Health Tips: பாலியல் ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

Health Advice: பகல் முழுவதும் நாம் வேலை பார்ப்பதால், இரவில் வீட்டிற்குள் வந்ததும் படுக்கையில் படுத்தவுடன் தூங்கி விடுகிறோம். இதனால், உங்களுக்கும், உங்கள் துணைக்கும் போதுமான பாலியல் இன்பங்கள் கிடைப்பதில்லை. உடலுறவு என்பது இருவரையும் உடலளவிலும், மனதளவிலும் இணைக்கும் ஒரு அங்கமாகும். இதை ஒருவர் வெறுத்து, ஒருவர் அனுபவித்தாலும் உடலுறவு முழுமையடையாது.

Health Tips: பாலியல் ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

பாலியல் ஆரோக்கியம் (Image: freepik)

Published: 

03 Sep 2024 20:00 PM

உடலுறவு: உடலுறவு என்பது நீண்ட நேரம் தொடரவும், பாலுறவு இன்பத்தை முழுமையாக அனுபவிக்கவும், நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் முழு கவனம் செலுத்த வேண்டியது மிக மிக முக்கியம். பகல் முழுவதும் நாம் வேலை பார்ப்பதால், இரவில் வீட்டிற்குள் வந்ததும் படுக்கையில் படுத்தவுடன் தூங்கி விடுகிறோம். இதனால், உங்களுக்கும், உங்கள் துணைக்கும் போதுமான பாலியல் இன்பங்கள் கிடைப்பதில்லை. உடலுறவு என்பது இருவரையும் உடலளவிலும், மனதளவிலும் இணைக்கும் ஒரு அங்கமாகும். இதை ஒருவர் வெறுத்து, ஒருவர் அனுபவித்தாலும் உடலுறவு முழுமையடையாது. எனவே, உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த இந்த விஷயங்களை மனதில் வைத்துகொள்வது மிக மிக முக்கியம்.

ALSO READ: Health Tips: உடலுறவின் போது இந்த பழக்கங்கள் மனநிலையை கெடுக்கும்.. இதையெல்லாம் மாற்றி கொள்ளுங்கள்!

கால வரம்பு வேண்டாம்:

வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மாதத்திற்கு 10 முறை போன்ற கட்டுப்பாடுகளை கணவர் – மனைவி தங்களுக்குள் விதித்து கொள்கிறார்கள். இதன் காரணமாக உடலுறவுக்குள் காதலை தராது. வெறும் கடமையாக மட்டுமே இருக்கும். எனவே, உங்களுக்குள் விருப்பம் இருக்கும்போதேல்லாம் உடல் ரீதியாக ஒன்றாக இருப்பது மிக மிக முக்கியம். இது பாலுறவு இன்பத்தை அதிகரிப்பது மட்டுமின்றி உடலுறவுக்கான நேரத்தையும் அதிகரிக்கும். எனவே, உங்கள் உறவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுப்படுத்தாதீர்கள்.

புரத உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்:

கணவர் – மனைவிக்குள் நல்ல செக்ஸ் வாழ்க்கை வேண்டுமெனில், உங்கள் உணவில் அதிக புரதங்களை எடுத்து கொள்வது நல்லது. அதன்படி, சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், கோழிக்கறி, முட்டையின் வெள்ளைக்கரு, பால், மீன் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.

போதைப்பொருள்:

நீங்கள் முழுமையான உடலுறவை அனுபவிக்க வேண்டுமெனில், போதை பொருள்களில் இருந்து விலகி இருப்பது மிக மிக முக்கியம். குடிபோதையில் உடலுறவு கொள்பவர்கள் தங்களது இன்பத்திற்காக, எதிர் பாலினத்தாரர்களிடம் முரட்டு தனமாக நடந்து கொள்வார்கள். அத்தகைய சூழ்நிலையில், போதை இல்லாமல் உறவு கொள்ளும்போது உங்களுக்கு மட்டும் மகிழ்ச்சி இல்லாமல், உங்கள் துணைக்கும் மகிழ்ச்சியை தரும்.

மன அழுத்தம்:

தங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்பவர்கள் உடலுறவிலும் மிகவும் ரசனையுடன் ஈடுபடுகிறார்கள். எனவே உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்வது மிக முக்கியம். நீங்கள் கவலை மற்றும் மன அழுத்தத்தில் இருந்தால், உங்களது உடலுறவும் மகிழ்ச்சியாக இருக்காது, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்காது. இதன் காரணமாக, உங்கள் துணையை உங்களால் திருப்திப்படுத்த முடியாது.

ALSO READ: Health Tips: இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கா..? இது பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்!

உடற்பயிற்சி:

அதிகமாக உடல் உழைப்பு இல்லாதவர்கள், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பாலியல் திறன் குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றன. எனவே, தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலுறுதி கிடைப்பதன் மட்டுமின்றி, பாலியல் ஆற்றலை அதிகரிக்க செய்யும். இது உங்களுக்கு மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்க உதவி செய்யும்.

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்