Bengaluru Tour: பெங்களூரை சுற்றி பலரும் அறியாத இடங்கள்.. வார இறுதியில் ஜாலியா டூர் போங்க! - Tamil News | travel tips tour and travel famous places to visit near bengaluru in tamil | TV9 Tamil

Bengaluru Tour: பெங்களூரை சுற்றி பலரும் அறியாத இடங்கள்.. வார இறுதியில் ஜாலியா டூர் போங்க!

Travel Tips: பெங்களூர் செல்ல விரும்புவோர், பெங்களூர் அருகே வசிப்பவர்கள் இந்த இடங்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சுற்றுலா செல்லலாம். குறிப்பாக மலைகள் மற்றும் காடுகளுக்கு செல்ல வேண்டும் என நினைத்தால் வார இறுதி நாட்களை இங்கு சென்று கழிக்கலாம். இந்தச் சூழலில் பெங்களூருக்கு அருகில் பார்க்க வேண்டிய அழகான இடங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்..

Bengaluru Tour: பெங்களூரை சுற்றி பலரும் அறியாத இடங்கள்.. வார இறுதியில் ஜாலியா டூர் போங்க!

கோப்பு புகைப்படம்

Updated On: 

06 Nov 2024 11:21 AM

பெங்களூர் டூர்: பலர் பயணம் செய்து பல இடங்களை ஆராய விரும்புகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று, புதிய இடங்களை பற்றி தெரிந்துகொள்ள அதிகப்படியான மக்களுக்கு விருப்பம். வேலை என்னும் அடைந்து கிடக்கும் வாழ்க்கைக்குள் இருந்து விடுபட, இயற்கையான இடங்களை கண்டு மன அமைதி பெறுவார்கள். அந்தவகையில் பெங்களூர் செல்ல விரும்புவோர், பெங்களூர் அருகே வசிப்பவர்கள் இந்த இடங்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சுற்றுலா செல்லலாம். குறிப்பாக மலைகள் மற்றும் காடுகளுக்கு செல்ல வேண்டும் என நினைத்தால் வார இறுதி நாட்களை இங்கு சென்று கழிக்கலாம். இந்தச் சூழலில் பெங்களூருக்கு அருகில் பார்க்க வேண்டிய அழகான இடங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்..

ALSO READ: Neem Water Bath: சருமத்திற்கு பல நன்மைகளை தரும் வேப்ப இலை குளியல்.. இப்படி குளிச்சு பாருங்க!

ஸ்கந்தகிரி:

பெங்களூரு அருகே ஸ்கந்தகிரி அருகே மலைப்பாங்கான பகுதி உள்ளது. இங்கு குடும்பத்துடன் சென்று மலையேற்றம் செய்து மகிழலாம். பல சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களுக்கு சுற்றுலாவிற்கு ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை சென்று மகிழ்கின்றனர். இந்த இடம் கலவர துர்கா அல்லது கலவர பெட்டா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடம் 1450 மீட்டர் உயரத்தில் நந்தி மலையால் சூழப்பட்டுள்ளது. மலைப்பாங்கான சாலைகளில் பாழடைந்த கோட்டைகளை இங்கு காணலாம்.

தட்டேகெரே ஏரி:

பெங்களூரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுக்காவில் உள்ள தட்டேகெரே கிராமம். நெரிசலான இடங்களுக்கு செல்ல விரும்பாதவர்கள் தட்டேகெரே ஏரிக்கு செல்லலாம். ஏனென்றால் இது நகரின் எல்லை பகுதியில் உள்ளது. நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள இந்த ஏரிப் பகுதி மிகவும் அமைதியை வழங்குகிறது. பசுமையால் சூழப்பட்ட ஏரியின் சூழல் உங்களை ஈர்க்கும். இயற்கையை விரும்பும் போட்டோகிராஃபர்களுக்கு இந்த இடம் சிறந்தது.

நந்தி ஹில்ஸ்:

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் கங்கா வம்சத்தால் கட்டப்பட்ட பழமையான மலைவாசஸ்தலம் நந்தி மலை. உங்கள் நண்பர்களுடன் இங்கு ஜாலியாக சென்று வரலாம். நந்தி மலை சுமார் 1500 மீட்டர் உயரம் கொண்டது. எனவே, இங்கிருந்து மலைகள் மற்றும் பசுமையின் அழகிய காட்சிகளை காணலாம். நந்தி மலையானது நந்தி துர்கா அல்லது நந்தி கோட்டா என்றும் அழைக்கப்படுகிறது. இது மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் என்ற அதிசயமும் உள்ளது.

ALSO READ: Beauty Tips for Men: ஆண்கள் தங்கள் அழகை எவ்வாறு பராமரிப்பது? இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுங்கள்!

கனகபுரா:

பெங்களூரில் இருந்து 63 கி.மீ தொலைவில் உள்ளது கனகபுரா. இங்கு மலையேற்றம் செய்து இரவு ட்ரெக்கிங் செய்யலாம், மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மலையேற்ற இடங்களிலும் இதன் பெயர் முதன்மையானது. அமைதியான இடத்தைத் தேடும் ஒருவர் குடும்பம் அல்லது நண்பர்களுடன் இங்கு செல்லலாம். இங்கே நீங்கள் இரவில் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் கீழ் தூங்கி மகிழலாம். மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தும் மகிழலாம். இந்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.

பாலை காய்ச்சாமல் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
காலிஃபிளவர் சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தருமா?
ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் வேகம் அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் ஆல்பம்