Lizard Remedies: வீடு முழுவதும் பல்லி தொல்லையா..? இந்த பொருட்களை கொண்டு ஓட ஓட விரட்டுங்க..! - Tamil News | Use these methods to repel nuisance lizards from your home; home tips in tamil | TV9 Tamil

Lizard Remedies: வீடு முழுவதும் பல்லி தொல்லையா..? இந்த பொருட்களை கொண்டு ஓட ஓட விரட்டுங்க..!

Published: 

16 Sep 2024 19:54 PM

Home Tips: வீட்டில் சிலருக்கு பல்லிகள் என்றாலும் பலரும் நடுங்குவார்கள். சிலருக்கு பல்லி அருகில் வந்தால், நீண்ட தூரம் துள்ளி குத்தி ஓடி செல்வார்கள். பல்லியை பார்த்து பயந்து ஓடுவதற்கு ஹெர்பெட்டோஃபோயியா என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, ஹெர்பெட்டோஃபோபியால் பாதிக்கப்பட்டவர்கள் சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ பல்லியை நடுங்க தொடங்குவார்கள். அதேசமயம் சமையலறையில் பல்லி இருந்தால் சமையல் செய்யும்போது அதில் விழுந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

Lizard Remedies: வீடு முழுவதும் பல்லி தொல்லையா..? இந்த பொருட்களை கொண்டு ஓட ஓட விரட்டுங்க..!

பல்லி (Image: freepik)

Follow Us On

குளிர்காலம் அல்லது கோடை காலம் எதுவாக இருந்தாலும், பல்லி எப்போதும் நம்மை விட நம் வீட்டில் அதிகமாக உலா வரும். வீட்டில் சிலருக்கு பல்லிகள் என்றாலும் பலரும் நடுங்குவார்கள். சிலருக்கு பல்லி அருகில் வந்தால், நீண்ட தூரம் துள்ளி குத்தி ஓடி செல்வார்கள். பல்லியை பார்த்து பயந்து ஓடுவதற்கு ஹெர்பெட்டோஃபோயியா என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, ஹெர்பெட்டோஃபோபியால் பாதிக்கப்பட்டவர்கள் சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ பல்லியை நடுங்க தொடங்குவார்கள். அதேசமயம் சமையலறையில் பல்லி இருந்தால் சமையல் செய்யும்போது அதில் விழுந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. பல்லியில் ஒரு விஷம் உள்ளது. இது உணவு பொருளில் விழுந்தால் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கெடுக்க செய்யும். அந்தவகையில், இன்று நாம் பல்லிகளை எவ்வாறு வீட்டில் இருந்து அகற்றுவது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Virat Kohli: விராட் கோலி கணக்கில் மற்றொரு மெகா சாதனையா? பாண்டிங்கை பின்னுக்கு தள்ள மிகப்பெரிய வாய்ப்பு..!

வெங்காயம்:

வெங்காயம் சமையலுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், வீடு மற்றும் சமையலறைகளில் இருக்கும் பல்லிகளை விரட்டலாம். வெங்காயத்தில் இருந்து வெளியேறும் ஒரு கடுமையான வாசனை பல்லிகளை ஓடவிடும். பல்லி வரும் இடங்களில் வெங்காயத்தை வெட்டி துண்டு துண்டாக வைக்கவும். இதில் இருந்து வரும் வாசனை பல்லிகளை வீட்டிற்குள் வர வைக்காது. மேலும், சுவரில் இருக்கும் பல்லிகளை விரட்ட வெங்காயத்தை உரித்து அதன் துண்டுகளை நூலால் கட்டி சுவரில் தொங்கவிட்டால் பல்லிகள் ஓடிவிடும்.

பூண்டு:

சமையலில் பயன்படுத்தப்படும் மற்றொரு பொருளும் பல்லியை விரட்டும். அந்தவகையில், வீட்டில் இருக்கும் பல்லிகளை விரட்ட பூண்டை பயன்படுத்தலாம். வீட்டில் பல்லிகள் உலா வரும் ஜன்னல், கதவு உள்ளிட்ட இடங்களில் பூண்டை வெட்டி வைக்கலாம். பூண்டில் இருந்து வெளிவரும் கடுமையான வாசனை பல்லிகளை விரட்ட செய்யும். இது தவிர, பூண்டை நசுக்கி அதில் சிறிதளவு தண்ணீரை தெளித்து பல்லி வரும் இடங்களில் தெளித்தால், அது மீண்டும் வரவே வராது.

நாப்தலீன் (அந்துருண்டை):

நாப்தலீன் உருண்டைகள் என்று அழைக்கப்படும் அந்துருண்டை பூச்சிகளை விரட்டவும், ஆடைகளை வாசனையுடன் வைக்கவும், பயன்படுகின்றன. இதை வீட்டில் அலமாரி, சமையலறை போன்ற உயரமான இடங்களில் அந்துருண்டை வைத்தால் பல்லிகள் வராது. இதில் இருந்து வரும் வாசனை பல்லிகளை துணிகளை அண்ட விடாது.

முட்டை ஓடுகள்:

வீடுகளில் பல்லிகள் வந்து செல்லும் இடங்களை பார்த்தால் முட்டை ஓடுகளை வைக்கலாம். முட்டை ஓடுகளை சிறிது சிறிதாக நொறுக்கி வைத்தால், பல்லிகள் உங்கள் அறை மற்றும் குளியலறையில் வலம் வராது.

பெப்பர் ஸ்ப்ரே:

பெப்பர் ஸ்ப்ரே மற்றும் சில்லி ஸ்ப்ரே உள்ளிட்டவற்றை பயன்படுத்தியும் வீடுகளில் சுற்றி திரியும் பல்லிகளை விரட்டலாம். ஸ்ப்ரேயில் இருந்து வெளிவரும் கடுமையாக வாசனை பல்லிகளை அதிரடியாக விரட்டும். பெப்பர் ஸ்ப்ரேயை சந்தையில் வாங்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே பெப்பர் ஸ்பிரே தயார் செய்து கொள்ளலாம். முதலில் சிறிது மிளகை எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இப்போது அதை தண்ணீரில் நன்கு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். இப்போது நீங்கள் பல்லிகள் காணப்படும் இடங்களில் தெளித்தால் மீண்டும் தொல்லைகளை தராது.

ALSO READ: IND vs BAN: “இந்திய அணியை வெற்றி பெற விட மாட்டோம்”- சவால் விட்ட வங்கதேச கேப்டன் சாண்டோ!

பல்லியை விரட்ட மற்றொரு முறை:

பல்லியின் தொல்லை போக்க ஒரு வெங்காயம் மற்றும் 5 பூண்டு, சிறிதளவு மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி நைசாக அரைத்து கொள்ளவும். இரண்டையும் அரைந்த பிறகு, ஒரு பாத்திரத்தில் வைத்து பின்னர் ஒரு ஸ்பூன் சமையல் சோடா, சிறிது கருப்பு மிளகு தூள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்த பிறகு, ஒரு பாத்திரத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீர் சேர்த்து பின்னர் அதை வடிகட்டவும். இதற்கு பிறகு, வடிகட்டிய தண்ணீரை ஏதேனும் காலி ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி சமையலறை உட்பட வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளிக்கவும். இதை செய்வதன் மூலம், வீடுகளில் இருக்கும் பல்லிகளை விரட்டலாம்.

ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
Exit mobile version