தாங்க முடியாத முதுகுவலியையும் குறைக்கும் சிம்பிளான உடற்பயிற்சி..! - Tamil News | walking lower back pain in tamil | TV9 Tamil

தாங்க முடியாத முதுகுவலியையும் குறைக்கும் சிம்பிளான உடற்பயிற்சி..!

Updated On: 

16 Jul 2024 07:49 AM

ஒரு குறிப்பிட்ட வயதை நெருங்கிவிட்டாலே கீழ் முதுகுவலி மற்றும் மேல் முதுகுவலி ஏற்படுவது இயல்பு. இது அதீத வலியை ஏற்படுத்தும். இந்த வலியில் இருந்து தப்பிக்க தைலம், மாத்திரை, மருந்து எடுத்துக்கொள்வார்கள், இருப்பினும் அவை தற்காலிகமாகவே வலியை குறைக்கும். மருந்து எதுவும் இல்லாமல், நடைபயிற்சி செய்வதன் மூலமே ஈஸியாக வலியை குறைக்கலாம்.

தாங்க முடியாத முதுகுவலியையும் குறைக்கும் சிம்பிளான உடற்பயிற்சி..!

உடற்பயிற்சி

Follow Us On

இன்றைக்கு பெரும்பாலானோர் அதீத முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இதற்கு, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மற்றும் நிற்பது, ஊட்டச்சத்து குறைபாடு, முதுகுத் தண்டு வலுவில்லமால் இருப்பது, உடல் பருமன், மன அழுத்தம், கனமான பொருட்களை தூக்குவது போன்றவை காரணங்களாக அமைகின்றன. அத்தகைய முதுகுவலியை குறைக்க சிலர் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், அவை அனைத்தும் தற்காலிமானவையே. இருப்பினும், எளிமையான ஒரு உடற்பயிற்சி எப்படியாப்பட்ட மூதுகுவலியையும் ஈஸியாக குறைத்துவிடும். அதுதான் நடைபயிற்சி. தினமும் 30-45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது முதுகுவலியை குறைப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, நடைபயிற்சி செய்வது முதுகுவலிக்கு எப்படி நிவாரணம் அளிக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

எண்டோர்பின்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது

உடற்பயிற்சி செய்யும் போது, ​​இயற்கையான வலி நிவாரணியான எண்டோர்பின் போன்ற ஹார்மோன்களை உடல் உற்பத்தி செய்கிறது. இந்த எண்டோர்பின்கள் வலியின் மீதான உணர்வைக் குறைத்து, மனநிலையையும் அதிகரிக்கச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல், உடல் மற்றும் மனநல நலன்களின் ஆரோக்கியத்திற்கு எண்டோர்பின்கள் முக்கியமானவை.

Also Read: பெட் ஷீட்டை எத்தனை நாளுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? இவ்வளவு விஷயம் இருக்கா?

தசைகளை பலப்படுத்துகிறது

நடைபயிற்சி செய்வதால், முதுகெலும்பை உறுதிப்படுத்தும் மைய, முதுகு மற்றும் கால் தசைகளை ஈடுபடுத்தப்படுகிறது. இது, முதுகெலும்பை தாங்கும் தசைகளை பலப்படுத்துகிறது. எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

பொதுவாக, சுறுசுறுப்பாக இருக்கும்போது, இரத்த நாளங்கள், தசைகள் உட்பட உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால், உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்கிறது. தசை திசுக்களில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுகின்றன.

நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது

உட்கார்ந்த வாழ்க்கை முறை அல்லது உடல் செயல்பாடு இல்லாதது போன்றவை தசைகள் மற்றும் மூட்டுகள் பலவீனமடைய செய்யும். தினமும் நடைப்பயிற்சி செய்வது கீழ் முதுகு மற்றும் உடலின் மற்ற இடங்களில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். 

கலோரிகளை எரிக்கிறது

நடைபயிற்சி உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது, ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் மற்றும் கீழ் முதுகில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய அதிக எடையைக் குறைக்கவும் உதவும்.

Also Read: Walking : 10000 ஸ்டெப்ஸ் நடந்தால்தான் உடலுக்கு நல்லதா? வாக்கிங் குறித்த முக்கிய விவரங்கள்!

மன அழுத்தத்தை குறைக்கிறது

நாள்பட்ட முதுகுவலி மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும், இது வலியை மேலும் அதிகரிக்க செய்யும். இருப்பினும், நடைபயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகின்றன. இது முதுகுவலியைப் போக்க மறைமுகமாக பங்களிக்கும்.

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version