5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lemon Peels: எலுமிச்சம்பழத் தோலை தூக்கி எறியாதீங்க.. இவ்வளவு விஷயத்திற்கு பயன்படும்!

Kitchen Hacks: எலுமிச்சையை போலவே அதன் தோல்களும் நன்மைகளில் பொக்கிஷம் என்பது தெரிவது கிடையாது. எலுமிச்சையின் தோல்களில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உங்களது உடலுக்கு ஆரோக்கியத்தையும், சருமத்திற்கு அழகையும் பராமரிக்க உதவும். அந்தவகையில் இன்று எலுமிச்சை மட்டுமின்றி அதன் தோல் உடலுக்கு, வீட்டை சுத்தம் செய்வதற்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Lemon Peels: எலுமிச்சம்பழத் தோலை தூக்கி எறியாதீங்க.. இவ்வளவு விஷயத்திற்கு பயன்படும்!
எலுமிச்சை தோல் (Image: Glasshouse Images/The Image Bank/Getty Images)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 12 Sep 2024 13:04 PM

எலுமிச்சை தோலின் பயன்கள்: பெரும்பாலான வீடுகளில் சாறு பிழிந்து எடுத்தவுடன் அதன் எலுமிச்சை தோலை தூக்கி போட்டுவிடுகிறார்கள். நீங்களும் இதுவரை இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து எடுத்து கொள்வதன் மூல எடை இழப்பு, செரிமான பிரச்சனைகள், வாந்தி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். எலுமிச்சையை போலவே அதன் தோல்களும் நன்மைகளில் பொக்கிஷம் என்பது தெரிவது கிடையாது. எலுமிச்சையின் தோல்களில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உங்களது உடலுக்கு ஆரோக்கியத்தையும், சருமத்திற்கு அழகையும் பராமரிக்க உதவும். அந்தவகையில் இன்று எலுமிச்சை மட்டுமின்றி அதன் தோல் உடலுக்கு, வீட்டை சுத்தம் செய்வதற்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

லெமன் டீ:

உங்கள் காலை பொழுதை நன்றாக தொடங்க லெமன் டீ குடிக்கலாம். நீங்கள் எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்த பிறகு அதை தூக்கி எறிவதற்கு பதில், டீ தயாரிக்க எலுமிச்சை தோலை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோல்களில் இருந்து டீ தயாரிக்க பிழிந்து எடுக்கப்பட்ட எலுமிச்சை தோல்களை தண்ணீரில் கொதிக்க வையுங்கள். அதன் பிறகு சுவைக்கு ஏற்றாற்போல் கொதிக்க வைத்த தண்ணீரில் தேயிலை மற்றும் தேன் கலந்து கொள்ளவும். பின் வடிகட்டி குடித்தால் சுவையான லெமன் டீ ரெடி.

ALSO READ: Health Tips: மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்.. இவை பிரச்சனைகளை தரலாம்!

எலுமிச்சை தோல் தூள்:

எலுமிச்சை தோல் பொடி செய்து பயன்படுத்தி கொள்ளலாம். எலுமிச்சை தோல் பொடி செய்ய, வெயிலில் நன்கு உலர்த்திய பின் அரைத்து பொடி தயார் செய்து கொள்ளுங்கள். இப்போது இந்த பொடியை பயன்படுத்தி லெமன் சாதம், சாம்பார் உள்ளிட்ட பல உணவுகளில் பயன்படுத்தி சுவையான உணவுகளை தயாரிக்கலாம்.

ஊறுகாய்:

எலுமிச்சை சாற்றை பிரித்தெடுத்த பிறஜ்ய் அடிக்கடி தூக்கி எறியப்படும் எலுமிச்சை தோல்களிலிருந்தும் சுவையான ஊறுகாயை தயார் செய்யலாம். எப்போதும் போல் எலுமிச்சை பழத்திற்கு பதிலாக எலுமிச்சை தோலை பயன்படுத்தி ஊறுகாய் செய்யலாம். இதுவும் அதற்கு ஈடான சுவையை தரும். ஒரு முறை நீங்கள் அது சாப்பிட்டால் அதன் சுவையை உங்களால் மறக்க முடியாது.

பற்களை பிரகாசமாக்கும்:

உங்கள் பற்களை மெருகூட்ட எலுமிச்சை தோல்களையும் பயன்படுத்தலாம். இதற்கு எலுமிச்சம்பழத்தோலில் சிறிதளவு உப்பைத் தடவி, பற்களில் மசாஜ் செய்யவும். இப்படி சில நாட்கள் செய்து வந்தால், உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீங்கி, இயற்கையான முறையில் சுத்தம் செய்யும்.

பாத்திரங்களில் உள்ள கெட்ட வாசனை நீங்கும்:

எலுமிச்சம்பழத்தோலை நன்கு தண்ணீரில் கொதிக்க வைத்து, எண்ணெய் மற்றும் மசாலா வாசனை உள்ள இந்த வெந்நீரில் அந்த பாத்திரங்களில் பயன்படுத்தலாம். சிறிது நேரம் வழக்கம்போல் பாத்திரங்களை சுத்தம் செய்தால் பாத்திரங்களில் அடிக்கும் கெட்ட வாசனை நீங்கி பளபளக்கும்.

கிச்சன் சின்க்கை சுத்தம் செய்யலாம்:

வீட்டின் சமையலறையில் இருக்கும் கிச்சன் சின்க் கறைகளை எலுமிச்சை தோல்கள் மூலம் அகற்றலாம். இதற்கு எலுமிச்சைத் தோலைத் துண்டுகளாக நறுக்கி, ஒன்று முதல் இரண்டு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் பாத்திரம் கழுவும் திரவம் உள்ளிட்டவற்றை சேர்த்து கொள்ளவும். அதன்பின் கிச்சன் சின்க்கில் உள்ள உப்பு கறை மற்றும் மற்ற கறைகள் மீது அழுத்தி தேய்த்தால் பளபளக்கும்.

ALSO READ: Health Tips: மூளைக்கு புத்துணர்ச்சி தரும் கத்திரிக்காய்.. புற்றுநோய்க்கு சூப்பர் ஃபுட்..!

சருமத்திற்கு அழகு தரும்:

எலுமிச்சை தோல்கள் உதவியுடன் நீங்கள் வியர்வை வாசனை வெளியேற்றலாம். இதற்கு எலுமிச்சைத் தோல்களைக் கொண்டு அக்குளில் மசாஜ் செய்து, வியர்வை வாசத்தை நீக்கலாம். மேலும், மீதமுள்ள எலுமிச்சை தோல்கள் முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் போன்ற உடல் பாகங்களில் உள்ள கருமையை நீக்க பயன்படுத்தலாம். எலுமிச்சைத் தோலை உலர்த்தி பொடி செய்து ஃபேஸ் பேக்கில் பயன்படுத்தவும். இது தவிர, குளிக்கும் நீரில் எலுமிச்சைத் தோலைச் சேர்த்துக் கொள்ளலாம், இது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

எலுமிச்சை தோல் ஸ்க்ரப்பை சருமத்தில் தடவுவது பல பிரச்சனைகளை நீக்குகிறது. இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள், சருமத்தில் உள்ள முகப்பரு, சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. இதில் உள்ள அமிலம் சருமத்தில் உள்ள கருமை மற்றும் சுருக்கங்களை நீக்குகிறது. இது சருமத்தை இறுக்கமாக்குவதையும் தடுக்கிறது.

Latest News