5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: உங்கள் கைகள் அடிக்கடி நடுங்குகிறதா..? இந்த வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்!

Vitamin B12 Foods: உடலில் வைட்டமின் பி12 குறைபாடு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையை அதிகரிக்கும். மேலும் சுவாசப் பிரச்சனைகள், மன பலவீனம் போன்ற பிரச்சனைகளும் தெரியும். நாக்கு வீக்கம் மற்றும் வாயில் கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்வது நல்லது.

Health Tips: உங்கள் கைகள் அடிக்கடி நடுங்குகிறதா..? இந்த வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்!
வைட்டமின் பி12 (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2024 18:55 PM

உடலில் ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அது உங்களுக்கு மீண்டும் மீண்டும் சில அறிகுறிகளை காட்டும். நீங்கள் ஆரோக்கியாக உங்கள் உடலை பாதுகாக்க விரும்பினால், உடலில் ஏற்படும் அறிகுறிகளை எக்காரணத்தை கொண்டு புறக்கணிக்கக்கூடாது. உடலில் நீண்ட காலமாக அத்தியாவசிய வைட்டமின் அல்லது தாதுப் பற்றாக்குறை இருந்தால், அதன் விளைவுகள் உங்கள் உடலில் தெரியும். அதேபோல், உங்கள் கைகள் அடிக்கடி நடுங்கினால், இது வைட்டமின் பி12 குறைபாட்டாக இருக்கலாம். வைட்டமின்-பி12 உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்களில் ஒன்று. இதன் குறைவினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உற்பத்தியாகும்.

ALSO READ: Health Tips: நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது முழங்கால்களை பாதிக்குமா..? இது உண்மையா..?

கைகள் ஏன் நடுங்குகின்றன..?

உடலில் வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும்போது, உங்கள் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக, உங்கள் கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் உண்டாகும். இதுதவிர, வைட்டமின் 12 குறைப்பாட்டின் காரணமாக உங்கள் கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வும் ஏற்படலாம்.

மேலும், வைட்டமின் பி 12 குறைபாடு நரம்புகளை தவிர, எலும்பு ஆரோக்கியத்தையும், தசை ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்யும். நீங்கள் இளம் வயதிலேயே நடக்க சிரமத்தை எதிர்கொண்டாலோ அல்லது மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்பட்டாலோ உடலில் வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்.

இரத்த சோகை:

வைட்டமின் பி 12 உடலில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் பி 12 குறைபாடு இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டை ஏற்படுத்தும், இது இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. மேலும், வைட்டமின் பி12 குறைபாடு சோர்வு, பலவீனம், கூச்ச உணர்வு மற்றும் நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். வைட்டமின் பி12 டிஎன்ஏவை உருவாக்குவதிலும் சரிசெய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் அவசியம்.

உடலில் வைட்டமின் பி12 குறைபாடு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையை அதிகரிக்கிறது. மேலும் சுவாசப் பிரச்சனைகள், மன பலவீனம் போன்ற பிரச்சனைகளும் தெரியும். நாக்கு வீக்கம் மற்றும் வாயில் கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்வது நல்லது.

ALSO READ: Sore Throat: மழைக்காலத்தில் தொண்டை புண் தொல்லையா..? இதை செய்து குணப்படுத்தலாம்!

வைட்டமின் பி12 குறைபாடு வயிற்றுப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இந்த வைட்டமின் சரியான அளவில் இல்லாவிட்டால், மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த வைட்டமின் குறைபாட்டை ஈடுகட்ட கொழுப்பு நிறைந்த மீன், இறைச்சி, முட்டை, பால், பால் பொருட்கள், கீரை போன்ற பல்வேறு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய என்ன செய்யலாம்..?

  • பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடை காலங்களில் கிடைக்கும் சிறந்த பழம். அந்தவகையில், மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
  • மாம்பழங்களை தினமும் சாப்பிட்டு வர வைட்டமின் பி12 குறைபாடு நீங்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மாம்பழத்தை போன்று ஆப்பிளிலும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டை ஈடுசெய்ய தினமும் உங்கள் உணவில் ஒரு ஆப்பிளை சாப்பிடலாம்.
  • பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அன்னாசிப்பழம் வைட்டமின் பி12 குறைபாட்டையும் ஈடுசெய்யும். இது செரிமானத்தை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி செய்யும்.
  • முட்டை, சோயாபீன்ஸ், காய்கறிகள் போன்றவற்றில் அதிக அளவு வைட்டமின் பி12 உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், இந்த வைட்டமின் குறைபாட்டை ஈடுசெய்யலாம்.
  • சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கொண்ட மற்றொரு பழம் கிவி. இதில் நார்ச்சத்து, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-பி12 நிறைந்துள்ளது. எனவே வைட்டமின்-பி12 குறைபாட்டை போக்க கிவி சாப்பிடலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News