இந்த கோயிலானது பழங்கால கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் போனது.
பாக மண்டலம்:
கூர்க்கில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று பாக மண்டலம். பாகமண்டலாவின் காவேரி, கனிகா, சுஜ்யோதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பதால் இந்த இடம் திரிவேணி என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு பார்வையிடுவதற்காவே தொலைதூரத்தில் இருந்து பயணிகள் வந்து குவிக்கின்றனர்.
நாம்ட்ரோலிங் மடாலயம்:
நாம்ட்ரோலிங் மடாலயம் ஒரு காலத்தில் திபெத்திய கல்வியின் மிகப்பெரிய மையமாக இருந்தது. மடிகேரியில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவி அமைந்துள்ள நாம்ட்ரோலிங் மடாலயம், இது கி.பி. 1967ம் ஆண்டு கட்டப்பட்டது. கர்நாட்காவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்குள்ள கோயில் வளாகம் முழுவதும் கோயிலின் சுவர்களில் பல்வேறு வகையான சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை கண்டு மகிழலாம்.
மோடிகேரி கோட்டை:
இந்தியாவில் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மோடிக்கேரி கோட்டை விளங்குகிறது. புராண காலத்தில் கட்டப்பட்ட இந்த கோட்டை சுற்றுலா பயணிகளால் மிகவும் விரும்பப்படுகிறது. பழங்காலத்தில் இந்த கோட்டை மெர்காரா கோட்டை என்று அழைக்கப்பட்டது. அதன்பின் நடந்த ஆட்சி மற்றும் கால மாற்றத்தினால் இந்த கோட்டை மைசூர் அரசால் மோடிகேரி கோட்டை என்று மாற்றப்பட்டது. நீங்கள் கூர்க் சென்றால் மறக்காமல், இந்த இடத்தை பார்வையிடுங்கள்.
ALSO READ: Solo Travel: இந்தியாவில் சோலோ ட்ரிப் செல்ல சிறந்த இடங்கள் இவைதான்.. ஜாலியா ஒரு ரவுண்ட் அடிங்க..!
காபி தோட்டம் :
கூர்க்கின் மடிகேரி நகருக்கு அருகில் காபி தோட்டம் அல்லது எஸ்டேட் அமைந்துள்ளது. காபி தோட்டங்களுக்கு மத்தியில் தங்குவதற்கு இட வசதியும் உள்ளது. காபி தோட்டத்திற்கும், மலைகளுக்கும் மத்தியில் அழகிய காட்சிகளை மணிக்கணக்கில் பார்வையிடலாம். போகும் வழியில் காபி கொட்டைகளை பறிப்பது, சிறிய உள்ளூர் பெர்ரி மற்றும் பூக்களை பறிப்பது போன்ற அனுபவங்கள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். காபியை தவிர, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்ற தோட்டங்களையும் நீங்கள் பார்வையிடலாம்.