Sudden Weight Loss: திடீரென உடல் எடை குறைகிறதா..? அப்போ! இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்..! - Tamil News | unexplained sudden weight loss can cause of these diseases | TV9 Tamil

Sudden Weight Loss: திடீரென உடல் எடை குறைகிறதா..? அப்போ! இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்..!

Published: 

26 Jul 2024 07:39 AM

Weight Loss Problem: உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு நேர்மாறாக சிலர் ஒன்றுமே செய்யாமல் இருந்தும் திடீரென எடை குறைவதை சந்திக்கின்றனர். இதனால் ஏன் எதற்கு என்றே தெரியாமல் எடை குறைந்தால் சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு ஒரே தீர்வு மருத்துவர்களை சந்திப்பதுதான். ஏனெனில் திடீரென எடை குறைவது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை.

Sudden Weight Loss: திடீரென உடல் எடை குறைகிறதா..? அப்போ! இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்..!

கோப்பு புகைப்படம்

Follow Us On

எடை இழப்பு: எப்படியாவது முன்னேற வேண்டும் என்று மனிதன் தன்னைதானே ஒரு எந்திரமாக நினைத்துக்கொண்டு நாள்தோறும் ஓடிகொண்டு இருக்கிறான். இதன் காரணமாக மனிதர்களுக்கு பல உடல்நல பிரச்சனைகள் வாட்டி வதைக்கின்றன. குறிப்பாக உடல் எடை அதிகரிப்பது போன்ற உடல் பருமன் பிரச்சனைகள் பலரை தாக்குகின்றன. இதன் காரணமாக உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு நேர்மாறாக சிலர் ஒன்றுமே செய்யாமல் இருந்தும் திடீரென எடை குறைவதை சந்திக்கின்றனர். இதனால் ஏன் எதற்கு என்றே தெரியாமல் எடை குறைந்தால் சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு ஒரே தீர்வு மருத்துவர்களை சந்திப்பதுதான். ஏனெனில் திடீரென எடை குறைவது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. நீங்கள் ஒரு மருத்துவரை சந்தித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டால், சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று தீர்வு காணலாம்.

Also read: Weight Loss : உடல் எடையைக் குறைக்கணுமா? இதிலெல்லாம் கவனம் செலுத்துங்க

என்ன என்ன பிரச்சனைகளாக இருக்கலாம்..?

சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்):

திடீர் எடை இழப்பு நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறியாகும். உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது, ​​அதிக இரத்த குளுக்கோஸ் அளவை உற்பத்தி செய்ய முடியாது. இதன் காரணமாக எடை இழப்பு பிரச்சனைகள் ஏற்படுகிறது. கை, கால்களில் கூச்ச உணர்வு, பலவீனம் மற்றும் எடை குறைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுக்ம். நீரிழிவு நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து, உணவு மற்றும் வாழ்க்கை முறையை சரியாக மாற்றினால் எடை இழப்பு பிரச்சனையை சரி செய்யலாம்.

தைராய்டு:

தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. ஹைப்போ தைராய்டில் எடை வேகமாக அதிகரிக்க தொடங்கும். ஹைப்பர் தைராய்டில் எடை வேகமாக குறைய தொடங்கும். தைராய்டு ஹார்மோன்களின் அதிகபடியான செயல்பாடு காரணமாக இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஒரு சிலருக்கு தைராய்டின் ஆரம்ப கட்டத்தில் அதிக எடை குறையும். ஆரம்பத்திலேயே மருத்துவரிடம், காண்பித்து மருந்துகளை எடுத்து கொள்வது நல்லது.

புற்றுநோய்:

அதிகபடியான எடை குறைவு பிரச்சனைக்கு புற்றுநோயும் ஒரு காரணமாக இருக்கலாம். பெருங்குடல் புற்றுநோய், கருப்பை நோய், மார்பகம், நுரையீரல், கணையம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களாலும் எடை இழப்பு ஏற்படலாம். ஒரு மனிதனுக்கு புற்றுனோய் ஏற்பட்டால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் பலவீனமடையும்.

ஊட்டச்சத்து குறைபாடு:

சில சமயங்களில் உடல் எடை திடீரென குறைவதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். உடலில் தேவையான ஊட்டச்சத்துகள் இல்லாதபோது வயிற்றில் தொற்று ஏற்பட்டு, உடலில் எடை குறைய தொடங்கும்.

மன அழுத்தம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் உடல் சார்ந்த விஷயங்கள். ஆனால், மனதும் ஆரோக்கியமாக இல்லையென்றால் உடல் எடை குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஆகியவை எதிர்பாராத எடை இழப்புக்கு வழிவகுக்கும். பெரும்பாலான மக்கள் மன அழுத்தம் காரணமாக, சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள். இதன் காரணமாக, உடலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பில் இருந்து ஆற்றல் உறிஞ்சப்படும். இதனால் ஒரு நபரின் எடை குறைய தொடங்கும்.

Also read: Weight Loss Tips : உடல் எடையை குறைக்க சாப்பிட வேண்டிய பழங்கள்..!

அல்சர்:

வயிற்றுப் புண்கள் அல்லது அல்சர் உள்ளவர்களிடமும் எடை இழப்பு பொதுவாக ஏற்படும்.

எனவே உடற்பயிற்சி மற்றும் டயட் இல்லாமல் ஒருவரின் உடல் எடை குறைந்தால், கண்டிப்பாக மருத்துவரிடம் பரிசோதிப்பது நல்லது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version