5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kidney Care: சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது இவ்வளவு ஆபத்தா? இனிமேல் இதை செய்யாதீர்கள்!

Health Tips: சிறுநீரை கழிக்காமல் நீண்டநேரம் அடக்கி வைப்பது சிறுநீர்ப்பையில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், கூச்ச உணர்வு போன்றவை ஏற்படுத்துகிறது. சிறுநீரை தொடர்ந்து அடக்கி வைப்பது சில நேரங்களில் சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்று மற்றும் அழற்சியானது பெரிய பிரச்சனையாக உருவெடுத்து சிறுநீரகங்களுக்கும் பரவ தொடங்குகிறது. 

Kidney Care: சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது இவ்வளவு ஆபத்தா? இனிமேல் இதை செய்யாதீர்கள்!
சிறுநீரை அடக்குதல் (Image: freepik)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 10 Nov 2024 22:40 PM

வேலை பளு, பயணம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக பலர் அன்றாட வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். இதனால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலும், சிலர் வேலையில் அதிக கவனம் செலுத்தி சிறுநீர் கழிப்பதை அடக்கி வைத்து தவிர்க்கிறார்கள். எவ்வளவு முட்டி கொண்டு சிறுநீர் வந்தாலும், சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கிறார்கள். இந்த பழக்கம் குறித்து மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், சிறுநீரை அடக்கி கொண்டு உட்கார்ந்து இருப்பது பல தீவிரமான நோய்களுக்கு வழிவகுக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

நாம் சரியான நேரத்தில் உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்கிறோம். இதன் காரணமாக, சிறுநீரகங்களில் அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் தான் நம் உடலில் இருந்து சிறுநீரை சரியான நேரத்தில் அகற்றுவது மிகவும் முக்கியம். சிறுநீர் நம் உடலில் சேரும் நச்சுகளை நீக்குகிறது. இப்படியான சூழ்நிலையில், சிறுநீரை அடக்கி கொள்வது, கடுமையான பிரச்சினையாக மாறும். அந்தவகையில், சிறுநீரை அடக்கி கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை பார்ப்போம்.

ALSO READ: Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளதா..? உங்கள் பாதங்களை கொண்டே அறியலாம்..!

சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருப்பதால் ஏற்படும் தீமைகள்:

சிறுநீரகங்களில் அழுத்தம்:

ஏதாவது ஒரு வேலையில் பிஸியாக இருப்பதன் மூலம் சிறுநீரை அடக்கி கொண்டு உட்கார்ந்து விடுகிறோம். இப்படி, நீண்ட அடக்கி உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால், சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன்மூலம் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தையும் தருகிறது.

சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஆபத்து:

சிறுநீரை நீண்ட நேரம் அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பது சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) அபாயத்தை அதிகரிக்க செய்யும். சிறுநீரை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால், சிறுநீர்ப்பையில் பாக்டீரியாக்கள் வளர தொடங்கும். இது சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுத்தும் அபாயத்திற்கு வழிவகுக்கும். இதன் காரணமாகவே, பலருக்கு சிறுநீரகங்களில் அடிக்கடி UTI களால் பாதிக்கப்படுகின்றன.

சிறுநீர்ப்பையில் வீக்கம்:

சிறுநீரை கழிக்காமல் நீண்டநேரம் அடக்கி வைப்பது சிறுநீர்ப்பையில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், கூச்ச உணர்வு போன்றவை ஏற்படுத்துகிறது. சிறுநீரை தொடர்ந்து அடக்கி வைப்பது சில நேரங்களில் சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்று மற்றும் அழற்சியானது பெரிய பிரச்சனையாக உருவெடுத்து சிறுநீரகங்களுக்கும் பரவ தொடங்குகிறது.

சிறுநீர்ப்பைத் திறனில் ஏற்படும் விளைவு :

சிறுநீரை மீண்டும் மீண்டும் அடக்கி வைப்பது சிறுநீர்ப்பை தசைகளை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக, அதன் திறன் படிப்படியாக குறையத் தொடங்கி, செயல்பாட்டையும் இழக்க செய்யலாம். இதன் காரணமாக சிறுநீர்ப்பை முழுவதுமாக பழுது அடைந்து சிறுநீர் கழிக்கும் போது எரியும் வலியும் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.

ALSO READ: Pineapple: இந்த பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழம் தொல்லை தரும்.. சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது..!

ஆரோக்கியமான சிறுநீரக குறிப்புகள் இதோ:

  • சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியவுடன், அதை  தாமதப்படுத்தாமல் உடனடியாக பாத்ரூம் செல்லுங்கள்
  • குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை அல்லது வேலைக்கு இடையில் சிறுநீர் கழிப்பதற்கான நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்.
  • சிறுநீர்ப்பையில் அதிக நேரம் சிறுநீரை தேக்கி வைக்காதீர்கள். இது பல பிரச்சனைகளை தரும்.
  • நீங்கள் நீண்ட நேரம் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், முன்னதாகவே சிறுநீர் கழித்து கொள்ளுங்கள். வந்தவுடன் போய்விடலாம் என்று இருக்க வேண்டாம்.
  • சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்க மறக்கக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • உடலில் சிறுநீரை தேக்கி வைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும்.
  • சரியான நேரத்தில் சிறுநீர் கழிப்பதன் மூலம், சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், கடுமையான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
  • இவ்வாறு செய்வதன்மூலம், சிறுநீரகத்தையும் பாதுகாக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News