5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Travel Tips: போபாலைச் சுற்றியுள்ள இயற்கை அழகின் அதிசயங்கள்.. மறக்காமல் இந்த இடத்திற்கு செல்லுங்கள்!

Bopal Tour: மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால், அழகிய ஏரிகள் மற்றும் பிற வரலாற்றுத் தலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடம். ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படும் போபால் நகரம் ஒரு சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற ஊர். இங்கு காணப்படும் பாறை ஓவியங்கள் சுமார் 30, 000 ஆண்டுகள் பழமையானவை என்பதிலிருந்து இதன் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளலாம். இங்குள்ள இயற்கை அழகும், நிலத்தின் வளமான மற்றும் புகழ்பெற்ற கடந்த கால வரலாறும் போபாலுக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது.

Travel Tips: போபாலைச் சுற்றியுள்ள இயற்கை அழகின் அதிசயங்கள்.. மறக்காமல் இந்த இடத்திற்கு செல்லுங்கள்!
போபால் (Image: Subhendu Sarkar/LightRocket via Getty Images)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 09 Sep 2024 15:12 PM

போபால் டூர்: கோடை விடுமுறையாக இருந்தாலும் சரி, மழை காலமாக இருந்தாலும் சரி. நம் குழந்தைகளுக்கு பள்ளிகளை கடந்து புதிய அனுபவத்தை கொடுக்கவும், நமக்கு பணியில் இருந்து சிறிது ஓய்வு எடுக்கவும் பயணம் மிகவும் தேவையாக உள்ளது. அந்தவகையில் மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால், அழகிய ஏரிகள் மற்றும் பிற வரலாற்றுத் தலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடம். ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படும் போபால் நகரம் ஒரு சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற ஊர். இங்கு காணப்படும் பாறை ஓவியங்கள் சுமார் 30, 000 ஆண்டுகள் பழமையானவை என்பதிலிருந்து இதன் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளலாம். இங்குள்ள இயற்கை அழகும், நிலத்தின் வளமான மற்றும் புகழ்பெற்ற கடந்த கால வரலாறும் போபாலுக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. அந்தவகையில், இன்று நாம் மத்திய பிரதேசத்தின் தலைநகரமான போபாலில் என்னென்ன சுற்றுலா தலங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: Travel Tips: அகமதாபாத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

மேல் ஏரி:

போலாபின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று மேல் ஏரி. இது போஸ்தால் அல்லது படா தலாப் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரியானது 11ம் நூற்றாண்டில் ராஜா போஜ் என்பவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. நீங்கள் போபாலுக்கு குடும்பத்துடன் செல்கிறீர்கள் என்றால், மேல் ஏரிக்கு மறக்காமல் சென்று வாருங்கள். மேல் ஏரியில் படகு கிளப் ஒன்று உள்ளது. இங்கு நீங்கள் குடும்பத்துடன் பெடல் படகு படகு சவாரி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு, நல்ல நினைவுகளை எடுத்து செல்லலாம்.

போஜ்பூர் கோயில்:

போஜ்பூர் கோயில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முழுமையடையாத கோயிலாகும். இது முழுதாக கட்டப்படவில்லை என்ற முழு காரணமும் தெரியவில்லை. இந்த கோயில் பெட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இருப்பினும், இந்த முழுமையடையாத கோயிலில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும் உங்களை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தும். போஜ்பூர் கோயிலில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகவும் உயரமான சிவலிங்கம் ஆகும். ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்த மிகப்பெரிய சிவலிங்கம், 18 அடி உயரமும், 7.5 விட்டமும் கொண்டது.

பிம்பேட்கா:

போபாலில் இருந்து சுமார் 46 கிமீ தொலைவில் அமைந்துள்ள பிம்பேட்கா, போபாலில் வரலாற்றை கூறுகிறது. கடந்த 1957-58 காலகட்டத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் விஷ்ணு வாகங்கர் என்பவரால் பிம்பேட்கா குகை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையில் உள்ள பாறை ஓவியங்கள் சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஓவியங்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்து கூறுகின்றன. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இங்குள்ள ஓவியங்கள் தங்கள் வாழ்வில் பார்க்க வேண்டியது மிக முக்கியம்.

தாஜ் – உல் – மஸ்ஜித்:

தாஜ் – உல் – மஸ்ஜித் ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும். இந்த மசூதி 23,312 சதுட அடி நிலப்பரப்புக்கு பரந்து விரிந்து உள்ளது. தாஜ் – உல் – மஸ்ஜித் கட்டுமானத்தை போபாலின் பேகம் சுல்தான் ஷாஜகான் கட்ட தொடங்கினார். பணம் இல்லாத காரணத்தினால், இவரது ஆட்சியில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. அதை தொடர்ந்து, 1971ம் ஆண்டு அல்லாமா முகமது இன்ரான் கான் நத்வி அஸ்ஹாரி என்பவர் இந்த மசூதியை கட்டி முடித்தார். இந்த மசூதியின் சிறப்பான வேலைப்பாடுகளைக் காண வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.

வான் விஹார் தேசிய பூங்கா:

வான் விஹார் தேசிய பூங்கா போபால் நகரின் மையத்தில் அமைந்துள்ள 445.21 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவி இருக்கிறது. இங்கு நிச்சயம் குழந்தைகளுக்கு பிடித்த இடங்களில் ஒன்றாக இருக்கும். இந்த தேசிய பூங்காவில் புலி, சிறுத்தை உள்ளிட்ட பல காட்டு விலங்குகளை கண்டு களிக்கலாம். அதேபோல், வான் விஹார் தேசிய பூங்காவில் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. வான் விஹார் ஏரியின் கரையில் இந்த தேசிய பூங்கா அமைந்துள்ளது சிறப்புக்குரிய ஒரு விஷயம். நீங்கள் இங்கு கார், சைக்கிள் அல்லது நடந்து கூட சென்று முழு தேசிய பூங்கா அழகையும் காணலாம்.

ALSO READ: Travel Tips: அதிசயங்கள் நிறைந்த ஆந்திராவிற்கு டூர் பிளானா? இதுதான் சுற்றி பார்க்க சிறந்த இடங்கள்!

அமர்கர் நீர்வீழ்ச்சி:

அமர்கர் நீர்வீழ்ச்சி போபாலில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு நீங்கள் சென்றால், பசுமை அழகை கண்டு கழிக்கலாம். மழைக்காலத்தில், இந்த இடத்தின் அழகு அனைவரின் மனதையும் வெல்லும். 50 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியைப் பார்த்தவுடன் இங்கிருந்து வீட்டிற்கு செல்ல உங்களுக்கு மனமே இருக்காது.

சாஞ்சி ஸ்தூபி:

போபாலில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் சாஞ்சி ஸ்தூபி அமைந்துள்ளது. இந்த சாஞ்சி ஸ்தூபியை பேரரசர் அசோகர் கிமு 3ம் நூற்றாண்டில் கட்டினார். இந்தியாவில் முக்கிய பௌத்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்தூபியின் பெரிய குவிமாடத்தில் ஒரு பெட்டகம் இருப்பதாகவும், இந்த பெட்டகத்திற்குள் புத்தர் பயன்படுத்திய பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மகாதேவ் பானி நீர்வீழ்ச்சி:

போபாலில் இருந்து 25 கிலோமீட்டர் பயணம் செய்தால், மகாதேவ் பானி நீர்வீழ்ச்சியில் அழகை காணலாம். போபாலை சுற்றியுள்ள அழகான இடங்களில் இது மிகவும் முக்கியமானது. 100 அடி உயர நீர்வீழ்ச்சியின் அழகு, நிச்சயம் உங்களை புது உலகிற்கு அழைத்து செல்லும்.

Latest News